06.031 இடர்கெடுமாறெண்ணுதியேல்

தலம் : ஆரூர்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஆறாம்திருமுறை
பண் : திருத்தாண்டகம்
நாடு : சோழநாடுகாவிரித்தென்கரை

திருச்சிற்றம்பலம்

இடர்கெடுமாறெண்ணுதியேல்நெஞ்சேநீவா
ஈண்டொளிசேர்கங்கைச்சடையாயென்றுஞ்
சுடரொளியாயுள்விளங்குசோதீயென்றுந்
தூநீறுசேர்ந்திலங்குதோளாவென்றுங்
கடல்விடமதுண்டிருண்டகண்டாவென்றுங்
கலைமான்மறியேந்துகையாவென்றும்
அடல்விடையாய்ஆரமுதேஆதீயென்றும்
ஆரூராவென்றென்றேஅலறாநில்லே. 1

செடியேறுதீவினைகள்தீரும்வண்ணஞ்
சிந்தித்தேநெஞ்சமேதிண்ணமாகப்
பொடியேறுதிருமேனியுடையாயென்றும்
புரந்தரன்றன்தோள்துணித்தபுனிதாவென்றும்
அடியேனையாளாகக்கொண்டாயென்றும்
அம்மானேஆரூரெம்மரசேயென்றுங்
கடிநாறுபொழிற்கச்சிக்கம்பாவென்றுங்
கற்பகமேயென்றென்றேகதறாநில்லே. 2

நிலைபெறுமாறெண்ணுதியேல்நெஞ்சேநீவா
நித்தலுமெம்பிரானுடையகோயில்புக்குப்
புலர்வதன்முன்னலகிட்டுமெழுக்குமிட்டுப்
பூமாலைபுனைந்தேத்திப்புகழ்ந்துபாடித்
தலையாரக்கும்பிட்டுக்கூத்துமாடிச்
சங்கராசயபோற்றிபோற்றியென்றும்
அலைபுனல்சேர்செஞ்சடையெம்ஆதீயென்றும்
ஆரூராவென்றென்றேஅலறாநில்லே. 3

புண்ணியமும்நன்னெறியுமாவதெல்லாம்
நெஞ்சமேஇதுகண்டாய்பொருந்தக்கேள்நீ
நுண்ணியவெண்ணூல்கிடந்தமார்பாவென்றும்
நுந்தாதவொண்சுடரேயென்றுநாளும்
விண்ணியங்குதேவர்களும்வேதம்நான்கும்
விரைமலர்மேல்நான்முகனும்மாலுங்கூடி
எண்ணரியதிருநாமமுடையாயென்றும்
எழிலாரூராவென்றேஏத்தாநில்லே. 4

இழைத்தநாள்எல்லைகடப்பதென்றால்
இரவினொடுநண்பகலுமேத்திவாழ்த்திப்
பிழைத்ததெலாம்பொறுத்தருள்செய்பெரியோயென்றும்
பிஞ்ஞகனேமைஞ்ஞவிலுங்கண்டாவென்றும்
அழைத்தலறிஅடியேனுன்னரணங்கண்டாய்
அணியாரூர்இடங்கொண்டஅழகாவென்றுங்
குழற்சடையெங்கோனென்றுங்கூறுநெஞ்சே
குற்றமில்லையென்மேல்நான்கூறினேனே. 5

நீப்பரியபல்பிறவிநீக்கும்வண்ணம்
நினைந்திருந்தேன்காண்நெஞ்சேநித்தமாகச்
சேப்பிரியாவெல்கொடியினானேயென்றுஞ்
சிவலோகநெறிதந்தசிவனேயென்றும்
பூப்பிரியாநான்முகனும்புள்ளின்மேலைப்
புண்டரிகக்கண்ணானும்போற்றியென்னத்
தீப்பிழம்பாய்நின்றவனேசெல்வமல்குந்
திருவாரூராவென்றேசிந்திநெஞ்சே. 6

பற்றிநின்றபாவங்கள்பாற்றவேண்டிற்
பரகதிக்குச்செல்வதொருபரிசுவேண்டிற்
சுற்றிநின்றசூழ்வினைகள்வீழ்க்கவேண்டிற்
சொல்லுகேன்கேள்நெஞ்சேதுஞ்சாவண்ணம்
உற்றவரும்உறுதுணையும்நீயேயென்றும்
உன்னையல்லால்ஒருதெய்வம்உள்கேனென்றும்
புற்றரவக்கச்சார்த்தபுனிதாவென்றும்
பொழிலாரூராவென்றேபோற்றாநில்லே. 7

மதிதருவன்நெஞ்சமேஉஞ்சுபோக
வழியாவதிதுகண்டாய்வானோர்க்கெல்லாம்
அதிபதியேஆரமுதேஆதியென்றும்
அம்மானேஆரூரெம்மையாவென்றுந்
துதிசெய்துதுன்றுமலர்கொண்டுதூவிச்
சூழும்வலஞ்செய்துதொண்டுபாடிக்
கதிர்மதிசேர்சென்னியனேகாலகாலா
கற்பகமேயென்றென்றேகதறாநில்லே. 8

பாசத்தைப்பற்றறுக்கலாகுநெஞ்சே
பரஞ்சோதிபண்டரங்காபாவநாசா
தேசத்தொளிவிளக்கேதேவதேவே
திருவாரூர்த்திருமூலட்டானாவென்றும்
நேசத்தைநீபெருக்கிநேர்நின்றுள்கி
நித்தலுஞ்சென்றடிமேல்வீழ்ந்துநின்று
ஏசற்றுநின்றிமையோரேறேவென்றும்
எம்பெருமானென்றென்றேஏத்தாநில்லே. 9

புலன்களைந்தால்ஆட்டுண்டுபோதுபோக்கிப்
புறம்புறமேதிரியாதேபோதுநெஞ்சே
சலங்கொள்சடைமுடியுடையதலைவாவென்றுந்
தக்கன்செய்பெருவேள்விதகர்த்தாயென்றும்
இலங்கையர்கோன்சிரநெரித்தஇறைவாவென்றும்
எழிலாரூரிடங்கொண்டஎந்தாயென்றும்
நலங்கொளடிஎன்றலைமேல்வைத்தாயென்றும்
நாடோறும்நவின்றேத்தாய்நன்மையாமே. 10

திருச்சிற்றம்பலம்