06.040 அலையடுத்தபெருங்கடல்நஞ்

தலம் : மழபாடி
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஆறாம்திருமுறை
பண் : திருத்தாண்டகம்
நாடு : சோழநாடுகாவிரிவடகரை

திருச்சிற்றம்பலம்

அலையடுத்தபெருங்கடல்நஞ்சமுதாவுண்டு
அமரர்கள்தந்தலைகாத்தஐயர்செம்பொற்
சிலையெடுத்துமாநாகநெருப்புக்கோத்துத்
திரிபுரங்கள்தீயிட்டசெல்வர்போலும்
நிலையடுத்தபசும்பொன்னால்முத்தால்நீண்ட
நிரைவயிரப்பலகையாற்குவையார்த்துற்ற
மலையடுத்தமழபாடிவயிரத்தூணே
என்றென்றேநானரற்றிநைகின்றேனே. 1

அறைகலந்தகுழல்மொந்தைவீணையாழும்
அந்தரத்திற்கந்தருவர்அமரரேத்த
மறைகலந்தமந்திரமும்நீருங்கொண்டு
வழிபட்டார்வானாளக்கொடுத்தியன்றே
கறைகலந்தபொழிற்கச்சிக்கம்பமேயக்
கனவயிரத்திரள்தூணேகலிசூழ்மாடம்
மறைகலந்தமழபாடிவயிரத்தூணே
என்றென்றேநானரற்றிநைகின்றேனே. 2

உரங்கொடுக்குமிருண்மெய்யர்மூர்க்கர்பொல்லா
ஊத்தைவாய்ச்சமணர்தமையுறவாக்கொண்ட
பரங்கெடுத்திங்கடியேனைஆண்டுகொண்ட
பவளத்தின்திரள்தூணேபசும்பொன்முத்தே
புரங்கெடுத்துப்பொல்லாதகாமனாகம்
பொடியாகவிழித்தருளிப்புவியோர்க்கென்றும்
வரங்கொடுக்கும்மழபாடிவயிரத்தூணே
என்றென்றேநானரற்றிநைகின்றேனே. 3

ஊனிகந்தூணுறிகையர்குண்டர்பொல்லா
ஊத்தைவாய்ச்சமணருறவாகக்கொண்டு
ஞானகஞ்சேர்ந்துள்ளவயிரத்தைநண்ணா
நாயேனைப்பொருளாகஆண்டுகொண்ட
மீனகஞ்சேர்வெள்ளநீர்விதியாற்சூடும்
வேந்தனேவிண்ணவர்தம்பெருமான்மேக
வானகஞ்சேர்மழபாடிவயிரத்தூணே
என்றென்றேநானரற்றிநைகின்றேனே. 4

சிரமேற்றநான்முகன்றன்றலையும்மற்றைத்
திருமால்தன்செழுந்தலையும்பொன்றச்சிந்தி
உரமேற்றஇரவிபல்தகர்த்துச்சோமன்
ஒளிர்கலைகள்படவுழக்கிஉயிரைநல்கி
நரையேற்றவிடையேறிநாகம்பூண்ட
நம்பியையேமறைநான்கும்ஓலமிட்டு
வரமேற்கும்மழபாடிவயிரத்தூணே
என்றென்றேநானரற்றிநைகின்றேனே. 5

சினந்திருத்துஞ்சிறுப்பெரியார்குண்டர்தங்கள்
செதுமதியார்தீவினைக்கேவிழுந்தேன்தேடிப்
புனந்திருத்தும்பொல்லாதபிண்டிபேணும்
பொறியிலியேன்றனைப்பொருளாவாண்டுகொண்டு
தனந்திருத்துமவர்திறத்தையொழியப்பாற்றித்
தயாமூலதன்மவழியெனக்குநல்கி
மனந்திருத்தும்மழபாடிவயிரத்தூணே
என்றென்றேநானரற்றிநைகின்றேனே. 6

சுழித்துணையாம்பிறவிவழித்துக்கம்நீக்குஞ்
சுருள்சடையெம்பெருமானேதூயதெண்ணீர்
இழிப்பரியபசுபாசப்பிறப்பைநீக்கும்
என்றுணையேஎன்னுடையபெம்மான்தம்மான்
பழிப்பரியதிருமாலும்அயனுங்காணாப்
பரிதியேசுருதிமுடிக்கணியாய்வாய்த்த
வழித்துணையாம்மழபாடிவயிரத்தூணே
என்றென்றேநானரற்றிநைகின்றேனே. 7

இப்பதிகத்தில் 8-ம்செய்யுள்சிதைந்துபோயிற்று. 8

இப்பதிகத்தில் 9-ம்செய்யுள்சிதைந்துபோயிற்று. 9

இப்பதிகத்தில் 10-ம்செய்யுள்சிதைந்துபோயிற்று. 10

திருச்சிற்றம்பலம்