06.053 மானேறுகரமுடைய

தலம் : வீழிமிழலை
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஆறாம்திருமுறை
பண் : திருத்தாண்டகம்
நாடு : சோழநாடுகாவிரித்தென்கரை

திருச்சிற்றம்பலம்

மானேறுகரமுடையவரதர்போலும்
மால்வரைகால்வளைவில்லாவளைத்தார்போலும்
கானேறுகரிகதறவுரித்தார்போலுங்
கட்டங்கங்கொடிதுடிகைக்கொண்டார்போலுந்
தேனேறுதிருஇதழித்தாரார்போலுந்
திருவீழிமிழலையமர்செல்வர்போலும்
ஆனேறதேறும்அழகர்போலும்
அடியேனைஆளுடையஅடிகள்தாமே. 1

சமரமிகுசலந்தரன்போர்வேண்டினானைச்
சக்கரத்தாற்பிளப்பித்தசதுரர்போலும்
நமனையொருகால்குறைத்தநாதர்போலும்
நாரணனைஇடப்பாகத்தடைத்தார்போலுங்
குமரனையும்மகனாகவுடையார்போலுங்
குளிர்வீழிமிழலையமர்குழகர்போலும்
அமரர்கள்பின்அமுதுணநஞ்சுண்டார்போலும்
அடியேனைஆளுடையஅடிகள்தாமே. 2

நீறணிந்ததிருமேனிநிமலர்போலும்
நேமிநெடுமாற்கருளிச்செய்தார்போலும்
ஏறணிந்தகொடியுடையெம்மிறைவர்போலும்
எயில்மூன்றுமெரிசரத்தாலெய்தார்போலும்
வேறணிந்தகோலமுடைவேடர்போலும்
வியன்வீழிமிழலையுறைவிகிர்தர்போலும்
ஆறணிந்தசடாமகுடத்தழகர்போலும்
அடியேனைஆளுடையஅடிகள்தாமே. 3

கைவேழமுகத்தவனைப்படைத்தார்போலுங்
கயாசுரனைஅவனாற்கொல்வித்தார்போலுஞ்
செய்வேள்வித்தக்கனைமுன்சிதைத்தார்போலுந்
திசைமுகன்றன்சிரமொன்றுசிதைத்தார்போலும்
மெய்வேள்விமூர்த்திதலையறுத்தார்போலும்
வியன்வீழிமிழலையிடங்கொண்டார்போலும்
ஐவேள்விஆறங்கமானார்போலும்
அடியேனைஆளுடையஅடிகள்தாமே. 4

துன்னத்தின்கோவணமொன்றுடையார்போலுஞ்
சுடர்மூன்றுஞ்சோதியுமாய்த்தூயார்போலும்
பொன்னொத்ததிருமேனிப்புனிதர்போலும்
பூதகணம்புடைசூழவருவார்போலும்
மின்னொத்தசெஞ்சடைவெண்பிறையார்போலும்
வியன்வீழிமிழலைசேர்விமலர்போலும்
அன்னத்தேர்அயன்முடிசேர்அடிகள்போலும்
அடியேனைஆளுடையஅடிகள்தாமே. 5

மாலாலும்அறிவரியவரதர்போலும்
மறவாதார்பிறப்பறுக்கவல்லார்போலும்
நாலாயமறைக்கிறைவரானார்போலும்
நாமவெழுத்தஞ்சாயநம்பர்போலும்
வேலார்கைவீரியைமுன்படைத்தார்போலும்
வியன்வீழிமிழலையமர்விகிர்தர்போலும்
ஆலாலம்மிடற்றடக்கிஅளித்தார்போலும்
அடியேனைஆளுடையஅடிகள்தாமே. 6

பஞ்சடுத்தமெல்விரலாள்பங்கர்போலும்
பைந்நாகம்அரைக்கசைத்தபரமர்போலும்
மஞ்சடுத்தமணிநீலகண்டர்போலும்
வடகயிலைமலையுடையமணாளர்போலுஞ்
செஞ்சடைக்கண்வெண்பிறைகொண்டணிந்தார்போலுந்
திருவீழிமிழலையமர்சிவனார்போலும்
அஞ்சடக்கும்அடியவர்கட்கணியார்போலும்
அடியேனைஆளுடையஅடிகள்தாமே. 7

குண்டரொடுபிரித்தெனையாட்கொண்டார்போலுங்
குடமூக்கிலிடமாக்கிக்கொண்டார்போலும்
புண்டரிகப்புதுமலராதனத்தார்போலும்
புள்ளரசைக்கொன்றுயிர்பின்கொடுத்தார்போலும்
வெண்டலையிற்பலிகொண்டவிகிர்தர்போலும்
வியன்வீழிமிழலைநகருடையார்போலும்
அண்டத்துப்புறத்தப்பாலானார்போலும்
அடியேனைஆளுடையஅடிகள்தாமே. 8

முத்தனையமுகிழ்முறுவலுடையார்போலும்
மொய்பவளக்கொடியனையசடையார்போலும்
எத்தனையும்பத்திசெய்வார்க்கினியார்போலும்
இருநான்குமூர்த்திகளுமானார்போலும்
மித்திரவச்சிரவணற்குவிருப்பர்போலும்
வியன்வீழிமிழலையமர்விகிர்தர்போலும்
அத்தனொடும்அம்மையெனக்கானார்போலும்
அடியேனைஆளுடையஅடிகள்தாமே. 9

கரியுரிசெய்துமைவெருவக்கண்டார்போலுங்
கங்கையையுஞ்செஞ்சடைமேற்கரந்தார்போலும்
எரியதொருகைதரித்தஇறைவர்போலும்
ஏனத்தின்கூனெயிறுபூண்டார்போலும்
விரிகதிரோரிருவரைமுன்வெகுண்டார்போலும்
வியன்வீழிமிழலையமர்விமலர்போலும்
அரிபிரமர்துதிசெயநின்றளித்தார்போலும்
அடியேனைஆளுடையஅடிகள்தாமே. 10

கயிலாயமலையெடுத்தான்கதறிவீழக்
கால்விரலால்அடர்த்தருளிச்செய்தார்போலுங்
குயிலாயமென்மொழியாள்குளிர்ந்துநோக்கக்
கூத்தாடவல்லகுழகர்போலும்
வெயிலாயசோதிவிளக்கானார்போலும்
வியன்வீழிமிழலையமர்விகிர்தர்போலும்
அயிலாயமூவிலைவேற்படையார்போலும்
அடியேனைஆளுடையஅடிகள்தாமே. 11

திருச்சிற்றம்பலம்