சிவவாக்கியம் பாடல் – (3)

Running repeatedly millions die
Verse 3

ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே

Translation

Flowing ceaselessly, seeking greatly
The effulgence merged within,
Humans who have died withering, with their life span spent
Are several millions.

Commentary

Civavākkiyar says that millions have died seeking the Divine. People run behind several useless or wrong means seeking the Divine without realizing that the effulgence that is within them. He repeats the word ‘running’ four times may be to indicate the four steps in experiencing the Divine. Carya (outer discipline), kriya (inner discipline), yoga (methods for joining the Divine) and jñāna (supreme wisdom) are the four steps in seeking the Divine within. Each of these steps has its own set of obstacles that prevent one from experiencing the Divine. Hence, Civavākkiyar says that millions of people have lost of their lives in this pursuit.

(பதவுரை)

சோதி வடிவான குண்டலினி சக்தி நம்முட் கலந்துள்ளது. அதுவே இறையுணர்வாகும். அதையறியாத கோடிக்கணக்கான மக்கள் பல்வேறு வழிகளில் இறையுணர்வை நாடி அதை வெளியில் காணாது உடலும் மனமும் வாடி இறந்து போகின்றனர்.

ஓடி என்று நான்கு முறை கூறுவதற்குக் காரணம் சரியை கிரியை யோகம் ஞானம் என்ற நான்கு வழிகளில் சென்றாலும் அவனை அறியாது அவன் உள்ளிருக்கும் ஜோதி, அவனை அடைவதற்கு ஒரே வழி அவன் அருளே என்பதை அறியாது மக்கள் நாட்களை வீணாக்குவதைக் குறிக்கிறது. ஓடி என்று கூறுவது நான்கு திசைகளில் வழிதெரியாமல் ஓடி மாள்வதையும் குறிக்கிறது. வாடி என்ற சொல்லும் நான்கு முறை இப்பாடலில் காணப்படுகிறது. அது உடல், மனம், வாக்கு, ஆவி என்ற நான்கு கரணங்களும் வாடி முடிவில் மக்கள் இறப்பை அடைகின்றனர் என்பதைக் குறிக்கிறது.