திருப்புகழ் 1013 முகமும் மினுக்கி (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1013 Mugamumminukki

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன – தந்ததான

முகமுமி னுக்கிப் பெருங்க ருங்குழல்
முகிலைய விழ்த்துச் செருந்தி சண்பக
முடியநி றைத்துத் ததும்பி வந்தடி – முன்பினாக

முலையைய சைத்துத் திருந்த முன்தரி
கலையைநெ கிழ்த்துப் புனைந்து வஞ்சக
முறுவல்வி ளைத்துத் துணிந்து தந்தெரு – முன்றிலூடே

மகளிர்வ ரப்பிற் சிறந்த பந்தியின்
மதனனு நிற்கக் கொளுந்து வெண்பிறை
வடவையெ றிக்கத் திரண்டு பண்டனை – வண்டுபாட

மலயநி லத்துப் பிறந்த தென்றலு
நிலைகுலை யத்தொட் டுடம்பு புண்செய
மயலைய ளிக்கக் குழைந்து சிந்தைம – லங்கலாமோ

பகலவன் மட்கப் புகுந்து கந்தர
ககனமு கட்டைப் பிளந்து மந்தர
பருவரை யொக்கச் சுழன்று பின்புப – றந்துபோகப்

பணமணி பட்சத் துரங்க முந்தனி
முடுகின டத்திக் கிழிந்து விந்தெழு
பரவைய ரற்றப் ப்ரபஞ்ச நின்றுப – யந்துவாடக்

குகனென முக்கட் சயம்பு வும்ப்ரிய
மிகவசு ரர்க்குக் குரம்பை வந்தரு
குறவமர் குத்திப் பொருங்கொ டும்படை – வென்றவேளே

குழைசயை யொப்பற் றிருந்த சங்கரி
கவுரியெ டுத்துப் பரிந்து கொங்கையில்
குணவமு துய்க்கத் தெளிந்து கொண்டருள் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன – தந்ததான

முகமு(ம்) மினுக்கிப் பெரும் கரும் குழல்
முகிலை அவிழ்த்துச் செருந்தி சண்பக(ம்)
முடிய நிறைத்துத் ததும்பி வந்து அடி – முன் பி(ன்)னாக

முலையை அசைத்துத் திருந்த முன் தரி
கலையை நெகிழ்த்துப் புனைந்து வஞ்சக
முறுவல் விளைத்துத் துணிந்து தம் தெரு – முன்றில் ஊடே

மகளிர் வரப்பில் சிறந்த பந்தியின்
மதனனும் நிற்கக் கொளுந்து வெண் பிறை
வடவை எறிக்கக் திரண்டு பண் தனை – வண்டு பாட

மலய நிலத்துப் பிறந்த தென்றலும்
நிலை குலையத் தொட்டு உடம்பு புண் செய
மயலை அளிக்கக் குழைந்து சிந்தை – மலங்கலாமோ

பகலவன் மட்கப் புகுந்து கந்தர(ம்)
ககன முகட்டைப் பிளந்து மந்தர
பரு வரை ஒக்கச் சுழன்று பின்பு – பறந்து போக

பணம் அணி பட்சத் துரங்கமும் தனி
முடுகி நடத்திக் கிழிந்து விந்து எழு
பரவை அரற்றப் ப்ரபஞ்ச(ம்) நின்று – பயந்து வாட

குகன் என முக்கண் சயம்புவும் ப்ரிய
மிக அசுரர்க்குக் குரம்பை வந்து அருகு
உற அமர் குத்திப் பொரும் கொடும் படை – வென்ற வேளே

குழை சயை ஒப்பற்று இருந்த சங்கரி
கவுரி எடுத்துப் பரிந்து கொங்கையில்
குண அமுது உய்க்கத் தெளிந்து கொண்டு அருள் – தம்பிரானே

English

mukamumi nukkip perungka rungkuzhal
mukilaiya vizhththuc cherunthi saNpaka
mudiyani Raiththuth thathumpi vanthadi – munpinAka

mulaiyaiya saiththuth thiruntha munthari
kalaiyaine kizhththup punainthu vanjaka
muRuvalvi Laiththuth thuNinthu thantheru – munRilUdE

makaLirva rappiR chiRantha panthiyin
mathananu niRkak koLunthu veNpiRai
vadavaiye Rikkath thiraNdu paNdanai – vaNdupAda

malayani laththup piRantha thenRalu
nilaikulai yaththot tudampu puNseya
mayalaiya Likkak kuzhainthu sinthaima – langalAmO

pakalavan matkap pukunthu kanthara
kakanamu kattaip piLanthu manthara
paruvarai yokkac chuzhanRu pinpupa – RanthupOkap

paNamaNi patchath thuranga munthani
mudukina daththik kizhinthu vinthezhu
paravaiya ratRap prapanja ninRupa – yanthuvAdak

kukanena mukkat chayampu vumpriya
mikavasu rarkkuk kurampai vantharu
kuRavamar kuththip porungko dumpadai – venRavELE

kuzhaisayai yoppat Riruntha sangari
kavuriye duththup parinthu kongaiyil
kuNavamu thuykkath theLinthu koNdaruL – thambirAnE.

English Easy Version

mukamu(m) minukkip perum karum kuzhal
mukilai avizhththuc cherunthi saNpaka(m)
mudiya niRaiththuth thathumpi vanthu adi – mun pi(n)nAka

mulaiyai asaiththuth thiruntha mun thari
kalaiyai nekizhththup punainthu vanjaka
muRuval viLaiththuth thuNinthu tham theru – munRil UdE

makaLir varappil chiRantha panthiyin
mathananum niRkak koLunthu veN piRai
vadavai eRikkak thiraNdu paN thanai – vaNdu pAda

malaya nilaththup piRantha thenRalum
nilai kulaiyath thottu udampu puN seya
mayalai aLikkak kuzhainthu sinthai – malangalAmO

pakalavan matkap pukunthu kanthara(m)
kakana mukattaip piLanthu manthara
paru varai okkac chuzhanRu pinpu – paRanthu pOka

paNam aNi patchath thurangamum thani
muduki nadaththik kizhinthu vinthu ezhu
paravai aratRap prapanja(m) ninRu – payanthu vAda

kukan ena mukkaN sayampuvum priya
mika asurarkkuk kurampai vanthu aruku
uRa amar kuththip porum kodum padai – venRa vELE

kuzhai sayai oppatRu iruntha sangari
kavuri eduththup parinthu kongaiyil
kuNa amuthu uykkath theLinthu koNdu aruL – thambirAnE.