06.038 ஓசைஒலியெலா

தலம் : ஐயாறு
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஆறாம்திருமுறை
பண் : திருத்தாண்டகம்
நாடு : சோழநாடுகாவிரிவடகரை

திருச்சிற்றம்பலம்

ஓசைஒலியெலாமானாய்நீயே
உலகுக்கொருவனாய்நின்றாய்நீயே
வாசமலரெலாமானாய்நீயே
மலையான்மருகனாய்நின்றாய்நீயே
பேசப்பெரிதுமினியாய்நீயே
பிரானாய்அடியென்மேல்வைத்தாய்நீயே
தேசவிளக்கெலாமானாய்நீயே
திருவையாறகலாதசெம்பொற்சோதீ. 1

நோக்கரியதிருமேனியுடையாய்நீயே
நோவாமேநோக்கருளவல்லாய்நீயே
காப்பரியஐம்புலனுங்காத்தாய்நீயே
காமனையுங்கண்ணழலாற்காய்ந்தாய்நீயே
ஆர்ப்பரியமாநாகமார்த்தாய்நீயே
அடியானென்றடியென்மேல்வைத்தாய்நீயே
தீர்ப்பரியவல்வினைநோய்தீர்ப்பாய்நீயே
திருவையாறகலாதசெம்பொற்சோதீ. 2

கனத்தகத்துக்கடுஞ்சுடராய்நின்றாய்நீயே
கடல்வரைவான்ஆகாயமானாய்நீயே
தனத்தகத்துத்தலைகலனாக்கொண்டாய்நீயே
சார்ந்தாரைத்தகைந்தாளவல்லாய்நீயே
மனத்திருந்தகருத்தறிந்துமுடிப்பாய்நீயே
மலர்ச்சேவடியென்மேல்வைத்தாய்நீயே
சினத்திருந்ததிருநீலகண்டன்நீயே
திருவையாறகலாதசெம்பொற்சோதீ. 3

வானுற்றமாமலைகளானாய்நீயே
வடகயிலைமன்னியிருந்தாய்நீயே
ஊனுற்றஒளிமழுவாட்படையாய்நீயே
ஒளிமதியோடரவுபுனல்வைத்தாய்நீயே
ஆனுற்றஐந்துமமர்ந்தாய்நீயே
அடியானென்றடியென்மேல்வைத்தாய்நீயே
தேனுற்றசொன்மடவாள்பங்கன்நீயே
திருவையாறகலாதசெம்பொற்சோதீ. 4

பெண்ணாண்பிறப்பிலியாய்நின்றாய்நீயே
பெரியார்கட்கெல்லாம்பெரியாய்நீயே
உண்ணாவருநஞ்சமுண்டாய்நீயே
ஊழிமுதல்வனாய்நின்றாய்நீயே
கண்ணாயுலகெலாங்காத்தாய்நீயே
கழற்சேவடியென்மேல்வைத்தாய்நீயே
திண்ணார்மழுவாட்படையாய்நீயே
திருவையாறகலாதசெம்பொற்சோதீ. 5

உற்றிருந்தஉணர்வெலாமானாய்நீயே
உற்றவர்க்கோர்சுற்றமாய்நின்றாய்நீயே
கற்றிருந்தகலைஞானமானாய்நீயே
கற்றவர்க்கோர்கற்பகமாய்நின்றாய்நீயே
பெற்றிருந்ததாயவளின்நல்லாய்நீயே
பிரானாயடியென்மேல்வைத்தாய்நீயே
செற்றிருந்ததிருநீலகண்டன்நீயே
திருவையாறகலாதசெம்பொற்சோதீ. 6

எல்லாவுலகமுமானாய்நீயே
ஏகம்பமேவியிருந்தாய்நீயே
நல்லாரைநன்மையறிவாய்நீயே
ஞானச்சுடர்விளக்காய்நின்றாய்நீயே
பொல்லாவினைகளறுப்பாய்நீயே
புகழ்ச்சேவடியென்மேல்வைத்தாய்நீயே
செல்வாயசெல்வந்தருவாய்நீயே
திருவையாறகலாதசெம்பொற்சோதீ. 7

ஆவினில்ஐந்துமமர்ந்தாய்நீயே
அளவில்பெருமையுடையாய்நீயே
பூவினில்நாற்றமாய்நின்றாய்நீயே
போர்க்கோலங்கொண்டெயிலெய்தாய்நீயே
நாவில்நடுவுரையாய்நின்றாய்நீயே
நண்ணியடியென்மேல்வைத்தாய்நீயே
தேவரறியாததேவன்நீயே
திருவையாறகலாதசெம்பொற்சோதீ. 8

எண்டிசைக்கும்ஒண்சுடராய்நின்றாய்நீயே
ஏகம்பமேயஇறைவன்நீயே
வண்டிசைக்கும்நறுங்கொன்றைத்தாராய்நீயே
வாராவுலகருளவல்லாய்நீயே
தொண்டிசைத்துன்னடிபரவநின்றாய்நீயே
தூமலர்ச்சேவடியென்மேல்வைத்தாய்நீயே
திண்சிலைக்கோர்சரங்கூட்டவல்லாய்நீயே
திருவையாறகலாதசெம்பொற்சோதீ. 9

விண்டார்புரமூன்றுமெய்தாய்நீயே
விண்ணவர்க்கும்மேலாகிநின்றாய்நீயே
கண்டாரைக்கொல்லும்நஞ்சுண்டாய்நீயே
காலங்கள்ஊழியாய்நின்றாய்நீயே
தொண்டாய்அடியேனைஆண்டாய்நீயே
தூமலர்ச்சேவடியென்மேல்வைத்தாய்நீயே
திண்டோள்விட்டெரியாடலுகந்தாய்நீயே
திருவையாறகலாதசெம்பொற்சோதீ. 10

ஆருமறியாஇடத்தாய்நீயே
ஆகாயந்தேரூரவல்லாய்நீயே
பேரும்பெரியஇலங்கைவேந்தன்
பெரியமுடிபத்திறுத்தாய்நீயே
ஊரும்புரமூன்றுமட்டாய்நீயே
ஒண்டாமரையானும்மாலுங்கூடித்
தேரும்அடியென்மேல்வைத்தாய்நீயே
திருவையாறகலாதசெம்பொற்சோதீ. 11

திருச்சிற்றம்பலம்