06.043 நில்லாதநீர்சடைமேல்

தலம் : பூந்துருத்தி
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஆறாம்திருமுறை
பண் : திருத்தாண்டகம்
நாடு : சோழநாடுகாவிரித்தென்கரை

திருச்சிற்றம்பலம்

நில்லாதநீர்சடைமேல்நிற்பித்தானை
நினையாவென்நெஞ்சைநினைவித்தானைக்
கல்லாதனவெல்லாங்கற்பித்தானைக்
காணாதனவெல்லாங்காட்டினானைத்
சொல்லாதனவெல்லாஞ்சொல்லியென்னைத்
தொடர்ந்திங்கடியேனையாளாக்கொண்டு
பொல்லாவென்நோய்தீர்த்தபுனிதன்தன்னைப்
புண்ணியனைப்பூந்துருத்திக்கண்டேன்நானே. 1

குற்றாலங்கோகரணம்மேவினானைக்
கொடுங்கைக்கடுங்கூற்றைப்பாய்ந்தாந்தன்னை
உற்றாலநஞ்சுண்டொடுக்கினானை
யுணராவென்நெஞ்சையுணர்வித்தானைப்
பற்றாலின்கீழங்கிருந்தான்தன்னைப்
பண்ணார்ந்தவீணைபயின்றான்தன்னைப்
புற்றாடரவார்த்தபுனிதன்தன்னைப்
புண்ணியனைப்பூந்துருத்திக்கண்டேன்நானே. 2

எனக்கென்றும்இனியானையெம்மான்தன்னை
யெழிலாரும்ஏகம்பம்மேயான்தன்னை
மனக்கென்றும்வருவானைவஞ்சர்நெஞ்சில்
நில்லானைநின்றியூர்மேயான்தன்னைத்
தனக்கென்றும்அடியானையாளாக்கொண்ட
சங்கரனைச்சங்கவார்குழையான்தன்னைப்
புனக்கொன்றைத்தாரணிந்தபுனிதன்தன்னைப்
பொய்யிலியைப்பூந்துருத்திக்கண்டேன்நானே. 3

வெறியார்மலர்க்கொன்றைசூடினானை
வெள்ளானைவந்திறைஞ்சும்வெண்காட்டானை
அறியாதடியேனகப்பட்டேனை
அல்லற்கடல்நின்றுமேறவாங்கி
நெறிதானிதுவென்றுகாட்டினானை
நிச்சல்நலிபிணிகள்தீர்ப்பான்தன்னைப்
பொறியாடரவார்த்தபுனிதன்தன்னைப்
பொய்யிலியைப்பூந்துருத்திக்கண்டேன்நானே. 4

மிக்கானைவெண்ணீறுசண்ணித்தானை
விண்டார்புரமூன்றும்வேவநோக்கி
நக்கானைநான்மறைகள்பாடினானை
நல்லார்கள்பேணிப்பரவநின்ற
தக்கானைத்தண்டாமரைமேலண்ணல்
தலைகொண்டுமாத்திரைக்கண்உலகமெல்லாம்
புக்கானைப்புண்ணியனைப்புனிதன்தன்னைப்
பொய்யிலியைப்பூந்துருத்திக்கண்டேன்நானே. 5

ஆர்த்தானைவாசுகியைஅரைக்கோர்கச்சா
அசைத்தானைஅழகாயபொன்னார்மேனிப்
பூத்தானத்தான்முடியைப்பொருந்தாவண்ணம்
புணர்ந்தானைப்பூங்கணையானுடலம்வேவப்
பார்த்தானைப்பரிந்தானைப்பனிநீர்க்கங்கை
படர்சடைமேற்பயின்றானைப்பதைப்பயானை
போர்த்தானைப்புண்ணியனைப்புனிதன்தன்னைப்
பொய்யிலியைப்பூந்துருத்திக்கண்டேன்நானே. 6

எரித்தானைஎண்ணார்புரங்கள்மூன்றும்
இமைப்பளவிற்பொடியாகஎழிலார்கையால்
உரித்தானைமதகரியையுற்றுப்பற்றி
யுமையதனைக்கண்டஞ்சிநடுங்கக்கண்டு
சிரித்தானைச்சீரார்ந்தபூதஞ்சூழத்
திருச்சடைமேல்திங்களும்பாம்பும்நீரும்
புரித்தானைப்புண்ணியனைப்புனிதன்தன்னைப்
பொய்யிலியைப்பூந்துருத்திக்கண்டேன்நானே. 7

வைத்தானைவானோருலகமெல்லாம்
வந்திறைஞ்சிமலர்கொண்டுநின்றுபோற்றும்
வித்தானைவேண்டிற்றொன்றீவான்தன்னை
விண்ணவர்தம்பெருமானைவினைகள்போக
உய்த்தானையொலிகங்கைசடைமேற்றாங்கி
யொளித்தானையொருபாகத்துமையோடாங்கே
பொய்த்தானைப்புண்ணியனைப்புனிதன்தன்னைப்
பொய்யிலியைப்பூந்துருத்திக்கண்டேன்நானே. 8

ஆண்டானைவானோருலகமெல்லாம்
அந்நாளறியாததக்கன்வேள்வி
மீண்டாணைவிண்ணவர்களோடுங்கூடி
விரைமலர்மேல்நான்முகனும்மாலுந்தேட
நீண்டானைநெருப்புருவமானான்தன்னை
நிலையிலார்மும்மதிலும்வேவவில்லைப்
பூண்டானைப்புண்ணியனைப்புனிதன்தன்னைப்
பொய்யிலியைப்பூந்துருத்திக்கண்டேன்நானே. 9

மறுத்தானைமலைகோத்தங்கெடுத்தான்தன்னை
மணிமுடியோடிருபதுதோள்நெரியக்காலால்
இறுத்தானையெழுநரம்பினிசைகேட்டானை
யெண்டிசைக்கும்கண்ணானான்சிரமேலொன்றை
அறுத்தானையமரர்களுக்கமுதீந்தானை
யாவர்க்குந்தாங்கொணாநஞ்சமுண்டு
பொறுத்தானைப்புண்ணியனைப்புனிதன்தன்னைப்
பொய்யிலியைப்பூந்துருத்திக்கண்டேன்நானே. 10

திருச்சிற்றம்பலம்