06.049 சந்திரனுந்தண்புனலுஞ்

தலம் : கோகரணம்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஆறாம்திருமுறை
பண் : திருத்தாண்டகம்
நாடு : துளுவநாடு

திருச்சிற்றம்பலம்

சந்திரனுந்தண்புனலுஞ்சந்தித்தான்காண்
தாழ்சடையான்காண்சார்ந்தார்க்கமுதானான்காண்
அந்தரத்திலசுரர்புரம்மூன்றட்டான்காண்
அவ்வுருவிலவ்வுருவமாயினான்காண்
பந்தரத்துநான்மறைகள்பாடினான்காண்
பலபலவும்பாணிபயில்கின்றான்காண்
மந்திரத்துமறைப்பொருளுமாயினான்காண்
மாகடல்சூழ்கோகரணம்மன்னினானே. 1

தந்தவத்தன்தந்தலையைத்தாங்கினான்காண்
சாரணன்காண்சார்ந்தார்க்கின்னமுதானான்காண்
கெந்தத்தன்காண்கெடிலவீரட்டன்காண்
கேடிலிகாண்கெடுப்பார்மற்றில்லாதான்காண்
வெந்தொத்தநீறுமெய்பூசினான்காண்
வீரன்காண்வியன்கயிலைமேவினான்காண்
வந்தொத்தநெடுமாற்கும்அறிவொணான்காண்
மாகடல்சூழ்கோகரணம்மன்னினானே. 2

தன்னுருவம்யாவருக்குந்தாக்காதான்காண்
தாழ்சடையெம்பெருமான்காண்தக்கார்க்குள்ள
பொன்னுருவச்சோதிபுனலாடினான்காண்
புராணன்காண்பூதங்களாயினான்காண்
மின்னுருவநுண்ணிடையாள்பாகத்தான்காண்
வேழத்தினுரிவெருவப்போர்த்தான்தான்காண்
மன்னுருவாய்மாமறைகளோதினான்காண்
மாகடல்சூழ்கோகரணம்மன்னினானே. 3

ஆறேறுசெஞ்சடையெம்ஆரூரன்காண்
அன்பன்காண்அணிபழனம்மேயான்றான்காண்
நீறேறிநிழல்திகழும்மேனியான்காண்
நிருபன்காண்நிகரொன்றுமில்லாதான்காண்
கூறேறுகொடுமழுவாட்படையினான்காண்
கொக்கரையன்காண்குழுநற்பூதத்தான்காண்
மாறாயமதில்மூன்றும்மாய்வித்தான்காண்
மாகடல்சூழ்கோகரணம்மன்னினானே. 4

சென்றச்சிலைவாங்கிச்சேர்வித்தான்காண்
தீயம்பன்காண்திரிபுரங்கள்மூன்றும்
பொன்றப்பொடியாகநோக்கினான்காண்
பூதன்காண்பூதப்படையாளிகாண்
அன்றப்பொழுதேஅருள்செய்தான்காண்
அனலாடிகாண்அடியார்க்கமுதானான்காண்
மன்றல்மணங்கமழும்வார்சடையான்காண்
மாகடல்சூழ்கோகரணம்மன்னினானே. 5

பிறையோடுபெண்ணொருபால்வைத்தான்றான்காண்
பேரவன்காண்பிறப்பொன்றுமில்லாதான்காண்
கறையோடுமணிமிடற்றுக்காபாலிகாண்
கட்டங்கன்காண்கையிற்கபாலமேந்திப்
பறையோடுபல்கீதம்பாடினான்காண்
ஆடினான்காண்பாணியாகநின்று
மறையோடுமாகீதங்கேட்டான்றான்காண்
மாகடல்சூழ்கோகரணம்மன்னினானே. 6

மின்னளந்தமேல்முகட்டின்மேலுற்றான்காண்
விண்ணவர்தம்பெருமான்காண்மேவிலெங்கும்
முன்னளந்தமூவர்க்கும்முதலானான்காண்
மூவிலைவேற்சூலத்தெங்கோலத்தான்காண்
எண்ணளந்தென்சிந்தையேமேவினான்காண்
ஏவலன்காண்இமையோர்களேத்தநின்று
மண்ணளந்தமாலறியாமாயத்தான்காண்
மாகடல்சூழ்கோகரணம்மன்னினானே. 7

பின்னுசடைமேற்பிறைசூடினான்காண்
பேரருளன்காண்பிறப்பொன்றில்லாதான்காண்
முன்னியுலகுக்குமுன்னானான்காண்
மூவெயிலுஞ்செற்றுகந்தமுதல்வன்றான்காண்
இன்னவுருவென்றறிவொண்ணாதான்றான்காண்
ஏழ்கடலுமேழுலகுமாயினான்காண்
மன்னும்மடந்தையோர்பாகத்தான்காண்
மாகடல்சூழ்கோகரணம்மன்னினானே. 8

வெட்டவெடித்தார்க்கோர்வெவ்வழலன்காண்
வீரன்காண்வீரட்டம்மேவினான்காண்
பொட்டஅநங்கனையும்நோக்கினான்காண்
பூதன்காண்பூதப்படையினான்காண்
கட்டக்கடுவினைகள்காத்தாள்வான்காண்
கண்டன்காண்வண்டுண்டகொன்றையான்காண்
வட்டமதிப்பாகஞ்சூடினான்காண்
மாகடல்சூழ்கோகரணம்மன்னினானே. 9

கையாற்கயிலையெடுத்தான்தன்னைக்
கால்விரலால்தோள்நெரியவூன்றினான்காண்
மெய்யின்நரம்பிசையாற்கேட்பித்தாற்கு
மீண்டேயவற்கருள்கள்நல்கினான்காண்
பொய்யர்மனத்துப்புறம்பாவான்காண்
போர்ப்படையான்காண்பொருவாரில்லாதான்காண்
மைகொள்மணிமிடற்றுவார்சடையான்காண்
மாகடல்சூழ்கோகரணம்மன்னினானே. 10

திருச்சிற்றம்பலம்