திருப்புகழ் 07 ககுபநிலை குலைய (குன்றக்குடி)

Thiruppugal 07 Kagubanilaikulaiya

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனன தனதனன தனதனன தனதனன
தந்தத்த தத்ததன தந்தத்த தத்ததன – தனதானா

ககுபநிலை குலையவிகல் மிகுபகடின் வலியுடைய
தந்தத்தி னைத்தடிவ தொந்தத்தி ரத்தையுள
அகிலமறை புகழ்பரமர் ஞெகிழிகல கலகலெனும்
அம்பொற்ப தத்தர்தது வம்பொற்பொருப்படர்வ
களப்பரி மளமெழுகும் எழிலில் முழு குவமுளரி
அஞ்சப்பு டைத்தெழுவ வஞ்சக்கருத்துமத – னபிஷேகங்

கடிவபடு கொலையிடுவ கொடியமுக படமணிவ
இன்பச்சு டர்க்கனக கும்பத்த ரச்செருவ
பிருதில்புள கிதசுகமு மிருதுளமும் வளரிளைஞர்
புந்திக்கி டர்த்தருவ பந்தித்த கச்சடர்வ
கயல்மகர நிகரமிக வியன்மருவு நதியில் முதிர்
சங்கிப்பி முத்தணிவ பொங்கிக்க னத்தொளிர்வ – முலைமாதர்
_

வகுளமலர் குவளை இதழ் தருமணமு மிருகமத
மொன்றிக்கறுத்து முகில் வென்றிட்டு நெய்த்தகுழல்
அசையருசி அமுர்தக்ருத வசியமொழி மயில்குயிலெ
னும்புட்கு ரற்பகர வம்புற்ற மற்புரிய
வருமறலி அரணமொடு முடுகுசமர் விழியிணைகள்
கன்றிச்சி வக்கமகிழ் நன்றிச்ச மத்துநக – நுதிரேகை

வகைவகைமெ யுறவளைகள் கழலவிடை துவளவிதழ்
உண்டுட்ப்ர மிக்கநசை கொண்டுற்ற ணைத்தவதி
செறிகலவி வலையிலென தறிவுடைய கலைப்படுதல்
உந்திப்பி றப்பறநி னைந்திட்ட முற்றுனடி
வயலிநகர் முருகசெரு முயல்பனிரு கரகுமர
துன்றட்ட சிட்டகுண குன்றக்கு டிக்கதிப – அருளாதோ

தகுகுதகு தகுதகுகு திகுகுதிகு திகுதிகுகு
தங்குத்த குத்தக்கு திங்குத்தி குத்திக்கு
சகணசக சகசகண செகணசெக செகசெகெண
சங்கச்ச கச்சகண செங்கச்செ கச்செகண
தனனதன தனதனன தெனனதென தெனதெனன
தந்தத்தனத்தனனதெந்தத்தெனத்தெனன – தனனானா

தகுத்தகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதி
தங்குத்த குத்தகுகு திங்குத்தி குத்திகுகு
டணணடண்டண்டணணடிணிணிடிணி டிணிடிணிணி
டண்டட்ட டட்டடண டிண்டிட்டி டிட்டிடிணி
தரரதர தரதரர திரிரிதிரி திரிதிரிரி
தன்றத்த ரத்தரர தின்றித்தி ரித்திரிரி – எனதாளந்

தொகுதிவெகு முரசுகர டிகைட மரு முழவுதவில்
தம்பட்ட மத்தளமி னம்பட்ட டக்கைபறை
பதலைபல திமிலைமுத லதிரவுதிர் பெரியதலை
மண்டைத்தி ரட்பருகு சண்டைத்தி ரட்கழுகு
துடர்நிபிட கருடனடர் தரகரட மொகுமொகென
வந்துற்றி டக்குடர்நிணந்துற்றிசைத்ததிர – முதுபேய்கள்

_

சுனகனரி நெறுநெறென வினிதினிது தினவினைசெய்
வெங்குக்கு டத்தகொடி துங்குக்கு குக்குகென
வடனமிடு திசைபரவி நடனமிட வடலிரவி
திங்கட்ப்ர பைக்கதிர்கள் மங்கப்ர சித்தகுல
துரக்கஜ ரதகடக முரணரண நிருதர்விறல்
மிண்டைக்கு லைத்தமர்செய் தண்டர்க்கு ரத்தையருள் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனன தனதனன தனதனன தனதனன
தந்தத்த தத்ததன தந்தத்த தத்ததன – தனதானா

ககுப நிலை குலைய இகல் மிகு பகடின் வலி உடைய
தந்தத்தினைத் தடிவ தொந்தத் திரத்தை உள
அகில மறை புகழ் பரமர் ஞெகிழி கலகல் எனும்
அம் பொன் பதத்தர் தநு அம் பொன் பொருப்பு அடர்வ
களப பரிமள மெழுகும் எழிலில் முழுகுவ முளரி
அஞ்சப் புடைத்து எழு வஞ்சக் கருத்து மதன் – அபிஷேகம்

கடிவ படு கொலை இடுவ கொடிய முக படம் அணிவ
இன்பச் சுடர் கனக கும்பத் தரச் செருவ
பிருதில் புளகித சுகமு(ம்) மிருதுளமும் வளர் இளைஞர்
புந்திக்கு இடர் தருவ பந்தித்த கச்சு அடர்வ
கயல் மகர நிகர மிக வியன் மருவு நதியில் முதிர்
சங்கு இப்பி முத்து அணிவ பொங்கிக் கனத்து ஒளிர்வ – முலை மாதர்

வகுள மலர் குவளை இதழ் தரு மணமும் மிருகமதம்
ஒன்றிக் கறுத்து முகில் வென்றிட்டு நெய்த்த குழல்
அசைய ருசி அமுர்த க்ருத வசிய மொழி மயில் குயில்
எனும் புட் குரல் பகர வம்பு உற்ற மல் புரிய
வரு மறலி அரணமொடு முடுகு சமர் விழி இணைகள்
கன்றிச் சிவக்க மகிழ் நன்றிச் சமத்து நக – நுதி ரேகை

வகை வகை மெய் உற வளைகள் கழல இடை துவள இதழ்
உண்டு உள் ப்ரமிக்க நசை கொண்டு உற்று அணைத்து அவதி
செறி கலவி வலையில் எனது அறிவுடைய கலை படுதல்
உந்திப் பிறப்பு அற நினைந்திட்டு இட்டம் உற்று உன் அடி
வயலி நகர் முருக செரு உயல் ப(ன்)னிரு கர குமர
துன்று அட்ட சிட்ட குண குன்றக்குடிக்கு அதிப – அருளாதோ

தகுகுதகு தகுதகுகு திகுகுதிகு திகுதிகுகு
தங்குத்த குத்தககு திங்குத்தி குத்திகிகு
சகசகண செகணசெக செகசெகெண
கச்சகண செங்கச்செ கச்செகண
தனதனன தெனனதென தெனதெனன
னத்தனன தெந்தத்தெ னத்தெனன – தனனானா

தகுததகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதி
தங்குத்த குத்தகுகு திங்குத்தி குத்திகுகு
டணடணண டிணிணிடிணி டிணிடிணிணி
டட்டடண டிண்டிட்டி டிட்டிடிணி
தரதரர திரிரிதிரி திரிதிரிரி
ரத்தரர தின்றித்தி ரித்திரிரி – என தாளம்

தொகுதி வெகு முரசு கரடிகை டமரு முழவு தவில்
தம்பட்ட(ம்) மத்தளம் இனம் பட்ட டக்கை பறை
பதலை பல திமிலை முதல் அதிர உதிர் பெரிய தலை
மண்டைத் திரள் பருகு சண்டைத் திரள் கழுகு
துடர் நிபிட கருடன் அடர்தர கரட(ம்) மொகு மொகு என
வந்து உற்றிட குடர் நிணம் துற்று இசைத்து அதிர – முது பேய்கள்

சுனகன் நரி நெறு நெறு என இனிது இனிது தி(ன்)ன வினை செய்
வெம் குக்குடத்த கொடி துங்குக் குகுக்குகு என
வடு அ(ன்)னம் இடு திசை பரவி நடனம் இட அடல் இரவி
திங்கள் ப்ரபைக் கதிர்கள் மங்க ப்ரசித்த குல
துரக கஜ ரத கடக முரண் அரண நிருதர் விறல்
மிண்டைக் குலைத்து அமர் செய்து அண்டர்க்கு உரத்தை அருள் – பெருமாளே.

English

kakupanilai kulaiyavikal mikupakadin valiyudaiya
thanthaththi naiththadiva thonthaththi raththaiyuLa
akilamaRai pukazhparamar njekizhikala kalakalenum
ampoRpa thaththarthanu vampoRpo ruppadarva
maLamezhukum ezhililmuzhu kuvamuLari
daiththezhuva vanjakka ruththumatha – napishEkang

kadivapadu kolaiyiduva kodiyamuka padamaNiva
inpacchu darkkanaka kumpaththa raccheruva
piruthilpuLa kithasukamu miruthuLamum vaLariLainjar
punthikki darththaruva panthiththa kacchadarva
kayalmakara nikaramika viyanmaruvu nathiyilmuthir
sangippi muththaNiva pongikka naththoLirva – mulaimAthar
_

vakuLamalar kuvaLaiyithazh tharumaNamu mirukamatha
monRikka Ruththumukil venRittu neyththakuzhal
asaiyarusi yamurthakrutha vasiyamozhi mayilkuyile
numputku raRpakara vamputRa maRpuriya
varumaRali yaraNamodu mudukusamar vizhiyiNaikaL
kanRicchi vakkamakizh nanRiccha maththunaka – nuthirEkai

_

vakaivakaime yuRavaLaikaL kazhalavidai thuvaLavithazh
uNdutpra mikkanasai koNdutRa Naiththavathi
seRikalavi valaiyilena thaRivudaiya kalaipaduthal
unthippi RappaRani nainthitta mutRunadi
vayalinakar murukaseru muyalpaniru karakumara
thunRatta sittakuNa kunRakku dikkathipa – aruLAthO

thakukuthaku thakuthakuku thikukuthiku thikuthikuku
thanguththa kuththakaku thinguththi kuththikiku
sakaNasaka sakasakaNa sekaNaseka sekasekeNa
sangaccha kacchakaNa sengacche kacchekaNa
thananathana thanathanana thenanathena thenathenana
thanthaththa naththanana thenthaththe naththenana – thananAnA

thakuthathaku thakuthakuthi thikuthithiku thikuthikuthi
thanguththa kuththakuku thinguththi kuththikuku
daNaNadaNa daNadaNaNa diNiNidiNi diNidiNiNi
daNdatta dattadaNa diNditti dittidiNi
thararathara tharatharara thiririthiri thirithiriri
thanRaththa raththarara thinRiththi riththiriri – yenathALan

thokuthiveku murasukara dikaidamaru muzhavuthavil
thampatta maththaLami nampatta dakkaipaRai
pathalaipala thimilaimutha lathiravuthir periyathalai
maNdaiththi radparuku chaNdaiththi ratkazhuku
thudarnipida karudanadar tharakarada mokumokena
vanthutRi dakkudarni NanthutRi saiththathira – muthupEykaL

_

sunakanari neRuneRena vinithinithu thinavinaisey
vengukku daththakodi thungukku kukkukena
vadanamidu thisaiparavi nadanamida vadaliravi
thingatpra paikkathirkaL mangapra siththakula
thurakakaja rathakadaka muraNaraNa nirutharviRal
miNdaikku laiththamarsey thaNdarkku raththaiyaruL – perumALE.

English Easy Version

“Kakupa Nilai Kulaiya Ikal Miku Pakadin Vali Udaiya
Thanthaththinaith Thadiva Thonthath Thiraththai Ula
Akila Marai Pukazh Paramar Njekizhi Kalakal Enum
Am Pon Pathaththar Thanu Am Pon Poruppu Adarva
Kalapa Parimala Mezhukum Ezhilil Muzhukuva Mulari
Anjap Pudaiththu Ezhu Vanjak Karuththu Mathan – Apishekam

Kadiva Padu Kolai Iduva Kodiya Muka Padam Aniva
Inpac Chudar Kanaka Kumpath Tharac Cheruva
Piruthil Pulakitha Sukamu(M) Miruthulamum Valar Ilainjar
Punthikku Idar Tharuva Panthiththa Kacchu Adarva
Kayal Makara Nikara Mika Viyan Maruvu Nathiyil Muthir
Sangu Ippi Muththu Aniva Pongik Kanaththu Olirva – Mulai Mathar

Vakula Malar Kuvalai Ithazh Tharu Manamum Mirukamatham
Onrik Karuththu Mukil Venrittu Neyththa Kuzhal
Asaiya Rusi Amurtha Krutha Vasiya Mozhi Mayil Kuyil
Enum Put Kural Pakara Vampu Utra Mal Puriya
Varu Marali Aranamodu Muduku Samar Vizhi Inaikal
Kanric Chivakka Makizh Nanric Chamaththu Naka – Nuthi Rekai

Vakai Vakai Mey Ura Valaikal Kazhala Idai Thuvala Ithazh
Undu Ul Pramikka Nasai Kondu Utru Anaiththu Avathi
Seri Kalavi Valaiyil Enathu Arivudaiya Kalai Paduthal
Unthip Pirappu Ara Ninainthittu Ittam Utru Un Adi
Vayali Nakar Muruka Seru Uyal Pa(N)Niru Kara Kumara
Thunru Atta Sitta Kuna Kunrakkudikku Athipa – Arulatho

Thakukuthaku Thakuthakuku Thikukuthiku Thikuthikuku
Thanguththa Kuththakaku Thinguththi Kuththikiku
Sakasakana Sekanaseka Sekasekena
Kacchakana Sengacche Kacchekana
Thanathanana Thenanathena Thenathenana
Naththanana Thenthaththe Naththenana – Thananana

_

Thakuthathaku Thakuthakuthi Thikuthithiku Thikuthikuthi
Thanguththa Kuththakuku Thinguththi Kuththikuku
Danadanana Dininidini Dinidinini
Dattadana Dinditti Dittidini
Tharatharara Thiririthiri Thirithiriri
Raththarara Thinriththi Riththiriri – Ena Thalam

Thokuthi Veku Murasu Karadikai Damaru Muzhavu Thavil
Thampatta(M) Maththalam Inam Patta Dakkai Parai
Pathalai Pala Thimilai Muthal Athira Uthir Periya Thalai
Mandaith Thiral Paruku Chandaith Thiral Kazhuku
Thudar Nipida Karudan Adarthara Karada(M) Moku Moku Ena
Vanthu Utrida Kudar Ninam Thutru Isaiththu Athira – Muthu Peykal

Sunakan Nari Neru Neru Ena Inithu Inithu Thi(N)Na Vinai Sey
Vem Kukkudaththa Kodi Thunguk Kukukkuku Ena
Vadu A(N)Nam Idu Thisai Paravi Nadanam Ida Adal Iravi
Thingal Prapaik Kathirkal Manga Prasiththa Kula
Thuraka Kaja Ratha Kadaka Muran Arana Niruthar Viral
Mindaik Kulaiththu Amar Seythu Andarkku Uraththai Arul – Perumale. “