06.048 நல்லான்காண்நான்மறைக

தலம் : வலிவலம்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஆறாம்திருமுறை
பண் : திருத்தாண்டகம்
நாடு : சோழநாடுகாவிரித்தென்கரை

திருச்சிற்றம்பலம்

நல்லான்காண்நான்மறைகளாயினான்காண்
நம்பன்காண்நணுகாதார்புரமூன்றெய்த
வில்லான்காண்விண்ணவர்க்கும்மேலானான்காண்
மெல்லியலாள்பாகன்காண்வேதவேள்விச்
சொல்லான்காண்சுடர்மூன்றுமாயினான்காண்
தொண்டாகிப்பணிவார்க்குத்தொல்வான்ஈய
வல்லான்காண்வானவர்கள்வணங்கியேத்தும்
வலிவலத்தான்காணவனென்மனத்துளானே. 1

ஊனவன்காண்உடல்தனக்கோர்உயிரானான்காண்
உள்ளவன்காண்இல்லவன்காண்உமையாட்கென்றுந்
தேனவன்காண்திருவவன்காண்திசையானான்காண்
தீர்த்தன்காண்பார்த்தன்றன்பணியைக்கண்ட
கானவன்காண்கடலவன்காண்மலையானான்காண்
களியானையீருரிவைகதறப்போர்த்த
வானவன்காண்வானவர்கள்வணங்கியேத்தும்
வலிவலத்தான்காணவனென்மனத்துளானே. 2

ஏயவன்காண்எல்லார்க்குமியல்பானான்காண்
இன்பன்காண்துன்பங்களில்லாதான்காண்
தாயவன்காண்உலகுக்கோர்தன்னொப்பில்லாத்
தத்துவன்காண்உத்தமன்காண்தானேயெங்கும்
ஆயவன்காண்அண்டத்துக்கப்பாலான்காண்
அகங்குழைந்துமெய்யரும்பிஅழுவார்தங்கள்
வாயவன்காண்வானவர்கள்வணங்கியேத்தும்
வலிவலத்தான்காணவனென்மனத்துளானே. 3

உய்த்தவன்காண்உடல்தனக்கோர்உயிரானான்காண்
ஓங்காரத்தொருவன்காண்உலகுக்கெல்லாம்
வித்தவன்காண்விண்பொழியும்மழையானான்காண்
விளைவவன்காண்விரும்பாதார்நெஞ்சத்தென்றும்
பொய்த்தவன்காண்பொழிலேழுந்தாங்கினான்காண்
புனலோடுவளர்மதியும்பாம்புஞ்சென்னி
வைத்தவன்காண்வானவர்கள்வணங்கியேத்தும்
வலிவலத்தான்காணவனென்மனத்துளானே. 4

கூற்றவன்காண்குணமவன்காண்குறியானான்காண்
குற்றங்களனைத்துங்காண்கோலமாய
நீற்றவன்காண்நிழலவன்காண்நெருப்பானான்காண்
நிமிர்புன்சடைமுடிமேல்நீரார்கங்கை
ஏற்றவன்காண்ஏழலகுமாயினான்காண்
இமைப்பளவிற்காமனைமுன்பொடியாய்வீழ
மாற்றவன்காண்வானவர்கள்வணங்கியேத்தும்
வலிவலத்தான்காணவனென்மனத்துளானே. 5

நிலையவன்காண்தோற்றவன்காணிறையானான்காண்
நீரவன்காண்பாரவன்காண்ஊர்மூன்றெய்த
சிலையவன்காண்செய்யவாய்க்கரியகூந்தல்
தேன்மொழியைஒருபாகஞ்சேர்த்தினான்காண்
கலையவன்காண்காற்றவன்காண்காலன்வீழக்
கறுத்தவன்காண்கயிலாயமென்னுந்தெய்வ
மலையவன்காண்வானவர்கள்வணங்கியேத்தும்
வலிவலத்தான்காணவனென்மனத்துளானே. 6

பெண்ணவன்காண்ஆணவன்காண்பெரியோர்க்கென்றும்
பெரியவன்காண்அரியவன்காண்அயனானான்காண்
எண்ணவன்காண்எழுத்தவன்காண்இன்பக்கேள்வி
இசையவன்காண்இயலவன்காண்எல்லாங்காணுங்
கண்ணவன்காண்கருத்தவன்காண்கழிந்தோர்செல்லுங்
கதியவன்காண்மதியவன்காண்கடலேழ்சூழ்ந்த
மண்ணவன்காண்வானவர்கள்வணங்கியேத்தும்
வலிவலத்தான்காணவனென்மனத்துளானே. 7

முன்னவன்காண்பின்னவன்காண்மூவாமேனி
முதலவன்காண்முடியவன்காண்மூன்றுசோதி
அன்னவன்காண்அடியார்க்கும்அண்டத்தார்க்கும்
அணியவன்காண்சேயவன்காண்அளவில்சோதி
மின்னவன்காண்உருமவன்காண்திருமால்பாகம்
வேண்டினன்காணீண்டுபுனற்கங்கைக்கென்றும்
மன்னவன்காண்வானவர்கள்வணங்கியேத்தும்
வலிவலத்தான்காணவனென்மனத்துளானே. 8

நெதியவன்காண்யாவர்க்கும்நினையவொண்ணா
நீதியன்காண்வேதியன்காண்நினைவார்க்கென்றுங்
கதியவன்காண்காரவன்காண்கனலானான்காண்
பதியவன்காண்பழமவன்காண்இரதந்தான்காண்
பாம்போடுதிங்கள்பயிலவைத்த
மதியவன்காண்வானவர்கள்வணங்கியேத்தும்
வலிவலத்தான்காணவனென்மனத்துளானே. 9

பங்கயத்தின்மேலானும்பாலனாகி
உலகளந்தபடியானும்பரவிக்காணா
தங்கைவைத்தசென்னியராயளக்கமாட்டா
அனலவன்காண்அலைகடல்சூழிலங்கைவேந்தன்
கொங்கலர்த்தமுடிநெரியவிரலாலூன்றுங்
குழகன்காண்அழகன்காண்கோலமாய
மங்கையர்க்கோர்கூறன்காண்வானோரேத்தும்
வலிவலத்தான்காணவனென்மனத்துளானே. 10

திருச்சிற்றம்பலம்