திருப்புகழ் 1092 அனகனென அதிகனென (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1092 Anaganenaadhiganena

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனனதன தனனதன தனனதன தனனதன
தனனதன தனனதன – தனதான

அனகனென அதிகனென அமலனென அசலனென
அபயனென அதுலனென – அநபாயன்

அடல்மதன னெனவிசைய னெனமுருக னெனநெருடி
யவர்பெயரு மிடைசெருகி – யிசைபாடி

வனசமணி பணிலமழை சுரபிசுரர் தருநிகர்கை
மகிபஎன தினையளவு – ளவுமீயா

மனிதர்கடை தொறுமுழலு மிடியொழிய மொழியொழிய
மனமொழிய வொருபொருளை – அருள்வாயே

இனனிலவு தலைமலைய அடியினுகி ரிலைகளென
இருசதுர திசையிலுர – கமும்வீழ

இரணியச யிலம்ரசித சயிலமர கதசயில
மெனவிமலை யமுனை யென – நிழல்வீசிக்

ககனமழை யுகைகடவு ளுடலமென முதியவிழி
கதுவியெழில் பொதியமிசை – படர்கோலக்

கலபகக மயில்கடவு நிருதர்கஜ ரததுரக
கடகமுட னமர்பொருத – பெருமாளே.

பதம் பிரித்தது

தனனதன தனனதன தனனதன தனனதன
தனனதன தனனதன – தனதான

அனகனென அதிகனென அமலனென அசலனென
அபயனென அதுலனென – அநபாயன்

அடல்மதனனென விசையனென முருகனென நெருடி
யவர்பெயரு மிடைசெருகி – யிசைபாடி

வனசமணி பணிலமழை சுரபிசுரர் தருநிகர் கை
மகிபஎன தினையளவு – உளவுமீயா

மனிதர்கடை தொறுமுழலு மிடியொழிய மொழியொழிய
மனமொழிய வொருபொருளை – அருள்வாயே

இனன் நிலவு தலைமலைய அடியின் உகிர் இலைகளென
இருசதுர திசையில் – உரகமும்வீழ

இரணிய சயிலம் ரசித சயில மரகதசயில
மென விமலை யமுனை யென – நிழல்வீசி .

ககனமழை யுகைகடவுள் உடலமென முதியவிழி
கதுவி எழில் பொதியமிசை – படர்கோலக்

கலபகக மயில்கடவு நிருதர்கஜ ரததுரக
கடகமுடன் அமர்பொருத – பெருமாளே.

English

anakanena athikanena amalanena asalanena
apayanena athulanena – anapAyan

adalmathana nenavisaiya nenamuruka nenanerudi
yavarpeyaru midaiseruki – yisaipAdi

vanasamaNi paNilamazhai surapisurar tharunikarkai
makipaena thinaiyaLavu – LavumeeyA

manitharkadai thoRumuzhalu midiyozhiya mozhiyozhiya
manamozhiya voruporuLai – aruLvAyE

inanilavu thalaimalaiya adiyinuki rilaikaLena
irusathura thisaiyilura – kamumveezha

iraNiyasa yilamrasitha sayilamara kathasayila
menavimalai yamunai yena – nizhalveesik

kakanamazhai yukaikadavu Ludalamena muthiyavizhi
kathuviyezhil pothiyamisai – padarkOlak

kalapakaka mayilkadavu nirutharkaja rathathuraka
kadakamuda namarporutha – perumALE.

English Easy Version

anakanena athikanena amalanena asalanena
apayanena athulanena – anapAyan

Adalmathananena visaiyanena murukanena nerudi
yavarpeyaru midaiseruki – yisaipAdi

vanasamaNi paNilamazhai surapisurar tharu nikar kai
makipaena thinaiyaLavu – uLavumeeyA

manitharkadai thoRumuzhalu midiyozhiya mozhiyozhiya
manamozhiya voruporuLai – aruLvAyE

inan nilavu thalaimalaiya adiyin ukir ilaikaLena
irusathura thisaiyil – urakamumveezha

iraNiya sayilam rasitha sayila marakathasayilamena
vimalai yamunai yenanizhal – veesi

kakanamazhai yukaikadavuL udalamena muthiyavizhi
Kathuvi ezhil pothiyamisai – padarkOlak

kalapakaka mayilkadavu nirutharkaja rathathuraka
kadakamudan amarporutha – perumALE.