06.044 மூத்தவனாய்உலகுக்கு

தலம் : சோற்றுத்துறை
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஆறாம்திருமுறை
பண் : திருத்தாண்டகம்
நாடு : சோழநாடுகாவிரித்தென்கரை

திருச்சிற்றம்பலம்

மூத்தவனாய்உலகுக்குமுந்தினானே
முறைமையால்எல்லாம்படைக்கின்றானே
ஏத்தவனாய்ஏழலகுமாயினானே
இன்பனாய்த்துன்பந்களைகின்றானே
காத்தவனாய்எல்லாந்தான்காண்கின்றானே
கடுவினையேன்தீவினையைக்கண்டுபோகத்
தீர்த்தவனேதிருச்சோற்றுத்துறையுளானே
திகழொளியேசிவனேயுன்னபயம்நானே. 1

தலையவனாய்உலகுக்கோர்தன்மையானே
தத்துவனாய்ச்சார்ந்தார்க்கின்னமுதானானே
நிலையனாய்நின்னொப்பாரில்லாதானே
நின்றுணராக்கூற்றத்தைச்சீறிப்பாய்ந்த
கொலையவனேகொல்யானைத்தோல்மேலிட்ட
கூற்றுவனேகொடிமதில்கள்மூன்றுமெய்த
சிலையவனேதிருச்சோற்றுத்துறையுளானே
திகழொளியேசிவனேயுன்னபயம்நானே. 2

முற்றாதபான்மதியஞ்சூடினானே
முளைத்தெழுந்தகற்பகத்தின்கொழுந்தொப்பானே
உற்றாரென்றொருவரையுமில்லாதானே
உலகோம்பும்ஒண்சுடரேயோதும்வேதங்
கற்றானேயெல்லாக்கலைஞானமுங்
கல்லாதேன்தீவினைநோய்கண்டுபோகச்
செற்றானேதிருச்சோற்றுத்துறையுளானே
திகழொளியேசிவனேயுன்னபயம்நானே. 3

கண்ணவனாய்உலகெல்லாங்காக்கின்றானே
காலங்களூழிகண்டிருக்கின்றானே
விண்ணவனாய்விண்ணவர்க்கும்அருள்செய்வானே
வேதனாய்வேதம்விரித்திட்டானே
எண்ணவனாய்யெண்ணார்புரங்கள்மூன்றும்
இமையாமுன்எரிகொளுவநோக்கிநக்க
திண்ணவனேதிருச்சோற்றுத்துறையுளானே
திகழொளியேசிவனேயுன்னபயம்நானே. 4

நம்பனேநான்மறைகளாயினானே
நடமாடவல்லானேஞானக்கூத்தா
கம்பனேகச்சிமாநகருளானே
கடிமதில்கள்மூன்றினையும்பொடியாஎய்த
அம்பனேஅளவிலாப்பெருமையானே
அடியார்கட்காரமுதேஆனேறேறுஞ்
செம்பொனேதிருச்சோற்றுத்துறையுளானே
திகழொளியேசிவனேயுன்னபயம்நானே. 5

ஆர்ந்தவனேயுலகெலாம்நீயேயாகி
யமைந்தவனேயளவிலாப்பெருமையானே
கூர்ந்தவனேகுற்றாலம்மேயகூத்தா
கொடுமூவிலையதோர்சூலமேந்திப்
பேர்ந்தவனேபிரளயங்களெல்லாமாய
பெம்மானென்றெப்போதும்பேசும்நெஞ்சிற்
சேர்ந்தவனேதிருச்சோற்றுத்துறையுளானே
திகழொளியேசிவனேயுன்னபயம்நானே. 6

வானவனாய்வண்மைமனத்தினானே
மாமணிசேர்வானோர்பெருமான்நீயே
கானவனாய்ஏனத்தின்பின்சென்றானே
கடியஅரணங்கள்மூன்றட்டானே
தானவனாய்த்தண்கயிலைமேவினானே
தன்னொப்பாரில்லாதமங்கைக்கென்றுந்
தேனவனேதிருச்சோற்றுத்துறையுளானே
திகழொளியேசிவனேயுன்னபயம்நானே. 7

தன்னவனாய்உலகெலாந்தானேயாகித்
தத்துவனாய்ச்சார்ந்தார்க்கின்னமுதானானே
என்னவனாயென்னிதயம்மேவினானே
யீசனேபாசவினைகள்தீர்க்கும்
மன்னவனேமலைமங்கைபாகமாக
வைத்தவனேவானோர்வணங்கும்பொன்னித்
தென்னவனேதிருச்சோற்றுத்துறையுளானே
திகழொளியேசிவனேயுன்னபயம்நானே. 8

எறிந்தானேஎண்டிசைக்குங்கண்ணானானே
யேழுலகமெல்லாமுன்னாய்நின்றானே
அறிந்தார்தாம்ஓரிருவரறியாவண்ணம்
ஆதியும்அந்தமுமாகியங்கே
பிறிந்தானேபிறரொருவரறியாவண்ணம்
பெம்மானென்றெப்போதும்ஏத்துநெஞ்சிற்
செறிந்தானேதிருச்சோற்றுத்துறையுளானே
திகழொளியேசிவனேயுன்னபயம்நானே. 9

மையனையகண்டத்தாய்மாலும்மற்றை
வானவரும்அறியாதவண்ணச்சூலக்
கையவனேகடியிலங்கைக்கோனையன்று
கால்விரலாற்கதிர்முடியுந்தோளுஞ்செற்ற
மெய்யவனேயடியார்கள்வேண்டிற்றீயும்
விண்ணவனேவிண்ணப்பங்கேட்டுநல்குஞ்
செய்யவனேதிருச்சோற்றுத்துறையுளானே
திகழொளியேசிவனேயுன்னபயம்நானே. 10

திருச்சிற்றம்பலம்