தலம் : ஆவடுதுறை
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஆறாம்திருமுறை
பண் : திருத்தாண்டகம்
நாடு : சோழநாடுகாவிரித்தென்கரை
திருச்சிற்றம்பலம்
நம்பனைநால்வேதங்கரைகண்டானை
ஞானப்பெருங்கடலைநன்மைதன்னைக்
கம்பனைக்கல்லாலிருந்தான்தன்னைக்
கற்பகமாயடியார்கட்கருள்செய்வானைச்
செம்பொன்னைப்பவளத்தைத்திரளுமுத்தைத்
திங்களைஞாயிற்றைத்தீயைநீரை
அம்பொன்னைஆவடுதண்டுறையுள்மேய
அரனடியேஅடிநாயேன்அடைந்துய்ந்தேனே. 1
மின்னானைமின்னிடைச்சேருருமினானை
வெண்முகிலாய்எழுந்துமழைபொழிவான்தன்னைத்
தன்னானைத்தன்னொப்பாரில்லாதானைத்
தாயாகிப்பல்லுயிர்க்கோர்தந்தையாகி
என்னானையெந்தைபெருமான்தன்னை
இருநிலமும்அண்டமுமாய்ச்செக்கர்வானே
அன்னானைஆவடுதண்டுறையுள்மேய
அரனடியேஅடிநாயேன்அடைந்துய்ந்தேனே. 2
பத்தர்கள்சித்தத்தேபாவித்தானைப்
பவளக்கொழுந்தினைமாணிக்கத்தின்
தொத்தினைத்தூநெறியாய்நின்றான்தன்னைச்
சொல்லுவார்சொற்பொருளின்தோற்றமாகி
வித்தினைமுளைக்கிளையைவேரைச்சீரை
வினைவயத்தின்தன்சார்பைவெய்யதீர்க்கும்
அத்தனைஆவடுதண்டுறையுள்மேய
அரனடியேஅடிநாயேன்அடைந்துய்ந்தேனே. 3
பேணியநற்பிறைதவழ்செஞ்சடையினானைப்
பித்தராம்அடியார்க்குமுத்திகாட்டும்
ஏணியையிடர்க்கடலுட்சுழிக்கப்பட்டிங்
கிளைக்கின்றேற்கக்கரைக்கேயேறவாங்குந்
தோணியைத்தொண்டனேன்தூயசோதிச்
சுலாவெண்குழையானைச்சுடர்பொற்காசின்
ஆணியைஆவடுதண்டுறையுள்மேய
அரனடியேஅடிநாயேன்அடைந்துய்ந்தேனே. 4
ஒருமணியைஉலகுக்கோருறுதிதன்னை
உதயத்தினுச்சியைஉருமானானைப்
பருமணியைப்பாலோடஞ்சாடினானைப்
பவித்திரனைப்பசுபதியைப்பவளக்குன்றைத்
திருமணியைத்தித்திப்பைத்தேனதாகித்
தீங்கரும்பினின்சுவையைத்திகழுஞ்சோதி
அருமணியைஆவடுதண்டுறையுள்மேய
அரனடியேஅடிநாயேன்அடைந்துய்ந்தேனே. 5
ஏற்றானையெண்டோளுடையான்தன்னை
யெல்லிநடமாடவல்லான்தன்னைக்
கூற்றானைக்கூற்றமுதைத்தான்தன்னைக்
குரைகடல்வாய்நஞ்சுண்டகண்டன்தன்னை
நீற்றானைநீளரவொன்றார்த்தான்தன்னை
நீண்டசடைமுடிமேல்நீரார்கங்கை
ஆற்றானைஆவடுதண்டுறையுள்மேய
அரனடியேஅடிநாயேன்அடைந்துய்ந்தேனே. 6
கைம்மானமதகளிற்றைஉரித்தான்தன்னைக்
கடல்வரைவானாகாசமானான்தன்னைச்
செம்மானப்பவளத்தைத்திகழும்முத்தைத்
திங்களைஞாயிற்றைத்தீயானானை
எம்மானைஎன்மனமேகோயிலாக
இருந்தானைஎன்புருகும்அடியார்தங்கள்
அம்மானைஆவடுதண்டுறையுள்மேய
அரனடியேஅடிநாயேன்அடைந்துய்ந்தேனே. 7
மெய்யானைப்பொய்யரொடுவிரவாதானை
வெள்ளடையைத்தண்ணிழலைவெந்தீயேந்துங்
கையானைக்காமனுடல்வேவக்காய்ந்த
கண்ணானைக்கண்மூன்றுடையான்தன்னைப்
பையாடரவமதியுடனேவைத்த
சடையானைப்பாய்புலித்தோலுடையான்தன்னை
ஐயானைஆவடுதண்டுறையுள்மேய
அரனடியேஅடிநாயேன்அடைந்துய்ந்தேனே. 8
வேண்டாமைவேண்டுவதுமில்லான்தன்னை
விசயனைமுன்னசைவித்தவேடன்தன்னைத்
தூண்டாமைச்சுடர்விடுநற்சோதிதன்னைச்
சூலப்படையானைக்காலன்வாழ்நாள்
மாண்டோடவுதைசெய்தமைந்தன்தன்னை
மண்ணவரும்விண்ணவரும்வணங்கியேத்தும்
ஆண்டானைஆவடுதண்டுறையுள்மேய
அரனடியேஅடிநாயேன்அடைந்துய்ந்தேனே. 9
பந்தணவுமெல்விரலாள்பாகன்தன்னைப்
பாடலோடாடல்பயின்றான்தன்னைக்
கொந்தணவுநறுங்கொன்றைமாலையானைக்
கோலமாநீலமிடற்றான்தன்னைச்
செந்தமிழோடாரியனைச்சீரியானைத்
திருமார்பிற்புரிவெண்ணூல்திகழப்பூண்ட
அந்தணனைஆவடுதண்டுறையுள்மேய
அரனடியேஅடிநாயேன்அடைந்துய்ந்தேனே. 10
தரித்தானைத்தண்கடல்நஞ்சுண்டான்தன்னைத்
தக்கன்றன்பெருவேள்விதகர்த்தான்தன்னைப்
பிரித்தானைப்பிறைதவழ்செஞ்சடையினானைப்
பெருவலியால்மலையெடுத்தஅரக்கன்தன்னை
நெரித்தானைநேரிழையாள்பாகத்தானை
நீசனேன்உடலுறுநோயானதீர
அரித்தானைஆவடுதண்டுறையுள்மேய
அரனடியேஅடிநாயேன்அடைந்துய்ந்தேனே. 11
திருச்சிற்றம்பலம்