தலம் : ஆரூர்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஆறாம்திருமுறை
பண் : திருத்தாண்டகம்
நாடு : சோழநாடுகாவிரித்தென்கரை
திருச்சிற்றம்பலம்
கற்றவர்களுண்ணுங்கனியேபோற்றி
கழலடைந்தார்செல்லுங்கதியேபோற்றி
அற்றவர்கட்காரமுதமானாய்போற்றி
அல்லலறுத்தடியேனைஆண்டாய்போற்றி
மற்றொருவரொப்பில்லாமைந்தாபோற்றி
வானவர்கள்போற்றும்மருந்தேபோற்றி
செற்றவர்தம்புரமெரித்தசிவனேபோற்றி
திருமூலட்டானனேபோற்றிபோற்றி. 1
வங்கமலிகடல்நஞ்சமுண்டாய்போற்றி
மதயானைஈருரிவைபோர்த்தாய்போற்றி
கொங்கலரும்நறுங்கொன்றைத்தாராய்போற்றி
கொல்புலித்தோலாடைக்குழகாபோற்றி
அங்கணனேஅமரர்கள்தம்இறைவாபோற்றி
ஆலமரநீழலறஞ்சொன்னாய்போற்றி
செங்கனகத்தனிக்குன்றேசிவனேபோற்றி
திருமூலட்டானனேபோற்றிபோற்றி. 2
மலையான்மடந்தைமணாளாபோற்றி
மழவிடையாய்நின்பாதம்போற்றிபோற்றி
நிலையாகஎன்னெஞ்சில்நின்றாய்போற்றி
நெற்றிமேலொற்றைக்கண்ணுடையாய்போற்றி
இலையார்ந்தமூவிலைவேலேந்தீபோற்றி
ஏழ்கடலுமேழ்பொழிலுமானாய்போற்றி
சிலையாலன்றெயிலெரித்தசிவனேபோற்றி
திருமூலட்டானனேபோற்றிபோற்றி. 3
பொன்னியலும்மேனியனேபோற்றிபோற்றி
பூதப்படையுடையாய்போற்றிபோற்றி
மன்னியசீர்மறைநான்குமானாய்போற்றி
மறியேந்துகையானேபோற்றிபோற்றி
உன்னுமவர்க்குண்மையனேபோற்றிபோற்றி
உலகுக்கொருவனேபோற்றிபோற்றி
சென்னிமிசைவெண்பிறையாய்போற்றிபோற்றி
திருமூலட்டானனேபோற்றிபோற்றி. 4
நஞ்சுடையகண்டனேபோற்றிபோற்றி
நற்றவனேநின்பாதம்போற்றிபோற்றி
வெஞ்சுடரோன்பல்லிறுத்தவேந்தேபோற்றி
வெண்மதியங்கண்ணிவிகிர்தாபோற்றி
துஞ்சிருளிலாடலுகந்தாய்போற்றி
தூநீறுமெய்க்கணிந்தசோதீபோற்றி
செஞ்சடையாய்நின்பாதம்போற்றிபோற்றி
திருமூலட்டானனேபோற்றிபோற்றி. 5
சங்கரனேநின்பாதம்போற்றிபோற்றி
சதாசிவனேநின்பாதம்போற்றிபோற்றி
பொங்கரவாநின்பாதம்போற்றிபோற்றி
புண்ணியனேநின்பாதம்போற்றிபோற்றி
அங்கமலத்தயனோடுமாலுங்காணா
அனலுருவாநின்பாதம்போற்றிபோற்றி
செங்கமலத்திருப்பாதம்போற்றிபோற்றி
திருமூலட்டானனேபோற்றிபோற்றி. 6
வம்புலவுகொன்றைச்சடையாய்போற்றி
வான்பிறையும்வாளரவும்வைத்தாய்போற்றி
கொம்பனையநுண்ணிடையாள்கூறாபோற்றி
குரைகழலாற்கூற்றுதைத்தகோவேபோற்றி
நம்புமவர்க்கரும்பொருளேபோற்றிபோற்றி
நால்வேதமாறங்கமானாய்போற்றி
செம்பொனேமரகதமேமணியேபோற்றி
திருமூலட்டானனேபோற்றிபோற்றி. 7
உள்ளமாய்உள்ளத்தேநின்றாய்போற்றி
உகப்பார்மனத்தென்றும்நீங்காய்போற்றி
வள்ளலேபோற்றிமணாளாபோற்றி
வானவர்கோன்தோள்துணித்தமைந்தாபோற்றி
வெள்ளையேறேறும்விகிர்தாபோற்றி
மேலோர்க்குமேலோர்க்குமேலாய்போற்றி
தெள்ளுநீர்க்கங்கைச்சடையாய்போற்றி
திருமூலட்டானனேபோற்றிபோற்றி. 8
பூவார்ந்தசென்னிப்புனிதாபோற்றி
புத்தேளிர்போற்றும்பொருளேபோற்றி
தேவார்ந்ததேவர்க்குந்தேவேபோற்றி
திருமாலுக்காழியளித்தாய்போற்றி
சாவாமேகாத்தென்னையாண்டாய்போற்றி
சங்கொத்தநீற்றெஞ்சதுராபோற்றி
சேவார்ந்தவெல்கொடியாய்போற்றிபோற்றி
திருமூலட்டானனேபோற்றிபோற்றி. 9
பிரமன்றன்சிரமரிந்தபெரியோய்போற்றி
பெண்ணுருவோடாணுருவாய்நின்றாய்போற்றி
கரநான்கும்முக்கண்ணுமுடையாய்போற்றி
காதலிப்பார்க்காற்றஎளியாய்போற்றி
அருமந்ததேவர்க்கரசேபோற்றி
அன்றரக்கன்ஐந்நான்குதோளுந்தாளுஞ்
சிரம்நெரித்தசேவடியாய்போற்றிபோற்றி
திருமூலட்டானனேபோற்றிபோற்றி. 10
திருச்சிற்றம்பலம்