தலம் : கயிலாயம் (நொடித்தான்மலை)
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஆறாம்திருமுறை
பண் : திருத்தாண்டகம்
நாடு : வடநாடு
சிறப்பு: போற்றித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
பாட்டானநல்லதொடையாய்போற்றி
பரிசையறியாமைநின்றாய்போற்றி
சூட்டானதிங்கள்முடியாய்போற்றி
தூமாலைமத்தமணிந்தாய்போற்றி
ஆட்டானதஞ்சுமமர்ந்தாய்போற்றி
அடங்கார்புரமெரியநக்காய்போற்றி
காட்டானைமெய்த்தோலுரித்தாய்போற்றி
கயிலைமலையானேபோற்றிபோற்றி. 1
அதிராவினைகளறுப்பாய்போற்றி
ஆலநிழற்கீழ்அமர்ந்தாய்போற்றி
சதுராசதுரக்குழையாய்போற்றி
சாம்பர்மெய்பூசுந்தலைவாபோற்றி
எதிராஉலகமமைப்பாய்போற்றி
என்றுமீளாவருள்செய்வாய்போற்றி
கதிரார்கதிருக்கோர்கண்ணேபோற்றி
கயிலைமலையானேபோற்றிபோற்றி. 2
செய்யாய்கரியாய்வெளியாய்போற்றி
செல்லாதசெல்வமுடையாய்போற்றி
ஐயாய்பெரியாய்சிறியாய்போற்றி
ஆகாசவண்ணமுடியாய்போற்றி
வெய்யாய்தணியாயணியாய்போற்றி
வேளாதவேள்வியுடையாய்போற்றி
கையார்தழலார்விடங்காபோற்றி
கயிலைமலையானேபோற்றிபோற்றி. 3
ஆட்சியுலகையுடையாய்போற்றி
அடியார்க்கமுதெலாம்ஈவாய்போற்றி
சூட்சிசிறிதுமிலாதாய்போற்றி
சூழ்ந்தகடல்நஞ்சமுண்டாய்போற்றி
மாட்சிபெரிதுமுடையாய்போற்றி
மன்னியென்சிந்தைமகிழ்ந்தாய்போற்றி
காட்சிபெரிதுமரியாய்போற்றி
கயிலைமலையானேபோற்றிபோற்றி. 4
முன்னியாநின்றமுதல்வாபோற்றி
மூவாதமேனியுடையாய்போற்றி
என்னியாயெந்தைபிரானேபோற்றி
ஏழினிசையேயுகப்பாய்போற்றி
மன்னியமங்கைமணாளாபோற்றி
மந்திரமுந்தந்திரமுமானாய்போற்றி
கன்னியார்கங்கைத்தலைவாபோற்றி
கயிலைமலையானேபோற்றிபோற்றி. 5
உரியாய்உலகினுக்கெல்லாம்போற்றி
உணர்வென்னுமூர்வதுடையாய்போற்றி
எரியாயதெய்வச்சுடரேபோற்றி
ஏசுமாமுண்டியுடையாய்போற்றி
அரியாய்அமரர்கட்கெல்லாம்போற்றி
அறிவேஅடக்கமுடையாய்போற்றி
கரியானுக்காழியன்றீந்தாய்போற்றி
கயிலைமலையானேபோற்றிபோற்றி. 6
எண்மேலும்எண்ணமுடையாய்போற்றி
ஏறரியவேறுங்குணத்தாய்போற்றி
பண்மேலேபாவித்திருந்தாய்போற்றி
பண்ணொடுயாழ்வீணைபயின்றாய்போற்றி
விண்மேலுமேலும்நிமிர்ந்தாய்போற்றி
மேலார்கண்மேலார்கண்மேலாய்போற்றி
கண்மேலுங்கண்ணொன்றுடையாய்போற்றி
கயிலைமலையானேபோற்றிபோற்றி. 7
முடியார்சடையின்மதியாய்போற்றி
முழுநீறுசண்ணித்தமூர்த்திபோற்றி
துடியாரிடையுமையாள்பங்காபோற்றி
சோதித்தார்காணாமைநின்றாய்போற்றி
அடியாரடிமைஅறிவாய்போற்றி
அமரர்பதியாளவைத்தாய்போற்றி
கடியார்புரமூன்றுமெய்தாய்போற்றி
கயிலைமலையானேபோற்றிபோற்றி. 8
போற்றிசைத்துன்னடிபரவநின்றாய்போற்றி
புண்ணியனேநண்ணலரியாய்போற்றி
ஏற்றிசைக்கும்வான்மேலிருந்தாய்போற்றி
எண்ணாயிரநூறுபேராய்போற்றி
நாற்றிசைக்கும்விளக்காயநாதாபோற்றி
நான்முகற்கும்மாற்குமரியாய்போற்றி
காற்றிசைக்குந்திசைக்கெல்லாம்வித்தேபோற்றி
கயிலைமலையானேபோற்றிபோற்றி. 9
இப்பதிகத்தில் 10-ம்செய்யுள்சிதைந்துபோயிற்று. 10
திருச்சிற்றம்பலம்