06.042 மெய்த்தானத்தகம்படியுள்

தலம் : நெய்த்தானம்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஆறாம்திருமுறை
பண் : திருத்தாண்டகம்
நாடு : சோழநாடுகாவிரிவடகரை

திருச்சிற்றம்பலம்

மெய்த்தானத்தகம்படியுள்ஐவர்நின்று
வேண்டிற்றுக்குறைமுடித்துவினைக்குக்கூடாம்
இத்தானத்திருந்திங்ஙனுய்வானெண்ணும்
இதனையொழிஇயம்பக்கேள்ஏழைநெஞ்சே
மைத்தானநீள்நயனிபங்கன்வங்கம்
வருதிரைநீர்நஞ்சுண்டகண்டன்மேய
நெய்த்தானநன்னகரென்றேத்திநின்று
நினையுமாநினைந்தக்காலுய்யலாமே. 1

ஈண்டாவிரும்பிறவித்துறவாஆக்கை
இதுநீங்கலாம்விதியுண்டென்றுசொல்ல
வேண்டாவேநெஞ்சமேவிளம்பக்கேள்நீ
விண்ணவர்தம்பெருமானார்மண்ணிலென்னை
ஆண்டானன்றருவரையாற்புரமூன்றெய்த
அம்மானைஅரிஅயனும்காணாவண்ணம்
நீண்டானுறைதுறைநெய்த்தானமென்று
நினையுமாநினைந்தக்காலுய்யலாமே. 2

பரவிப்பலபலவுந்தேடியோடிப்
பாழாங்குரம்பையிடைக்கிடந்துவாளா
குரவிக்குடிவாழ்க்கைவாழவெண்ணிக்
குலைகைதவிர்நெஞ்சேகூறக்கேள்நீ
இரவிக்குலமுதலாவானோர்கூடி
யெண்ணிறந்தகோடியமரராயம்
நிரவிக்கரியவன்நெய்த்தானமென்று
நினையுமாநினைந்தக்காலுய்யலாமெ. 3

அலையார்வினைத்திறஞ்சேராக்கையுள்ளே
யகப்பட்டுளாசையெனும்பாசந்தன்னுள்
தலையாய்க்கடையாகும்வாழ்விலாழ்ந்து
தளர்ந்துமிகநெஞ்சமேஅஞ்சவேண்டா
இலையார்புனக்கொன்றையெறிநீர்த்திங்கள்
இருஞ்சடைமேல்வைத்துகந்தான்இமையோரேத்தும்
நிலையானுறைநிறைநெய்த்தானமென்று
நினையுமாநினைந்தக்காலுய்யலாமே. 4

தினைத்தனையோர்பொறையிலாவுயிர்போங்கூட்டைப்
பொருளென்றுமிகவுன்னிமதியாலிந்த
அனைத்துலகும்ஆளலாமென்றுபேசும்
ஆங்காரந்தவிர்நெஞ்சேயமரர்க்காக
முனைத்துவருமதில்மூன்றும்பொன்றஅன்று
முடுகியவெஞ்சிலைவளைத்துச்செந்தீமூழ்க
நினைத்தபெருங்கருணையன்நெய்த்தானமென்று
நினையுமாநினைந்தக்காலுய்யலாமே. 5

மிறைபடுமிவ்வுடல்வாழ்வைமெய்யென்றெண்ணி
வினையிலேகிடந்தழுந்திவியவேல்நெஞ்சே
குறைவுடையார்மனத்துளான்குமரன்தாதை
கூத்தாடுங்குணமுடையான்கொலைவேற்கையான்
அறைகழலுந்திருவடிமேற்சிலம்பும்ஆர்ப்ப
அவனிதலம்பெயரவருநட்டம்நின்ற
நிறைவுடையானிடமாம்நெய்த்தானமென்று
நினையுமாநினைந்தக்காலுய்யலாமே. 6

பேசப்பொருளலாப்பிறவிதன்னைப்
பெரிதென்றுன்சிறுமனத்தால்வேண்டியீண்டு
வாசக்குழல்மடவார்போகமென்னும்
வலைப்பட்டுவீழாதேவருகநெஞ்சே
தூசக்கரியுரித்தான்தூநீறாடித்
துதைந்திலங்குநூல்மார்பன்தொடரகில்லா
நீசர்க்கரியவன்நெய்த்தானமென்று
நினையுமாநினைந்தக்காலுய்யலாமே. 7

அஞ்சப்புலனிவற்றாலாட்டவாட்டுண்
டருநோய்க்கிடமாயவுடலின்தன்மை
தஞ்சமெனக்கருதித்தாழேல்நெஞ்சே
தாழக்கருதுதியேதன்னைச்சேரா
வஞ்சமனத்தவர்கள்காணவொண்ணா
மணிகண்டன்வானவர்தம்பிரானென்றேத்தும்
நெஞ்சர்க்கினியவன்நெய்த்தானமென்று
நினையுமாநினைந்தக்காலுய்யலாமே. 8

பொருந்தாதஉடலகத்திற்புக்கஆவி
போமாறறிந்தறிந்தேபுலைவாழ்வுன்னி
இருந்தாங்கிடர்ப்படநீவேண்டாநெஞ்சே
யிமையவர்தம்பெருமானன்றுமையாளஞ்சக்
கருந்தாள்மதகரியைவெருவச்சீறுங்
கண்ணுதல்கண்டமராடிகருதார்வேள்வி
நிரந்தரமாஇனிதுறைநெய்த்தானமென்று
நினையுமாநினைந்தக்காலுய்யலாமே. 9

உரித்தன்றுனக்கிவ்வுடலின்தன்மை
உண்மையுரைத்தேன்விரதமெல்லாந்
தரித்துந்தவமுயன்றும்வாழாநெஞ்சே
தம்மிடையிலில்லார்க்கொன்றல்லார்க்கன்னன்
எரித்தான்அனலுடையான்எண்டோளானே
யெம்பெருமானென்றேத்தாஇலங்கைக்கோனை
நெரித்தானைநெய்த்தானம்மேவினானை
நினையுமாநினைந்தக்காலுய்யலாமே. 10

திருச்சிற்றம்பலம்