தலம் : ஆரூர்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஆறாம்திருமுறை
பண் : திருத்தாண்டகம்
நாடு : சோழநாடுகாவிரித்தென்கரை
திருச்சிற்றம்பலம்
ஒருவனாய்உலகேத்தநின்றநாளோ
ஓருருவேமூவுருவமானநாளோ
கருவனாய்க்காலனைமுன்காய்ந்தநாளோ
காமனையுங்கண்ணழலால்விழித்தநாளோ
மருவனாய்மண்ணும்விண்ணுந்தெரித்தநாளோ
மான்மறிக்கையேந்தியோர்மாதோர்பாகந்
திருவினாள்சேர்வதற்குமுன்னோபின்னோ
திருவாரூர்கோயிலாக்கொண்டநாளே. 1
மலையார்பொற்பாவையொடுமகிழ்ந்தநாளோ
வானவரைவலியமுதமூட்டியந்நாள்
நிலைபேறுபெறுவித்துநின்றநாளோ
நினைப்பரியதழற்பிழம்பாய்நிமிர்ந்தநாளோ
அலைசாமேஅலைகடல்நஞ்சுண்டநாளோ
அமரர்கணம்புடைசூழஇருந்தநாளோ
சிலையால்முப்புரமெரித்தமுன்னோபின்னோ
திருவாரூர்கோயிலாக்கொண்டநாளே. 2
பாடகஞ்சேர்மெல்லடிநற்பாவையாளும்
நீயும்போய்ப்பார்த்தனதுபலத்தைக்காண்பான்
வேடனாய்வில்வாங்கியெய்தநாளோ
விண்ணவர்க்குங்கண்ணவனாய்நின்றநாளோ
மாடமொடுமாளிகைகள்மல்குதில்லை
மணிதிகழும்அம்பலத்தேமன்னிக்கூத்தை
ஆடுவான்புகுவதற்குமுன்னோபின்னோ
அணியாரூர்கோயிலாக்கொண்டநாளே. 3
ஓங்கியுயர்ந்தெழுந்துநின்றநாளோ
ஓருகம்போல்ஏழுகமாய்நின்றநாளோ
தாங்கியசீர்த்தலையானவானோர்செய்த
தக்கன்றன்பெருவேள்விதகர்த்தநாளோ
நீங்கியநீர்த்தாமரையான்நெடுமாலோடு
நில்லாயெம்பெருமானேயென்றங்கேத்தி
வாங்கிமதிவைப்பதற்குமுன்னோபின்னோ
வளராரூர்கோயிலாக்கொண்டநாளே. 4
பாலனாய்வளர்ந்திலாப்பான்மையானே
பணிவார்கட்கங்கங்கேபற்றானானே
நீலமாமணிகண்டத்தெண்டோளானே
நெருநலையாய்இன்றாகிநாளையாகுஞ்
சீலமேசிவலோகநெறியேயாகுஞ்
சீர்மையேகூர்மையேகுணமேநல்ல
கோலம்நீகொள்வதற்குமுன்னோபின்னோ
குளிராரூர்கோயிலாக்கொண்டநாளே. 5
திறம்பலவும்வழிகாட்டிச்செய்கைகாட்டிச்
சிறியையாய்ப்பெரியையாய்நின்றநாளோ
மறம்பலவுமுடையாரைமயக்கந்தீர்த்து
மாமுனிவர்க்கருள்செய்தங்கிருந்தநாளோ
பிறங்கியசீர்ப்பிரமன்றன்தலைகையேந்திப்
பிச்சையேற்றுண்டுழன்றுநின்றநாளோ
அறம்பலவுமுரைப்பதற்குமுன்னோபின்னோ
அணியாரூர்கோயிலாக்கொண்டநாளே. 6
நிலந்தரத்துநீண்டுருவமானநாளோ
நிற்பனவும்நடப்பனவும்நீயேயாகிக்
கலந்துரைக்கக்கற்பகமாய்நின்றநாளோ
காரணத்தால்நாரணனைக்கற்பித்தன்று
வலஞ்சுருக்கிவல்லசுரர்மாண்டுவீழ
வாசுகியைவாய்மடுத்துவானோருய்யச்
சலந்தரனைக்கொல்வதற்குமுன்னோபின்னோ
தண்ணாரூர்கோயிலாக்கொண்டநாளே. 7
பாதத்தால்முயலகனைப்பாதுகாத்துப்
பாரகத்தேபரஞ்சுடராய்நின்றநாளோ
கீதத்தைமிகப்பாடும்அடியார்க்கென்றுங்
கேடிலாவானுலகங்கொடுத்தநாளோ
பூதத்தான்பொருநீலிபுனிதன்மேவிப்
பொய்யுரையாமறைநால்வர்விண்ணோர்க்கென்றும்
வேதத்தைவிரிப்பதற்குமுன்னோபின்னோ
விழவாரூர்கோயிலாக்கொண்டநாளே. 8
புகையெட்டும்போக்கெட்டும்புலன்களெட்டும்
பூதலங்களவையெட்டும்பொழில்களெட்டுங்
கலையெட்டுங்காப்பெட்டுங்காட்சியெட்டுங்
கழற்சேவடியடைந்தார்களைகணெட்டும்
நகையெட்டும்நாளெட்டும்நன்மையெட்டும்
நலஞ்சிறந்தார்மனத்தகத்துமலர்களெட்டுந்
திகையெட்டுந்தெரிப்பதற்குமுன்னோபின்னோ
திருவாரூர்கோயிலாக்கொண்டநாளே. 9
ஈசனாயுலகேழும்மலையுமாகி
இராவணனைஈடழித்திட்டிருந்தநாளோ
வாசமலர்மகிழ்தென்றலானநாளோ
மதயானையுரிபோர்த்துமகிழ்ந்தநாளோ
தாதுமலர்சண்டிக்குக்கொடுத்தநாளோ
சகரர்களைமறித்திட்டாட்கொண்டநாளோ
தேசமுமையறிவதற்குமுன்னோபின்னோ
திருவாரூர்கோயிலாக்கொண்டநாளே. 10
திருச்சிற்றம்பலம்