தலம் : மழபாடி
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஆறாம்திருமுறை
பண் : திருத்தாண்டகம்
நாடு : சோழநாடுகாவிரிவடகரை
திருச்சிற்றம்பலம்
நீறேறுதிருமேனியுடையான்கண்டாய்
நெற்றிமேல்ஒற்றைக்கண்நிறைந்தான்கண்டாய்
கூறாகஉமைபாகங்கொண்டான்கண்டாய்
கொடியவிடமுண்டிருண்டகண்டன்கண்டாய்
ஏறேறியெங்குந்திரிவான்கண்டாய்
ஏழுலகும்ஏழ்மலையுமானான்கண்டாய்
மாறானார்தம்மரணமட்டான்கண்டாய்
மழபாடிமன்னும்மணாளன்றானே. 1
கொக்கிறகுசென்னியுடையான்கண்டாய்
கொல்லைவிடையேறுங்கூத்தன்கண்டாய்
அக்கரைமேலாடலுடையான்கண்டாய்
அனலங்கையேந்தியஆதிகண்டாய்
அக்கோடரவமணிந்தான்கண்டாய்
அடியார்கட்காரமுதமானான்கண்டாய்
மற்றிருந்தகங்கைச்சடையான்கண்டாய்
மழபாடிமன்னும்மணாளன்றானே. 2
நெற்றித்தனிக்கண்ணுடையான்கண்டாய்
நேரிழையோர்பாகமாய்நின்றான்கண்டாய்
பற்றிப்பாம்பாட்டும்படிறன்கண்டாய்
பல்லூர்பலிதேர்பரமன்கண்டாய்
செற்றார்புரமூன்றுஞ்செற்றான்கண்டாய்
செழுமாமதிசென்னிவைத்தான்கண்டாய்
மற்றொருகுற்றமிலாதான்கண்டாய்
மழபாடிமன்னும்மணாளன்றானே. 3
அலையார்ந்தபுனற்கங்கைச்சடையான்கண்டாய்
அண்டத்துக்கப்பாலாய்நின்றான்கண்டாய்
கொலையானகூற்றங்குமைத்தான்கண்டாய்
கொல்வேங்கைத்தோலொன்றுடுத்தான்கண்டாய்
சிலையாற்றிரிபுரங்கள்செற்றான்கண்டாய்
செழுமாமதிசென்னிவைத்தான்கண்டாய்
மலையார்மடந்தைமணாளன்கண்டாய்
மழபாடிமன்னும்மணாளன்றானே. 4
உலந்தார்தம்அங்கமணிந்தான்கண்டாய்
உவகையோடின்னருள்கள்செய்தான்கண்டாய்
நலந்திகழுங்கொன்றைச்சடையான்கண்டாய்
நால்வேதமாறங்கமானான்கண்டாய்
உலந்தார்தலைகலனாக்கொண்டான்கண்டாய்
உம்பரார்தங்கள்பெருமான்கண்டாய்
மலர்ந்தார்திருவடியென்தலைமேல்வைத்த
மழபாடிமன்னும்மணாளன்றானே. 5
தாமரையான்தன்றலையைச்சாய்த்தான்கண்டாய்
தகவுடையார்நெஞ்சிருக்கைகொண்டான்கண்டாய்
பூமலரானேத்தும்புனிதன்கண்டாய்
புணர்ச்சிப்பொருளாகிநின்றான்கண்டாய்
ஏமருவுவெஞ்சிலையொன்றேந்திகண்டாய்
இருளார்ந்தகண்டத்திறைவன்கண்டாய்
மாமருவுங்கலைகையிலேந்திகண்டாய்
மழபாடிமன்னும்மணாளன்றானே. 6
நீராகிநெடுவரைகளானான்கண்டாய்
நிழலாகிநீள்விசும்புமானான்கண்டாய்
பாராகிப்பௌவமேழானான்கண்டாய்
பகலாகிவானாகிநின்றான்கண்டாய்
ஆரேனுந்தன்னடியார்க்கன்பன்கண்டாய்
அணுவாகிஆதியாய்நின்றான்கண்டாய்
வாரார்ந்தவனமுலையாள்பங்கன்கண்டாய்
மழபாடிமன்னும்மணாளன்றானே. 7
பொன்னியலுந்திருமேனியுடையான்கண்டாய்
பூங்கொன்றைத்தாரொன்றணிந்தான்கண்டாய்
மின்னியலும்வார்சடையெம்பெருமான்கண்டாய்
வேழத்தினுரிவிரும்பிப்போர்த்தான்கண்டாய்
தன்னியல்பார்மற்றொருவரில்லான்கண்டாய்
தாங்கரியசிவந்தானாய்நின்றான்கண்டாய்
மன்னியமங்கையோர்கூறன்கண்டாய்
மழபாடிமன்னும்மணாளன்றானே. 8
ஆலாலமுண்டுகந்தஆதிகண்டாய்
அடையலர்தம்புரமூன்றுமெய்தான்கண்டாய்
காலாலக்காலனையுங்காய்ந்தான்கண்டாய்
கண்ணப்பர்க்கருள்செய்தகாளைகண்டாய்
பாலாரும்மொழிமடவாள்பாகன்கண்டாய்
பசுவேறிப்பலிதிரியும்பண்பன்கண்டாய்
மாலாலுமறிவரியமைந்தன்கண்டாய்
மழபாடிமன்னும்மணாளன்றானே. 9
ஒருசுடராயுலகேழுமானான்கண்டாய்
ஓங்காரத்துட்பொருளாய்நின்றான்கண்டாய்
விரிசுடராய்விளங்கொளியாய்நின்றான்கண்டாய்
விழவொலியும்வேள்வொலியுமானான்கண்டாய்
இருசுடர்மீதோடாஇலங்கைக்கோனை
ஈடழியஇருபதுதோளிறுத்தான்கண்டாய்
மருசுடரின்மாணிக்கக்குன்றுகண்டாய்
மழபாடிமன்னும்மணாளன்றானே. 10
திருச்சிற்றம்பலம்