தலம் : கயிலாயம் (நொடித்தான்மலை)
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஆறாம்திருமுறை
பண் : திருத்தாண்டகம்
நாடு : வடநாடு
சிறப்பு: போற்றித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
பொறையுடையபூமிநீரானாய்போற்றி
பூதப்படையாள்புனிதாபோற்றி
நிறையுடையநெஞ்சின்இடையாய்போற்றி
நீங்காதென்னுள்ளத்திருந்தாய்போற்றி
மறையுடையவேதம்விரித்தாய்போற்றி
வானோர்வணங்கப்படுவாய்போற்றி
கறையுடையகண்டமுடையாய்போற்றி
கயிலைமலையானேபோற்றிபோற்றி. 1
முன்பாகிநின்றமுதலேபோற்றி
மூவாதமேனிமுக்கண்ணாபோற்றி
அன்பாகிநின்றார்க்கணியாய்போற்றி
ஆறேறுசென்னிச்சடையாய்போற்றி
என்பாகவெங்குமணிந்தாய்போற்றி
என்சிந்தைநீங்காஇறைவாபோற்றி
கண்பாவிநின்றகனலேபோற்றி
கயிலைமலையானேபோற்றிபோற்றி. 2
மாலையெழுந்தமதியேபோற்றி
மன்னியென்சிந்தையிருந்தாய்போற்றி
மேலைவினைகளறுப்பாய்போற்றி
மேலாடுதிங்கள்முடியாய்போற்றி
ஆலைக்கரும்பின்தெளிவேபோற்றி
அடியார்கட்காரமுதமானாய்போற்றி
காலைமுளைத்தகதிரேபோற்றி
கயிலைமலையானேபோற்றிபோற்றி. 3
உடலின்வினைகளறுப்பாய்போற்றி
ஒள்ளெரிவீசும்பிரானேபோற்றி
படருஞ்சடைமேல்மதியாய்போற்றி
பல்கணக்கூத்தப்பிரானேபோற்றி
சுடரிற்றிகழ்கின்றசோதிபோற்றி
தோன்றியென்னுள்ளத்திருந்தாய்போற்றி
கடலிலொளியாயமுத்தேபோற்றி
கயிலைமலையானேபோற்றிபோற்றி. 4
மைசேர்ந்தகண்டமுடையாய்போற்றி
மாலுக்கும்ஓராழிஈந்தாய்போற்றி
பொய்சேர்ந்தசிந்தைபுகாதாய்போற்றி
போகாதென்னுள்ளத்திருந்தாய்போற்றி
மெய்சேரப்பால்வெண்ணீறாடிபோற்றி
மிக்கார்களேத்தும்விளக்கேபோற்றி
கைசேர்அனலேந்தியாடீபோற்றி
கயிலைமலையானேபோற்றிபோற்றி. 5
ஆறேறுசென்னிமுடியாய்போற்றி
அடியார்கட்காரமுதாய்நின்றாய்போற்றி
நீறேறுமேனியுடையாய்போற்றி
நீங்காதென்னுள்ளத்திருந்தாய்போற்றி
கூறேறுமங்கைமழுவாபோற்றி
கொள்ளுங்கிழமையேழானாய்போற்றி
காறேறுகண்டமிடற்றாய்போற்றி
கயிலைமலையானேபோற்றிபோற்றி. 6
அண்டமேழன்றுகடந்தாய்போற்றி
ஆதிபுராணனாய்நின்றாய்போற்றி
பண்டைவினைகளறுப்பாய்போற்றி
பாரோர்விண்ணேத்தப்படுவாய்போற்றி
தொண்டர்பரவுமிடத்தாய்போற்றி
தொழில்நோக்கியாளுஞ்சுடரேபோற்றி
கண்டங்கறுக்கவும்வல்லாய்போற்றி
கயிலைமலையானேபோற்றிபோற்றி. 7
பெருகியலைக்கின்றஆறேபோற்றி
பேராநோய்பேரவிடுப்பாய்போற்றி
உருகிநினைவார்தம்முள்ளாய்போற்றி
ஊனந்தவிர்க்கும்பிரானேபோற்றி
அருகிமிளிர்கின்றபொன்னேபோற்றி
ஆருமிகழப்படாதாய்போற்றி
கருகிப்பொழிந்தோடுநீரேபோற்றி
கயிலைமலையானேபோற்றிபோற்றி. 8
செய்யமலர்மேலான்கண்ணன்போற்றி
தேடியுணராமைநின்றாய்போற்றி
பொய்யாநஞ்சுண்டபொறையேபோற்றி
பொருளாகஎன்னையாட்கொண்டாய்போற்றி
மெய்யாகஆனஞ்சுகந்தாய்போற்றி
மிக்கார்களேத்துங்குணத்தாய்போற்றி
கையானைமெய்த்தோலுரித்தாய்போற்றி
கயிலைமலையானேபோற்றிபோற்றி. 9
மேல்வைத்தவானோர்பெருமான்போற்றி
மேலாடுபுரமூன்றுமெய்தாய்போற்றி
சீலத்தான்தென்னிலங்கைமன்னன்போற்றி
சிலையெடுக்கவாயலறவைத்தாய்போற்றி
கோலத்தாற்குறைவில்லான்றன்னையன்று
கொடிதாகக்காய்ந்தகுழகாபோற்றி
காலத்தாற்காலனையுங்காய்ந்தாய்போற்றி
கயிலைமலையானேபோற்றிபோற்றி. 10
திருச்சிற்றம்பலம்