06.045 வண்டோங்குசெங்கமலங்

தலம் : ஒற்றியூர்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஆறாம்திருமுறை
பண் : திருத்தாண்டகம்
நாடு : தொண்டைநாடு

திருச்சிற்றம்பலம்

வண்டோங்குசெங்கமலங்கழுநீர்மல்கும்
மதமத்தஞ்சேர்சடைமேல்மதியஞ்சூடித்
திண்டோள்கள்ஆயிரமும்வீசிநின்று
திசைசேரநடமாடிச்சிவலோகனார்
உண்டார்னஞ்சுலகுக்கோருறுதிவேண்டி
ஒற்றியூர்மேயவொளிவண்ணனார்
கண்டேன்நான்கனவகத்திற்கண்டேற்கென்றன்
கடும்பிணியுஞ்சுடுஞ்தொழிலுங்கைவிட்டவே. 1

ஆகத்தோர்பாம்பசைத்துவெள்ளேறேறி
அணிகங்கைசெஞ்சடைமேலார்க்கச்சூடிப்
பாகத்தோர்பெண்ணுடையார்ஆணுமாவர்
பசுவேறியிழிதருமெம்பரமயோகி
காமத்தால்ஐங்கணையான்தன்னைவீழக்
கனலாஎரிவிழித்தகண்மூன்றினார்
ஓமத்தால்நான்மறைகள்ஓதல்ஓவா
ஒளிதிகழும்ஒற்றியூருறைகின்றாரே. 2

வெள்ளத்தைச்செஞ்சடைமேல்விரும்பிவைத்தீர்
வெண்மதியும்பாம்புமுடனேவைத்தீர்
கள்ளத்தைமனத்தகத்தேகரந்துவைத்தீர்
கண்டார்க்குப்பொல்லாதுகண்டீர்எல்லே
கொள்ளத்தான்இசைபாடிப்பலியுங்கொள்ளீர்
கோளரவுங்குளிர்மதியுங்கொடியுங்காட்டி
உள்ளத்தைநீர்கொண்டீர்ஒதல்ஒவா
ஒளிதிகழும்ஒற்றியூர்ருடையகோவே. 3

நரையார்ந்தவிடையேறிநீறுபூசி
நாகங்கச்சரைக்கார்த்தோர்தலைகையேந்தி
உரையாவந்தில்புகுந்துபலிதான்வேண்ட
எம்மடிகளும்மூர்தான்ஏதோஎன்ன
விரையாதேகேட்டியேல்வேற்கண்நல்லாய்
விடுங்கலங்கள்நெடுங்கடலுள்நின்றுதோன்றுந்
திரைமோதக்கரையேறிச்சங்கமூருந்
திருவொற்றியூரென்றார்தீயவாறே. 4

மத்தமாகளியானையுரிவைபோர்த்து
வானகத்தார்தானகத்தாராகிநின்று
பித்தர்தாம்போலங்கோர்பெருமைபேசிப்
பேதையரையச்சுறுத்திப்பெயரக்கண்டு
பத்தர்கள்தாம்பலருடனேகூடிப்பாடிப்
பயின்றிருக்குமூரேதோபணீயீரென்ன
ஒத்தமைந்தஉத்திரநாள்தீர்த்தமாக
ஒளிதிகழும்ஒற்றியூரென்கின்றாரே. 5

கடியவிடையேறிக்காளகண்டர்
கலையோடுமழுவாளோர்கையிலேந்தி
இடியபலிகொள்ளார்போவாரல்லர்
எல்லாந்தானிவ்வடிகள்யாரென்பாரே
வடிவுடையமங்கையுந்தாமுமெல்லாம்
வருவாரையெதிர்கண்டோம்மயிலாப்புள்ளே
செடிபடுவெண்டலையொள்றேந்திவந்து
திருவொற்றியூர்புக்கார்தீயவாறே. 6

வல்லாராய்வானவர்க்ளெல்லாங்கூடி
வணங்குவார்வாழ்த்துவார்வந்துநிற்பார்
எல்லேயெம்பெருமானைக்காணோமென்ன
எவ்வாற்றால்எவ்வகையாற்காணமாட்டார்
நல்லார்கள்நான்மறையோர்கூடிநேடி
நாமிருக்குமூர்பணியீரடிகேளென்ன
ஒல்லைதான்திரையேறியோதம்மீளும்
ஒளிதிகழும்ஒற்றியூரென்கின்றாரே. 7

நிலைப்பாடேநான்கண்டதேடீகேளாய்
நெருநலைநற்பகலிங்கோரடிகள்வந்து
கலைப்பாடுங்கண்மலருங்கலக்கநோக்கிக்
கலந்துபலியிடுவேனேங்குங்காணேன்
சலப்பாடேயினியொருநாட்காண்பேனாகில்
தன்னாகத்தென்னாகம்ஒடுங்கும்வண்ண
முலைப்பாடேபடத்தழுவிப்போகலொட்டேன்
ஒற்றியூருறைந்திங்கேதிரிவானையே. 8

மண்ணல்லைவிண்ணல்லைவலயமல்லை
மலையல்லைகடலல்லைவாயுவல்லை
எண்ணல்லையெழுத்தல்லையெரியுமல்லை
யிரவல்லைபகலல்லையாவுமல்லை
பெண்ணல்லையாணல்லைபேடுமல்லை
பிறிதல்லையானாயும்பெரியாய்நீயே
உண்ணல்லைநல்லார்க்குத்தீயையல்லை
உணர்வரியஒற்றியூருடையகோவே. 9

மருவுற்றமலர்க்குழலிமடவாளஞ்ச
மலைதுளங்கத்திசைநடுங்கச்செறுத்துநோக்கிச்
செருவுற்றவாளரக்கன்வலிதான்மாளத்
திருவடியின்விரலொன்றால்அலறவூன்றி
உருவொற்றியங்கிருவரோடிக்காண
ஓங்கினவவ்வொள்ளழலாரிங்கேவந்து
திருவொற்றியூர்நம்மூரென்றுபோனார்
செறிவளைகள்ஒன்றொன்றாச்சென்றவாறே. 10

திருச்சிற்றம்பலம்