திருப்புகழ் 1074 இசைந்த ஏறும் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1074 Isaindhaerum

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனந்த தானந் தனதன தானன – தனதான

இசைந்த ஏறுங் கரியுரி போர்வையும் – எழில்நீறும்
இலங்கு நூலும் புலியத ளாடையு – மழுமானும்

அசைந்த தோடுஞ் சிரமணி மாலையு – முடிமீதே
அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய – குருநாதா

உசந்த சூரன் கிளையுடன் வேரற – முனிவோனே
உகந்த பாசங் கயிறொடு தூதுவர் – நலியாதே

அசந்த போதென் துயர்கெட மாமயில் – வரவேணும்
அமைந்த வேலும் புயமிசை மேவிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தனந்த தானந் தனதன தானன – தனதான

இசைந்த ஏறும் கரியுரி போர்வையும் – எழில்நீறும்
இலங்கு நூலும் புலியத ளாடையும் – மழுமானும்

அசைந்த தோடும் சிரமணி மாலையும் – முடிமீதே
அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய – குருநாதா

உசந்த சூரன் கிளையுடன் வேரற – முனிவோனே
உகந்த பாசங் கயிறொடு தூதுவர் – நலியாதே

அசந்த போதென் துயர்கெட மாமயில் – வரவேணும்
அமைந்த வேலும் புயமிசை மேவிய – பெருமாளே.

English

isaindha ERum kariyuri pOrvaiyum – ezhilneeRum
ilangu nUlum puliyadhaL Adaiyu – mazhumAnum

asaindha thOdum siramaNi mAlaiyu – mudimeedhE
aNindha eesan parivudan mEviya – gurunAthA

usandha sUran kiLaiyudan vEraRa – munivOnE
ugandha pAsam kayiRodu dhUthuvar – naliyAdhE

asandha pOdhen thuyarkeda mAmayil – varavENum
amaindha vElum buyamisai mEviya – perumALE.

English Easy Version

isaindha ERum kariyuri pOrvaiyum – ezhilneeRum
ilangu nUlum puliyadhaL Adaiyum – mazhumAnum

asaindha thOdum siramaNi mAlaiyu – mudimeedhE
aNindha eesan parivudan mEviya – gurunAthA

usandha sUran kiLaiyudan vEraRa – munivOnE
ugandha pAsam kayiRodu dhUthuvar – naliyAdhE

asandha pOdhen thuyarkeda mAmayil – varavENum
amaindha vElum buyamisai mEviya – perumALE