06.033 பொருங்கைமதக்கரியுரிவைப்

தலம் : ஆரூர்அரநெறி
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஆறாம்திருமுறை
பண் : திருத்தாண்டகம்
நாடு : சோழநாடுகாவிரித்தென்கரை
சிறப்பு: அரநெறிதிருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

பொருங்கைமதக்கரியுரிவைப்போர்வையானைப்
பூவணமும்வலஞ்சுழியும்பொருந்தினானைக்
கரும்புதருகட்டியையின்னமிர்தைத்தேனைக்
காண்பரியசெழுஞ்சுடரைக்கனகக்குன்றை
இருங்கனகமதிலாரூர்மூலட்டானத்
தெழுந்தருளியிருந்தானைஇமையோரேத்தும்
அருந்தவனைஅரநெறியிலப்பன்றன்னை
அடைந்தடியேன்அருவினைநோய்அறுத்தவாறே. 1

கற்பகமும்இருசுடருமாயினானைக்
காளத்திகயிலாயமலையுளானை
விற்பயிலும்மதனழியவிழித்தான்றன்னை
விசயனுக்குவேடுவனாய்நின்றான்றன்னைப்
பொற்பமரும்பொழிலாரூர்மூலட்டானம்
பொருந்தியவெம்பெருமானைப்பொருந்தார்சிந்தை
அற்புதனைஅரநெறியிலப்பன்றன்னை
அடைந்தடியேன்அருவினைநோய்அறுத்தவாறே. 2

பாதியொருபெண்முடிமேற்கங்கையானைப்
பாசூரும்பரங்குன்றும்மேயான்றன்னை
வேதியனைத்தன்னடியார்க்கெளியான்றன்னை
மெய்ஞ்ஞானவிளக்கானைவிரையேநாறும்
போதியலும்பொழிலாரூர்மூலட்டானம்
புற்றிடங்கொண்டிருந்தானைப்போற்றுவார்கள்
ஆதியனைஅரநெறியிலப்பன்றன்னை
அடைந்தடியேன்அருவினைநோய்அறுத்தவாறே. 3

நந்திபணிகொண்டருளும்நம்பன்றன்னை
நாகேச்சரமிடமாநண்ணினானைச்
சந்திமலரிட்டணிந்துவானோரேத்துந்
தத்துவனைச்சக்கரமாற்கீந்தான்றன்னை
இந்துநுழைபொழிலாரூர்மூலட்டானம்
இடங்கொண்டபெருமானைஇமையோர்போற்றும்
அந்தணனைஅரநெறியிலப்பன்றன்னை
அடைந்தடியேன்அருவினைநோய்அறுத்தவாறே. 4

சுடர்ப்பவளத்திருமேனிவெண்ணீற்றானைச்
சோதிலிங்கத்தூங்கானைமாடத்தானை
விடக்கிடுகாடிடமாகஉடையான்றன்னை
மிக்கரணமெரியூட்டவல்லான்றன்னை
மடற்குலவுபொழிலாரூர்மூலட்டானம்
மன்னியவெம்பெருமானைமதியார்வேள்வி
அடர்த்தவனைஅரநெறியிலப்பன்றன்னை
அடைந்தடியேன்அருவினைநோய்அறுத்தவாறே. 5

தாயவனைஎவ்வுயிர்க்குந்தன்னொப்பில்லாத்
தகுதில்லைநடம்பயிலுந்தலைவன்றன்னை
மாயவனும்மலரவனும்வானோரேத்த
மறிகடல்நஞ்சுண்டுகந்தமைந்தன்றன்னை
மேயவனைப்பொழிலாரூர்மூலட்டானம்
விரும்பியஎம்பெருமானையெல்லாம்முன்னே
ஆயவனைஅரநெறியிலப்பன்றன்னை
அடைந்தடியேன்அருவினைநோய்அறுத்தவாறே. 6

பொருளியல்நற்சொற்பதங்களாயினானைப்
புகலூரும்புறம்பயமும்மேயான்றன்னை
மருளியலுஞ்சிந்தையர்க்குமருந்துதன்னை
மறைக்காடுஞ்சாய்க்காடும்மன்னினானை
இருளியல்நற்பொழிலாரூர்மூலட்டானத்
தினிதமரும்பெருமானைஇமையோரேத்த
அருளியனைஅரநெறியிலப்பன்றன்னை
அடைந்தடியேன்அருவினைநோய்அறுத்தவாறே. 7

காலனைக்காலாற்காய்ந்தகடவுள்தன்னைக்
காரோணங்கழிப்பாலைமேயான்றன்னைப்
பாலனுக்குப்பாற்கடலன்றீந்தான்றன்னைப்
பணியுகந்தஅடியார்கட்கினியான்றன்னைச்
சேலுகளும்வயலாரூர்மூலட்டானஞ்
சேர்ந்திருந்தபெருமானைப்பவளமீன்ற
ஆலவனைஅரநெறியிலப்பன்றன்னை
அடைந்தடியேன்அருவினைநோய்அறுத்தவாறே. 8

ஒப்பொருவரில்லாதஒருவன்றன்னை
ஓத்தூரும்உறையூரும்மேவினானை
வைப்பவனைமாணிக்கச்சோதியானை
மாருதமுந்தீவெளிநீர்மண்ணானானை
*மெய்ப்பொருளாய்அடியேனதுள்ளேநின்ற
வினையிலியைத்திருமூலட்டானம்மேய
அப்பொன்னைஅரநெறியிலப்பன்றன்னை
அடைந்தடியேன்அருவினைநோய்அறுத்தவாறே.

*இச்செய்யுளின்பின்னிருஅடிகள்பிறபதிப்புகளில்
காணப்படவில்லை. 9

பகலவன்றன்பல்லுகுத்தபடிறன்றன்னைப்
பராய்த்துறைபைஞ்ஞீலியிடம்பாவித்தானை
இகலவனைஇராவணனைஇடர்செய்தானை
ஏத்தாதார்மனத்தகத்துள்இருளானானைப்
புகழ்நிலவுபொழிலாரூர்மூலட்டானம்
பொருந்தியவெம்பெருமானைப்போற்றார்சிந்தை
அகலவனைஅரநெறியிலப்பன்றன்னை
அடைந்தடியேன்அருவினைநோய்அறுத்தவாறே. 10

திருச்சிற்றம்பலம்