தலம் : கற்குடி
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஆறாம்திருமுறை
பண் : திருத்தாண்டகம்
நாடு : சோழநாடுகாவிரித்தென்கரை
திருச்சிற்றம்பலம்
மூத்தவனைவானவர்க்குமூவாமேனி
முதலவனைத்திருவரையின்மூக்கப்பாம்பொன்
றார்த்தவனைஅக்கரவம்ஆரமாக
அணிந்தவனைப்பணிந்தடியாரடைந்தவன்போ
டேத்தவனைஇறுவரையிற்றேனைஏனோர்க்
கின்னமுதம்அளித்தவனையிடரையெல்லாங்
காத்தவனைக்கற்குடியில்விழுமியானைக்
கற்பகத்தைக்கண்ணாரக்கண்டேன்நானே. 1
செய்யானைவெளியானைக்கரியான்றன்னைத்
திசைமுகனைத்திசையெட்டுஞ்செறிந்தான்றன்னை
ஐயானைநொய்யானைச்சீரியானை
அணியானைச்சேயானைஆனஞ்சாடும்
மெய்யானைப்பொய்யாதுமில்லான்றன்னை
விடையானைச்சடையானைவெறித்தமான்கொள்
கையானைக்கற்குடியில்விழுமியானைக்
கற்பகத்தைக்கண்ணாரக்கண்டேன்நானே. 2
மண்ணதனில்ஐந்தைமாநீரில்நான்கை
வயங்கெரியில்மூன்றைமாருதத்திரண்டை
விண்ணதனிலொன்றைவிரிகதிரைத்
தண்மதியைத்தாரகைகள்தம்மின்மிக்க
எண்ணதனில்எழுத்தையேழிசையைக்காமன்
எழிலழியஎரியுமிழ்ந்தஇமையாநெற்றிக்
கண்ணவனைக்கற்குடியில்விழுமியானைக்
கற்பகத்தைக்கண்ணாரக்கண்டேன்நானே. 3
நற்றவனைப்புற்றரவநாணினானை
நாணாதுநகுதலையூண்நயந்தான்றன்னை
முற்றவனைமூவாதமேனியானை
முந்நீரின்நஞ்சமுகந்துண்டான்றன்னைப்
பற்றவனைப்பற்றார்தம்பதிகள்செற்ற
படையானைஅடைவார்தம்பாவம்போக்கக்
கற்றவனைக்கற்குடியில்விழுமியானைக்
கற்பகத்தைக்கண்ணாரக்கண்டேன்நானே. 4
சங்கைதனைத்தவிர்த்தாண்டதலைவன்றன்னைச்
சங்கரனைத்தழலுறுதாள்மழுவாள்தாங்கும்
அங்கையனைஅங்கமணிஆகத்தானை
ஆகத்தோர்பாகத்தேஅமரவைத்த
மங்கையனைமதியொடுமாசுணமுந்தம்மின்
மருவவிரிசடைமுடிமேல்வைத்தவானீர்க்
கங்கையனைக்கற்குடியில்விழுமியானைக்
கற்பகத்தைக்கண்ணாரக்கண்டேன்நானே. 5
பெண்ணவனைஆணவனைப்பேடானானைப்
பிறப்பிலியைஇறப்பிலியைப்பேராவாணி
விண்ணவனைவிண்ணவர்க்குமேலானானை
வேதியனைவேதத்தின்கீதம்பாடும்
பண்ணவனைப்பண்ணில்வருபயனானானைப்
பாரவனைப்பாரில்வாழ்உயிர்கட்கெல்லாங்
கண்ணவனைக்கற்குடியில்விழுமியானைக்
கற்பகத்தைக்கண்ணாரக்கண்டேன்நானே. 6
பண்டானைப்பரந்தானைக்குவிந்தான்றன்னைப்
பாரானைவிண்ணாயிவ்வுலகமெல்லாம்
உண்டானைஉமிழ்ந்தானைஉடையான்றன்னை
ஒருவருந்தன்பெருமைதனைஅறியவொண்ணா
விண்டானைவிண்டார்தம்புரங்கள்மூன்றும்
வெவ்வழலில்வெந்துபொடியாகிவீழக்
கண்டானைக்கற்குடியில்விழுமியானைக்
கற்பகத்தைக்கண்ணாரக்கண்டேன்நானே. 7
வானவனைவானவர்க்குமேலானானை
வணங்குமடியார்மனத்துள்மருவிப்புக்க
தேனவனைத்தேவர்தொழுகழலான்றன்னைச்
செய்குணங்கள்பலவாகிநின்றவென்றிக்
கோனவனைக்கொல்லைவிடையேற்றினானைக்
குழல்முழவம்இயம்பக்கூத்தாடவல்ல
கானவனைக்கற்குடியில்விழுமியானைக்
கற்பகத்தைக்கண்ணாரக்கண்டேன்நானே. 8
கொலையானையுரிபோர்த்தகொள்கையானைக்
கோளரியைக்கூரம்பாவரைமேற்கோத்த
சிலையானைச்செம்மைதருபொருளான்றன்னைத்
திரிபுரத்தோர்மூவர்க்குச்செம்மைசெய்த
தலையானைத்தத்துவங்களானான்றன்னைத்
தையலோர்பங்கினனைத்தன்கையேந்து
கலையானைக்கற்குடியில்விழுமியானைக்
கற்பகத்தைக்கண்ணாரக்கண்டேன்நானே. 9
பொழிலானைப்பொழிலாரும்புன்கூரானைப்
புறம்பயனைஅறம்புரிந்தபுகலூரானை
எழிலானைஇடைமருதினிடங்கொண்டானை
ஈங்கோய்நீங்காதுறையும்இறைவன்றன்னை
அழலாடுமேனியனைஅன்றுசென்றக்
குன்றெடுத்தஅரக்கன்றோள்நெரியவூன்றுங்
கழலானைக்கற்குடியில்விழுமியானைக்
கற்பகத்தைக்கண்ணாரக்கண்டேன்நானே. 10
திருச்சிற்றம்பலம்