திருப்புகழ் 1042 வாராய் பேதாய் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1042 Varaipedhai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானா தானா தானா தானா
தானா தானத் – தனதான

வாராய் பேதாய் கேளாய் நீதாய்
மானார் மோகத் – துடனாசை

மாசூ டாடா தூடே பாராய்
மாறா ஞானச் – சுடர்தானின்

றாரா யாதே யாராய் பேறாம்
ஆனா வேதப் – பொருள்காணென்

றாள்வாய் நீதா னாதா பார்மீ
தார்வே றாள்கைக் – குரியார்தாம்

தோரா வானோர் சேனா தாரா
சூரா சாரற் – புனமாது

தோள்தோய் தோளீ ராறா மாசூர்
தூளாய் வீழச் – சிறுதாரைச்

சீரா வாலே வாளா லேவே
லாலே சேதித் – திடும்வீரா

சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தானா தானா தானா தானா
தானா தானத் – தனதான

வாராய் பேதாய் கேளாய் நீ தாய்
மான் ஆர் மோகத்துடன் – ஆசை

மாசு ஊடாடாது ஊடே பாராய்
மாறா ஞானச் – சுடர் தான் நின்று

ஆராயாதே ஆராய் பேறாம்
ஆனா வேதப் – பொருள் காண் என்று

ஆள்வாய் நீ தான் நாதா பார் மீது
ஆர் வேறு ஆள்கைக்கு – உரியார் தாம்

தோரா வானோர் சேனை ஆதாரா
சூரா சாரல் – புனம் மாது

தோள் தோய் தோள் ஈராறா மா சூர்
தூளாய் வீழச் – சிறு தாரைச்

சீராவாலே வாளாலே வேலாலே
சேதித்திடும் – வீரா

சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் – பெருமாளே

English

vArAy pEthAy kELAy neethAy
mAnAr mOkath – thudanAsai

mAcU dAdA thUdE pArAy
mARA njAnac – cudarthAnin

RArA yAthE yArAy pERAm
AnA vEthap – poruLkANen

RALvAy neethA nAthA pArmee
thArvE RALkaik – kuriyArthAm

thOrA vAnOr sEnA thArA
cUrA sAraR – punamAthu

thOLthOy thOLee rARA mAcUr
thULAy veezhac – ciRuthArai

seerA vAlE vALA lEvE
lAlE sEthith – thidumveerA

sEyE vELE pUvE kOvE
thEvE thEvap – perumALE.

English Easy Version

vArAy pEthAy kELAy nee thAy
mAn Ar mOkaththudan – Asai

mAsu UdAdAthu UdE pArAy
mARA njAnac – cudar thAn ninRu

ArAyAthE ArAy pERAm
AnA vEthap – poruL kAN enRu

ALvAy nee thAn nAthA pAr meethu
Ar vERu ALkaikku – uriyAr thAm

thOrA vAnOr sEnai AthArA
sUrA sAral – punam mAthu

thOL thOy thOL eerARA mA sUr
thULAy veezhac – ciRu thAraic

ceerAvAlE vALAlE vElAlE
Laalea sEthiththidum – veerA

sEyE vELE pUvE kOvE
thEvE thEvap – perumALE.