திருப்புகழ் 1043 அகல நீளம் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1043 Agalaneelam

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான – தனதான

அகல நீளம் யாதாலு மொருவ ராலு மாராய
அரிய மோன மேகோயி – லெனமேவி

அசைய வேக்ரி யாபீட மிசைபு காம காஞான
அறிவி னாத ராமோத – மலர்தூவிச்

சகல வேத னாதீத சகல வாச காதீத
சகல மாக்ரி யாதீத – சிவரூப

சகல சாத காதீத சகல வாச னாதீத
தனுவை நாடி மாபூசை – புரிவேனோ

விகட தார சூதான நிகள பாத போதூள
விரக ராக போதார – சுரர்கால

விபுத மாலி காநீல முகப டாக மாயூர
விமல வ்யாப காசீல – கவிநோத

ககன கூட பாடீர தவள சோபி தாளான
கவன பூத ராரூட – சதகோடி

களப காம வீர்வீசு கரமு கார வேல்வீர
கருணை மேரு வேதேவர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான – தனதான

அகலம் நீளம் யாதாலும் ஒருவராலும் ஆராய
அரிய மோனமே கோயில் – என மேவி

அசையவே க்ரியா பீடம் மிசை புகா மகா ஞான
அறிவின் ஆதர ஆமோத – மலர் தூவி

சகல வேதன(ம்) அதீத சகல வாசக(ம்) அதீத
சகல மா க்ரிய அதீத – சிவரூப

சகல சாதக அதீத சகல வாசன அதீத
தனுவை நாடி மா பூசை – புரிவேனோ

விகட தார சூதான நிகள பாத போதூள
விரகர் ராக போதார் – அசுரர் கால

விபுத மாலிகா நீல முக படாகம் மாயூர
விமல வ்யாபகா சீல – அக விநோத

ககன கூடம் பாடீரம் தவள சோபித ஆளான
கவனம் பூதரம் ஆரூட – சத கோடி

களப காம வீர் வீசு கரம் முக ஆர வேல் வீர
கருணை மேருவே தேவர் – பெருமாளே.

English

akala neeLam yAthAlu moruva rAlu mArAya
ariya mOna mEkOyi – lenamEvi

asaiya vEkri yApeeda misaipu kAma kAnjAna
aRivi nAtha rAmOtha – malarthUvi

sakala vEtha nAtheetha sakala vAsa kAtheetha
sakala mAkri yAtheetha – sivarUpa

sakala sAtha kAtheetha sakala vAsa nAtheetha
thanuvai nAdi mApUsai – purivEnO

vikada thAra cUthAna nikaLa pAtha pOthULa
viraka rAka pOthAra – surarkAla

viputha mAli kAneela mukapa dAka mAyUra
vimala vyApa kAseela – kavinOtha

kakana kUda pAdeera thavaLa sOpi thALAna
kavana pUtha rArUda – sathakOdi

kaLapa kAma veerveesu karamu kAra vElveera
karuNai mEru vEthEvar – perumALE.

English Easy Version

akalam neeLam yAthAlum oruvarAlum ArAya
ariya mOnamE kOyil – ena mEvi

asaiyavE kriyA peedam misai pukA makA njAna
aRivin Athara AmOtha – malar thUvi

sakala vEthana(m) atheetha sakala vAsaka(m) atheetha
sakala mA kriya atheetha – sivarUpa

sakala sAthaka atheetha sakala vAsana atheetha
thanuvai nAdi mA pUsai – purivEnO

vikada thAra cUthAna nikaLa pAtha pOthULa
viraka rAka pOthAr – asurar kAla

viputha mAlikA neela muka padAka mAyUra
vimala vyApakA seela – aka vinOtha

kakana kUdam pAdeeram thavaLa sOpitha ALAna
kavanam pUtharam ArUda – satha kOdi

kaLapa kAma veera veesu karam muka Ara vEl veera
karuNai mEruvE thEvar – perumALE.