06.036 அலையார்கடல்நஞ்ச

தலம் : பழனம்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஆறாம்திருமுறை
பண் : திருத்தாண்டகம்
நாடு : சோழநாடுகாவிரிவடகரை

திருச்சிற்றம்பலம்

அலையார்கடல்நஞ்சமுண்டார்தாமே
அமரர்களுக்கருள்செய்யுமாதிதாமே
கொலையாயகூற்றமுதைத்தார்தாமே
கொல்வேங்கைத்தோலொன்றசைத்தார்தாமே
சிலையாற்புரமூன்றெரித்தார்தாமே
தீநோய்களைந்தென்னையாண்டார்தாமே
பலிதேர்ந்தழகாயபண்பர்தாமே
பழனநகரெம்பிரானார்தாமே. 1

வெள்ளமொருசடைமேலேற்றார்தாமே
மேலார்கண்மேலார்கண்மேலார்தாமே
கள்ளங்கடிந்தென்னையாண்டார்தாமே
கருத்துடையபூதப்படையார்தாமே
உள்ளத்துவகைதருவார்தாமே
உறுநோய்சிறுபிணிகள்தீர்ப்பார்தாமே
பள்ளப்பரவைநஞ்சுண்டார்தாமே
பழனநகரெம்பிரானார்தாமே. 2

இரவும்பகலுமாய்நின்றார்தாமே
எப்போதுமென்னெஞ்சத்துள்ளார்தாமே
அரவமரையிலசைத்தார்தாமே
அனலாடியங்கைமறித்தார்தாமே
குரவங்கமழுங்குற்றாலர்தாமே
கோலங்கள்மேன்மேலுகப்பார்தாமே
பரவுமடியார்க்குப்பாங்கர்தாமே
பழனநகரெம்பிரானார்தாமே. 3

மாறின்மதின்மூன்றுமெய்தார்தாமே
வரியரவங்கச்சாகஆர்த்தார்தாமே
நீறுசேர்திருமேனிநிமலர்தாமே
நெற்றிநெருப்புக்கண்வைத்தார்தாமே
ஏறுகொடுஞ்சூலக்கையார்தாமே
என்பாபரணமணிந்தார்தாமே
பாறுண்தலையிற்பலியார்தாமே
பழனநகரெம்பிரானார்தாமே. 4

சீரால்வணங்கப்படுவார்தாமே
திசைக்கெல்லாந்தேவாகிநின்றார்தாமே
ஆராவமுதமுமானார்தாமே
அளவில்பெருமையுடையார்தாமே
நீரார்நியமமுடையார்தாமே
நீள்வரைவில்லாகவளைத்தார்தாமே
பாரார்பரவப்படுவார்தாமே
பழனநகரெம்பிரானார்தாமே. 5

காலனுயிர்வௌவவல்லார்தாமே
கடிதோடும்வெள்ளைவிடையார்தாமே
கோலம்பலவுமுகப்பார்தாமே
கோள்நாகநாணாகப்பூண்டார்தாமே
நீலம்பொலிந்தமிடற்றார்தாமே
நீள்வரையினுச்சியிருப்பார்தாமே
பாலவிருத்தருமானார்தாமே
பழனநகரெம்பிரானார்தாமே. 6

ஏய்ந்தவுமைநங்கைபங்கர்தாமே
ஏழூழிக்கப்புறமாய்நின்றார்தாமே
ஆய்ந்துமலர்தூவநின்றார்தாமே
அளவில்பெருமையுடையார்தாமே
தேய்ந்தபிறைசடைமேல்வைத்தார்தாமே
தீவாயரவதனையார்த்தார்தாமே
பாய்ந்தபடர்கங்கையேற்றார்தாமே
பழனநகரெம்பிரானார்தாமே. 7

ஓராதார்உள்ளத்தில்நில்லார்தாமே
உள்ளூறுமன்பர்மனத்தார்தாமே
பேராதென்சிந்தையிருந்தார்தாமே
பிறர்க்கென்றுங்காட்சிக்கரியார்தாமே
ஊராருமூவுலகத்துள்ளார்தாமே
உலகைநடுங்காமற்காப்பார்தாமே
பாரார்முழவத்திடையார்தாமே
பழனநகரெம்பிரானார்தாமே. 8

நீண்டவர்க்கோர்நெருப்புருவமானார்தாமே
நேரிழையையொருபாகம்வைத்தார்தாமே
பூண்டரவைப்புலித்தோல்மேலார்த்தார்தாமே
பொன்னிறத்தவெள்ளச்சடையார்தாமே
ஆண்டுலகேழனைத்தினையும்வைத்தார்தாமே
அங்கங்கேசிவமாகிநின்றார்தாமே
பாண்டவரிற்பார்த்தனுக்குப்பரிந்தார்தாமே
பழனநகரெம்பிரானார்தாமே. 9

விடையேறிவேண்டுலகத்திருப்பார்தாமே
விரிகதிரோன்சோற்றுத்துறையார்தாமே
புடைசூழத்தேவர்குழாத்தார்தாமே
பூந்துருத்திநெய்த்தானமேயார்தாமே
அடைவேபுனல்சூழ்ஐயாற்றார்தாமே
அரக்கனையுமாற்றலழித்தார்தாமே
படையாப்பல்பூதமுடையார்தாமே
பழனநகரெம்பிரானார்தாமே. 10

திருச்சிற்றம்பலம்