06.055 வேற்றாகிவிண்ணாகி

தலம் : கயிலாயம் (நொடித்தான்மலை)
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஆறாம்திருமுறை
பண் : திருத்தாண்டகம்
நாடு : வடநாடு
சிறப்பு: போற்றித்திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

வேற்றாகிவிண்ணாகிநின்றாய்போற்றி
மீளாமேஆளென்னைக்கொண்டாய்போற்றி
ஊற்றாகிஉள்ளேஒளித்தாய்போற்றி
ஓவாதசத்தத்தொலியேபோற்றி
ஆற்றாகியங்கேஅமர்ந்தாய்போற்றி
ஆறங்கம்நால்வேதமானாய்போற்றி
காற்றாகியெங்குங்கலந்தாய்போற்றி
கயிலைமலையானேபோற்றிபோற்றி. 1

பிச்சாடல்பேயோடுகந்தாய்போற்றி
பிறவியறுக்கும்பிரானேபோற்றி
வைச்சாடல்நன்றுமகிழ்ந்தாய்போற்றி
மருவியென்சிந்தைபுகுந்தாய்போற்றி
பொய்ச்சார்புரமூன்றுமெய்தாய்போற்றி
போகாதென்சிந்தைபுகுந்தாய்போற்றி
கச்சாகநாகமசைத்தாய்போற்றி
கயிலைமலையானேபோற்றிபோற்றி. 2

மருவார்புரமூன்றுமெய்தாய்போற்றி
மருவியென்சிந்தைபுகுந்தாய்போற்றி
உருவாகியென்னைப்படைத்தாய்போற்றி
உள்ளாவிவாங்கியொளித்தாய்போற்றி
திருவாகிநின்றதிறமேபோற்றி
தேசம்பரவப்படுவாய்போற்றி
கருவாகியோடுமுகிலேபோற்றி
கயிலைமலையானேபோற்றிபோற்றி. 3

வானத்தார்போற்றும்மருந்தேபோற்றி
வந்தென்றன்சிந்தைபுகுந்தாய்போற்றி
ஊனத்தைநீக்குமுடலேபோற்றி
ஓங்கிஅழலாய்நிமிர்ந்தாய்போற்றி
தேனத்தைவார்த்ததெளிவேபோற்றி
தேவர்க்குந்தேவனாய்நின்றாய்போற்றி
கானத்தீயாடலுகந்தாய்போற்றி
கயிலைமலையானேபோற்றிபோற்றி. 4

ஊராகிநின்றஉலகேபோற்றி
ஓங்கிஅழலாய்நிமிர்ந்தாய்போற்றி
பேராகியெங்கும்பரந்தாய்போற்றி
பெயராதென்சிந்தைபுகுந்தாய்போற்றி
நீராவியானநிழலேபோற்றி
நேர்வாரொருவரையுமில்லாய்போற்றி
காராகிநின்றமுகிலேபோற்றி
கயிலைமலையானேபோற்றிபோற்றி. 5

சில்லுருவாய்ச்சென்றுதிரண்டாய்போற்றி
தேவரறியாததேவேபோற்றி
புல்லுயிர்க்கும்பூட்சிபுணர்த்தாய்போற்றி
போகாதென்சிந்தைபுகுந்தாய்போற்றி
பல்லுயிராய்ப்பார்தோறும்நின்றாய்போற்றி
பற்றிஉலகைவிடாதாய்போற்றி
கல்லுயிராய்நின்றகனலேபோற்றி
கயிலைமலையானேபோற்றிபோற்றி. 6

பண்ணின்இசையாகிநின்றாய்போற்றி
பாவிப்பார்பாவமறுப்பாய்போற்றி
எண்ணுமெழுத்துஞ்சொல்லானாய்போற்றி
என்சிந்தைநீங்காஇறைவாபோற்றி
விண்ணும்நிலனுந்தீயானாய்போற்றி
மேலவர்க்கும்மேலாகிநின்றாய்போற்றி
கண்ணின்மணியாகிநின்றாய்போற்றி
கயிலைமலையானேபோற்றிபோற்றி. 7

இமையாதுயிராதிருந்தாய்போற்றி
என்சிந்தைநீங்காஇறைவாபோற்றி
உமைபாகமாகத்தணைத்தாய்போற்றி
ஊழியேழானஒருவாபோற்றி
அமையாஅருநஞ்சமார்ந்தாய்போற்றி
ஆதிபுராணனாய்நின்றாய்போற்றி
கமையாகிநின்றகனலேபோற்றி
கயிலைமலையானேபோற்றிபோற்றி. 8

மூவாய்பிறவாய்இறவாய்போற்றி
முன்னமேதோன்றிமுளைத்தாய்போற்றி
தேவாதிதேவர்தொழுந்தேவேபோற்றி
சென்றேறியெங்கும்பரந்தாய்போற்றி
ஆவாஅடியேனுக்கெல்லாம்போற்றி
அல்லல்நலியஅலந்தேன்போற்றி
காவாய்கனகத்திரளேபோற்றி
கயிலைமலையானேபோற்றிபோற்றி. 9

நெடியவிசும்போடுகண்ணேபோற்றி
நீளஅகலமுடையாய்போற்றி
அடியும்முடியும்இகலிபோற்றி
அங்கொன்றறியாமைநின்றாய்போற்றி
கொடியவன்கூற்றமுதைத்தாய்போற்றி
கோயிலாஎன்சிந்தைகொண்டாய்போற்றி
கடியஉருமொடுமின்னேபோற்றி
கயிலைமலையானேபோற்றிபோற்றி. 10

உண்ணாதுறங்காதிருந்தாய்போற்றி
ஓதாதேவேதமுணர்ந்தாய்போற்றி
எண்ணாஇலங்கைக்கோன்றன்னைப்போற்றி
இறைவிரலால்வைத்துகந்தஈசாபோற்றி
பண்ணாரிசையின்சொற்கேட்டாய்போற்றி
பண்டேயென்சிந்தைபுகுந்தாய்போற்றி
கண்ணாயுலகுக்குநின்றாய்போற்றி
கயிலைமலையானேபோற்றிபோற்றி. 11

திருச்சிற்றம்பலம்