06.047 திருவேயென்செல்வமே

தலம் : ஆவடுதுறை
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஆறாம்திருமுறை
பண் : திருத்தாண்டகம்
நாடு : சோழநாடுகாவிரித்தென்கரை

திருச்சிற்றம்பலம்

திருவேயென்செல்வமேதேனேவானோர்
செழுஞ்சுடரேசெழுஞ்சுடர்நற்சோதிமிக்க
உருவேஎன்னுறவேஎன்ஊனேஊனின்
உள்ளமேஉள்ளத்தினுள்ளேநின்ற
கருவேயென்கற்பகமேகண்ணேகண்ணிற்
கருமணியேமணியாடுபாவாய்காவாய்
அருவாயவல்வினைநோய்அடையாவண்ணம்
ஆவடுதண்டுறையுறையும்அமரரேறே. 1

மாற்றேன்எழுத்தஞ்சும்என்றன்நாவின்
மறவேன்திருவருள்கள்வஞ்சநெஞ்சின்
ஏற்றேன்பிறதெய்வம்எண்ணாநாயேன்
எம்பெருமான்திருவடியேஎண்ணினல்லால்
மேற்றான்நீசெய்வனகள்செய்யக்கண்டு
வேதனைக்கேயிடங்கொடுத்துநாளுநாளும்
ஆற்றேன்அடியேனைஅஞ்சேலென்னாய்
ஆவடுதண்டுறையுறையும்அமரரேறே. 2

வரையார்மடமங்கைபங்காகங்கை
மணவாளாவார்சடையாய்நின்றன்நாமம்
உரையாஉயிர்போகப்பெறுவேனாகில்
உறுநோய்வந்தெத்தனையுமுற்றாலென்னே
கரையாநினைந்துருகிக்கண்ணீர்மல்கிக்
காதலித்துநின்கழலேயேத்துமன்பர்க்
கரையாஅடியேனைஅஞ்சேலென்னாய்
ஆவடுதண்டுறையுறையும்அமரரேறே. 3

சிலைத்தார்திரிபுரங்கள்தீயில்வேவச்
சிலைவளைவித்துமையவளையஞ்சநோக்கிச்
கலித்தாங்கிரும்பிடிமேற்கைவைத்தோடுங்
களிறுரித்தகங்காளாஎங்கள்கோவே
நிலத்தார்அவர்தமக்கேபொறையாய்நாளும்
நில்லாவுயிரோம்புநீதனேநான்
அலுத்தேன்அடியேனைஅஞ்சேலென்னாய்
ஆவடுதண்டுறையுறையும்அமரரேறே. 4

நறுமாமலர்கொய்துநீரின்மூழ்கி
நாடோறும்நின்கழலேயேத்திவாழ்த்தித்
துறவாததுன்பந்துறந்தேன்தன்னைத்
சூழுலகில்ஊழ்வினைவந்துற்றாலென்னெ
உறவாகிவானவர்கள்முற்றும்வேண்ட
ஒலிதிரைநீர்க்கடல்நஞ்சுண்டுய்யக்கொண்ட
அறவாஅடியேனைஅஞ்சேலென்னாய்
ஆவடுதண்டுறையுறையும்அமரரேறே. 5

கோன்நாரணன்அங்கத்தோள்மேற்கொண்டு
கொழுமலரான்தன்சிரத்தைக்கையிலேந்திக்
கானார்களிற்றுரிவைப்போர்வைமூடிக்
கங்காளவேடராய்எங்குஞ்செல்வீர்
நானார்உமக்கோர்வினைக்கேடனேன்
நல்வினையுந்தீவினையுமெல்லாம்முன்னே
ஆனாய்அடியேனைஅஞ்சேலென்னாய்
ஆவடுதண்டுறையுறையும்அமரரேறே. 6

உழையுரித்தமானுரிதோலாடையானே
உமையவள்தம்பெருமானேஇமையோர்ஏறே
கழையிறுத்தகருங்கடல்நஞ்சுண்டகண்டா
கயிலாயமலையானேஉன்பாலன்பர்
பிழைபொறுத்திஎன்பதுவும்பெரியோய்நின்றன்
கடனன்றேபேரருளுன்பாலதன்றே
அழையுறுத்துமாமயில்களாலுஞ்சோலை
ஆவடுதண்டுறையுறையும்அமரரேறே. 7

உலந்தார்தலைகலனொன்றேந்திவானோ
ருலகம்பலிதிரிவாய்உன்பாலன்பு
கலந்தார்மனங்கவருங்காதலானே
கனலாடுங்கையவனேஐயாமெய்யே
மலந்தாங்குயிர்ப்பிறவிமாயக்காய
மயக்குளேவிழுந்தழுந்திநாளும்நாளும்
அலந்தேன்அடியேனைஅஞ்சேலென்னாய்
ஆவடுதண்டுறையுறையும்அமரரேறே. 8

பல்லார்ந்தவெண்டலைகையிலேந்திப்
பசுவேறியூரூரன்பலிகொள்வானே
கல்லார்ந்தமலைமகளும்நீயுமெல்லாங்
கரிகாட்டிலாட்டுகந்தீர்கருதீராகில்
எல்லாருமெந்தன்னையிகழ்வர்போலும்
ஏழையமண்குண்டர்சாக்கியர்களொன்றுக்
கல்லாதார்திறத்தொழிந்தேன்அஞ்சேலென்னாய்
ஆவடுதண்டுறையுறையும்அமரரேறே. 9

துறந்தார்தந்தூநெறிக்கண்சென்றேனல்லேன்
துணைமாலைசூட்டநான்தூயேனல்லேன்
பிறந்தேன்நின்திருவருளேபேசினல்லாற்
பேசாதநாளெல்லாம்பிறவாநாளே
செறிந்தார்மதிலிலங்கைக்கோமான்தன்னைச்
செறுவரைக்கீழடர்த்தருளிச்செய்கையெல்லாம்
அறிந்தேன்அடியேனைஅஞ்சேலென்னாய்
ஆவடுதண்டுறையுறையும்அமரரேறே. 10

திருச்சிற்றம்பலம்