திருப்புகழ் 1000 வேடர் செழுந்தினை (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1000 Vedarsezhundhinai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன
தானன தந்தன தாத்தன – தனதான

வேடர்செ ழுந்தினை காத்திதண் மீதிலி ருந்தபி ராட்டிவி
லோசன அம்புக ளாற்செயல் – தடுமாறி

மேனித ளர்ந்துரு காப்பரி தாபமு டன்புன மேற்றிரு
வேளைபு குந்தப ராக்ரம – மதுபாடி

நாடறி யும்படி கூப்பிடு நாவலர் தங்களை யார்ப்பதி
னாலுல கங்களு மேத்திய – இருதாளில்

நாறுக டம்பணி யாப்பரி வோடுபு ரந்தப ராக்ரம
நாடஅ ருந்தவம் வாய்ப்பது – மொருநாளே

ஆடக மந்தர நீர்க்கசை யாமலு ரம்பெற நாட்டியொ
ராயிர வெம்பகு வாய்ப்பணி – கயிறாக

ஆழிக டைந்தமு தாக்கிய நேகர்பெ ரும்பசி தீர்த்தரு
ளாயனு மன்றெயில் தீப்பட – அதிபார

வாடைநெ டுங்கிரி கோட்டிய வீரனு மெம்பர மாற்றிய
வாழ்வென வஞ்சக ராக்ஷதர் – குலமாள

வாசவன் வன்சிறை மீட்டவ னூரும டங்கலு மீட்டவன்
வானுல குங்குடி யேற்றிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன
தானன தந்தன தாத்தன – தனதான

வேடர் செழும் தினை காத்து இதண் மீதில் இருந்த பிராட்டி
விலோசன அம்புகளால் செயல் – தடுமாறி

மேனி தளர்ந்து உருகாப் பரிதாபமுடன் புனம் மேல் திரு
வேளை புகுந்த பராக்ரமம் – அது பாடி

நாடு அறியும்படி கூப்பிடு நாவலர் தங்களை ஆர் பதினாலு
உலகங்களும் ஏத்திய – இரு தாளில்

நாறு கடம்பு அணியாப் பரிவோடு புரந்த பராக்ரம
நாட அரும் தவம் வாய்ப்பதும் – ஒரு நாளே

ஆடகம் மந்தர நீர்க்கு அசையாமல் உரம் பெற நாட்டி
ஒரு ஆயிரம் வெம் பகுவாய்ப் பணி – கயிறாக

ஆழி கடைந்து அமுது ஆக்கி அநேகர் பெரும் பசி தீர்த்து அருள்
ஆயனும் அன்று எயில் தீப்பட – அதி பார

வாடை நெடும் கிரி கோட்டிய வீரனும் எம் பரம் ஆற்றிய
வாழ்வு என வஞ்சக ராக்ஷதர் – குலம் மாள

வாசவன் வன்சிறை மீட்டு அவன் ஊரும் அடங்கலும் மீட்டு அவன்
வான் உலகும் குடி ஏற்றிய – பெருமாளே

English

vEdar sezhun thinai kAththi thaNmeedhil irundha
pirAttivi lOchana ambugaLAR seyal – thadumARi

mEni thaLarndh urugAp parithApam udan puna mEtriru
vELai pugundha parAkramam – adhu pAdi

nAd aRiyum padi kUppidu nAvalar thangaLai Arppadhi
nAl ulagangaLum Eththiya – iruthALil

nARu kadamb aNiyAp parivOdu purandha parAkrama
nAda arunthavam vAyppadhum – orunALE

Adaga manthara neerk kasaiyAmal urampeRa nAtti yo
rAyira vembahu vAyp paNi – kayiRAga

Azhi kadaindh amudhAkki anEkar perumpasi theerth aruL
Ayanum andreyil theeppada – athibAra

vAdai nedungiri kOttiya veeranum empara mAtriya
vAzhvena vanjaka rAkshadhar – kulamALa

vAsavan vanciRai meettavan Urum adangalum eettavan
vAn ulagun kudi Etriya – perumALE.

English Easy Version

vEdar sezhun thinai kAththi thaNmeedhil irundha
pirAttivi lOchana ambugaLAR seyal – thadumARi

mEni thaLarndh urugAp parithApam udan puna mEtriru
vELai pugundha parAkramam – adhu pAdi

nAd aRiyum padi kUppidu nAvalar thangaLai Arppadhi
nAl ulagangaLum Eththiya – iruthALil

nARu kadamb aNiyAp parivOdu purandha parAkrama
nAda arunthavam vAyppadhum – orunALE

Adaga manthara neerk kasaiyAmal urampeRa nAtti
orAyira vembahu vAyp paNi – kayiRAga

Azhi kadaindh amudhAkki anEkar perumpasi theerth aruL
Ayanum andreyil theeppada – athibAra

vAdai nedungiri kOttiya veeranum empara mAtriya
vAzhvena vanjaka rAkshadhar – kulamALa

vAsavan vanciRai meettavan Urum adangalum eettu avan
vAn ulagun kudi Etriya – perumALE.