திருப்புகழ் 1071 பெருக்க நெஞ்சு (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1071 Perukkanenju

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்த தந்தனம் தனத்த தந்தனம்
தனத்த தந்தனம் – தனதான

பெருக்க நெஞ்சுவந் துருக்கு மன்பிலன்
ப்ரபுத்த னங்கள்பண் – பெணுநாணும்

பிழைக்க வொன்றிலன் சிலைக்கை மிண்டர்குன்
றமைத்த பெண்தனந் – தனையாரத்

திருக்கை கொண்டணைந் திடச்செல் கின்றநின்
திறத்தை யன்புடன் – தெளியாதே

சினத்தில் மண்டிமிண் டுரைக்கும் வம்பனென்
திருக்கு மென்றொழிந் – திடுவேனோ

தருக்கி யன்றுசென் றருட்க ணொன்றரன்
தரித்த குன்றநின் – றடியோடுந்

தடக்கை கொண்டுவந் தெடுத்த வன்சிரந்
தறித்த கண்டனெண் – டிசையோருஞ்

சுருக்க மின்றிநின் றருக்க னிந்திரன்
துணைச்செய் கின்றநின் – பதமேவும்

சுகத்தி லன்பருஞ் செகத்ர யங்களுந்
துதிக்கு மும்பர்தம் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்த தந்தனம் தனத்த தந்தனம்
தனத்த தந்தனம் – தனதான

பெருக்க நெஞ்சு உவந்து உருக்கும் அன்பிலன்
ப்ரபுத் தனங்கள் பண்பு – எ(ண்)ணு(ம்) நாணும்

பிழைக்க ஒன்றிலன் சிலைக் கை மிண்டர் குன்று
அமைத்த பெண் தனம் – தனை ஆரத்

திருக் கை கொண்டு அணைந்திடச் செல்கின்ற நின்
திறத்தை அன்புடன் – தெளியாதே

சினத்தில் மண்டி மிண்டு உரைக்கும் வம்பன்
திருக்கும் என்று – ஒழிந்திடுவேனோ

தருக்கி அன்று சென்று அருள் கண் ஒன்று அரன்
தரித்த குன்ற நின்று – அடியோடும்

தடக் கை கொண்டு வந்து எடுத்தவன் சிரம்
தறித்த கண்டன் எண் – திசையோரும்

சுருக்கம் இன்றி நின்ற அருக்கன் இந்திரன்
துணைச் செய்கின்ற நின் – பத(ம்) மேவும்

சுகத்தில் அன்பரும் செக த்ரயங்களும்
துதிக்கும் உம்பர் தம் – பெருமாளே.

English

perukka nenjuvan thurukku manpilan
prapuththa nangaLpaN – peNunANum

pizhaikka vonRilan silaikkai miNdarkun
Ramaiththa peNthanan – thanaiyArath

thirukkai koNdaNain thidacchel kinRanin
thiRaththai yanpudan – theLiyAthE

sinaththil maNdimiN duraikkum vampanen
thirukku menRozhin – thiduvEnO

tharukki yanRusen Rarutka NonRaran
thariththa kunRanin – RadiyOdun

thadakkai koNduvan theduththa vansiran
thaRiththa kaNdaneN – disaiyOrum

surukka minRinin Rarukka ninthiran
thuNaicchey kinRanin – pathamEvum

sukaththi lanparum sekathra yangaLun
thuthikku mumpartham – perumALE.

English Easy Version

perukka nenju uvanthu urukkum anpilan
praputh thanangaL paNpu – e(N) Nu(m) nANum

pizhaikka onRilan silaik kai miNdar kunRu
amaiththa peN thanam – thanai Arath

thiruk kai koNdu aNainthidac chelkinRa nin
thiRaththai anpudan – theLiyAthE

sinaththil maNdi miNdu uraikkum vampan
en thirukkum enRu – ozhinthiduvEnO

tharukki anRu senRu aruL kaN onRu aran
thariththa kunRa ninRu – adiyOdum

thadak kai koNdu vanthu eduththavan siram
thaRiththa kaNdan eN – thisaiyOrum

surukkam inRi ninRa arukkan inthiran
thuNaic cheykinRa nin – patha(m) mEvum

sukaththil anparum seka thrayangaLum
thuthikkum umpar tham – perumALE.