06.058 மண்ணளந்தமணிவண்ணர்

தலம் : வலம்புரம்
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஆறாம்திருமுறை
பண் : திருத்தாண்டகம்
நாடு : சோழநாடுகாவிரித்தென்கரை

திருச்சிற்றம்பலம்

மண்ணளந்தமணிவண்ணர்தாமும்மற்றை
மறையவனும்வானவருஞ்சூழநின்று
கண்மலிந்ததிருநெற்றியுடையாரொற்றைக்
கதநாகங்கையுடையார்காணீரன்றே
பண்மலிந்தமொழியவருமியானுமெல்லாம்
பணிந்திறைஞ்சித்தம்முடையபின்பின்செல்ல
மண்மலிந்தவயல்புடைசூழ்மாடவீதி
வலம்புரமேபுக்கங்கேமன்னினாரே. 1

சிலைநவின்றதொருகணையாற்புரமூன்றெய்த
தீவண்ணர்சிறந்திமையோர்இறைஞ்சியேத்தக்
கொலைநவின்றகளியானையுரிவைபோர்த்துக்
கூத்தாடித்திரிதருமக்கூத்தர்நல்ல
கலைநவின்றமறையவர்கள்காணக்காணக்
கடுவிடைமேற்பாரிடங்கள்சூழக்காதல்
மலைமகளுங்கங்கையுந்தாமுமெல்லாம்
வலம்புரமேபுக்கங்கேமன்னினாரே. 2

தீக்கூருந்திருமேனியொருபால்மற்றை
யொருபாலும்அரியுருவந்திகழ்ந்தசெல்வர்
ஆக்கூரில்தான்தோன்றிபுகுவார்போல
அருவினையேன்செல்வதுமேயப்பாலெங்கும்
நோக்காரொருவிடத்துநூலுந்தோலுந்
துதைந்திலங்குந்திருமேனிவெண்ணீறாடி
வாக்கால்மறைவிரித்துமாயம்பேசி
வலம்புரமேபுக்கங்கேமன்னினாரே. 3

மூவாதமூக்கப்பாம்பரையிற்சாத்தி
மூவர்உருவாயமுதல்வரிந்நாள்
கோவாதஎரிகணையைச்சிலைமேற்கோத்த
குழகனார்குளிர்கொன்றைசூடியிங்கே
போவாரைக்கண்டடியேன்பின்பின்செல்லப்
புறக்கணித்துத்தம்முடையபூதஞ்சூழ
வாவாவெனவுரைத்துமாயம்பேசி
வலம்புரமேபுக்கங்கேமன்னினாரே. 4

அனலொருகையதுவேந்திஅதளினோடே
ஐந்தலையமாநாகம்அரையிற்சாத்திப்
புனல்பொதிந்தசடைக்கற்றைப்பொன்போல்மேனிப்
புனிதனார்புரிந்தமரர்இறைஞ்சியேத்தச்
சினவிடையைமேற்கொண்டுதிருவாரூருஞ்
சிரபுரமும்இடைமருதுஞ்சேர்வார்போல
மனமுருகவளைகழலமாயம்பேசி
வலம்புரமேபுக்கங்கேமன்னினாரே. 5

கறுத்ததொருகண்டத்தர்காலன்வீழக்
காலினாற்காய்ந்துகந்தகாபாலியார்
முறித்ததொருதோலுடுத்துமுண்டஞ்சாத்தி
முனிகணங்கள்புடைசூழமுற்றந்தோறுந்
தெறித்ததொருவீணையராய்ச்செல்வார்தம்வாய்ச்
சிறுமுறுவல்வந்தெனதுசிந்தைவௌவ
மறித்தொருகால்நோக்காதேமாயம்பேசி
வலம்புரமேபுக்கங்கேமன்னினாரே. 6

பட்டுடுத்துப்பவளம்போல்மேனியெல்லாம்
பசுஞ்சாந்தங்கொண்டணிந்துபாதம்நோவ
இட்டெடுத்துநடமாடியிங்கேவந்தார்க்
கெவ்வூரீர்எம்பெருமானென்றேன்ஆவி
விட்டிடுமாறதுசெய்துவிரைந்துநோக்கி
வேறோர்பதிபுகப்போவார்போல
வட்டணைகள்படநடந்துமாயம்பேசி
வலம்புரமேபுக்கங்கேமன்னினாரே. 7

பல்லார்பயில்பழனப்பாசூரென்றும்
பழனம்பதிபழமைசொல்லிநின்றார்
நல்லார்நனிபள்ளியின்றுவைகி
நாளைப்போய்நள்ளாறுசேர்துமென்றார்
சொல்லார்ஒருவிடமாத்தோள்கைவீசிச்
சுந்தரராய்வெந்தநீறாடியெங்கும்
மல்லார்வயல்புடைசூழ்மாடவீதி
வலம்புரமேபுக்கங்கேமன்னினாரே. 8

பொங்காடரவொன்றுகையிற்கொண்டு
போர்வெண்மழுவேந்திப்போகாநிற்பர்
தங்காரொருவிடத்துந்தம்மேல்ஆர்வந்
தவிர்த்தருளார்தத்துவத்தேநின்றேனென்பர்
எங்கேயிவர்செய்கையொன்றொன்றொவ்வா
என்கண்ணில்நின்றகலாவேடங்காட்டி
மங்குல்மதிதவழும்மாடவீதி
வலம்புரமேபுக்கங்கேமன்னினாரே. 9

செங்கண்மால்சிலைபிடித்துச்சேனையோடுஞ்
சேதுபந்தனஞ்செய்துசென்றுபுக்குப்
பொங்குபோர்பலசெய்துபுகலால்வென்ற
போரரக்கன்நெடுமுடிகள்பொடியாய்வீழ
அங்கொருதன்றிருவிரலால்இறையேயூன்றி
அடர்த்தவற்கேஅருள்புரிந்தஅடிகளிந்நாள்
வங்கமலிகடல்புடைசூழ்மாடவீதி
வலம்புரமேபுக்கங்கேமன்னினாரே. 10

திருச்சிற்றம்பலம்