Thiruppugal 1093 Kudarumalasalamumidai
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனனதன தனனதன தனனதன தனனதன
தனனதன தனனதன – தனதான
குடருமல சலமுமிடை யிடைதடியு முடையளவு
கொழுவுமுதி ரமும்வெளிற – ளறுமாகக்
கொளகொளென அளவில்புழு நெளுநெளென விளைகுருதி
குமுகுமென இடைவழியில் – வரநாறும்
உடலின்மண மலிபுழுகு தடவியணி கலமிலக
வுலகமரு ளுறவரும – ரிவையாரன்
பொழியவினை யொழியமன மொழியஇரு ளொழியஎன
தொழிவிலக லறிவையருள் – புரிவாயே
வடகனக சயிலமுத லியசயில மெனநெடிய
வடிவுகொளு நெடியவிறல் – மருவாரை
வகிருமொரு திகிரியென மதிமுதிய பணிலமென
மகரசல நிதிமுழுகி – விளையாடிக்
கடலுலகை யளவுசெய வளருமுகி லெனஅகில
ககனமுக டுறநிமிரு – முழுநீலக்
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக
கடகமுட னமர்பொருத – பெருமாளே.
பதம் பிரித்தது
தனனதன தனனதன தனனதன தனனதன
தனனதன தனனதன – தனதான
குடரும் மலசலமும் இடை இடை தடியும் உடை அளவு
கொழுவும் உதிரமும் வெளிறு – அளறுமாக
கொள கொள என அளவு இல் புழு நெளு நெளு என விளை
குருதி குமு குமு என இடை வழியில் – வர நாறும்
உடலின் மணம் மலி புழுகு தடவி அணிகலம் இலக
உலகம் மருள் உற வரும் – அரிவையார்
அன்பு ஒழிய வினை ஒழிய மனம் ஒழிய இருள் ஒழிய எனது
ஒழிவில் அகல் அறிவை – அருள் புரிவாயே
வட கனக சயிலம் முதலிய சயிலம் என நெடிய
வடிவும் கொ(ள்)ளு நெடிய விறல் – மருவாரை
வகிரும் ஒரு திகிரி என மதி முதிய பணிலம் என
மகர சல நிதி முழுகி – விளையாடி
கடல் உலகை அளவு செய வளரும் முகில் என அகில
ககன முகடு உற நிமிரும் – முழு நீலக்
கலப ககம் மயில் கடவி நிருதர் கஜ ரத துரக
கடகம் உடன் அமர் பொருத – பெருமாளே
English
kudarumala chalamumidai yidaithadiyu mudaiyaLavu
kozhuvumuthi ramumveLiRa – LaRumAkak
koLakoLena aLavilpuzhu neLuneLena viLaikuruthi
kumukumena idaivazhiyil – varanARum
udalinmaNa malipuzhuku thadaviyaNi kalamilaka
vulakamaru LuRavaruma – rivaiyAran
pozhiyavinai yozhiyamana mozhiyairu Lozhiyaena
thozhivilaka laRivaiyaruL – purivAyE
vadakanaka sayilamutha liyasayila menanediya
vadivukoLu nediyaviRal – maruvArai
vakirumoru thikiriyena mathimuthiya paNilamena
makarasala nithimuzhuki – viLaiyAdik
kadalulakai yaLavuseya vaLarumuki lenaakila
kakanamuka duRanimiru – muzhuneelak
kalapakaka mayilkadavi nirutharkaja rathathuraka
kadakamuda namarporutha – perumALE.
English Easy Version
kudarum malachalamum idai idai thadiyum udai aLavu
kozhuvum uthiramum veLiRu – aLaRumAka
koLa koLa ena aLavu il puzhu neLu neLu ena viLai kuruthi
kumu kumu ena idai vazhiyil – vara nARum
Udalin maNam mali puzhuku thadavi aNikalam ilaka
ulakam maruL uRa varum – arivaiyAr
anpu ozhiya vinai ozhiya manam ozhiya iruL ozhiya enathu
ozhivil akal aRivai aruL – purivAyE
vada kanaka sayilam muthaliya sayilam ena nediya
vadivum ko(L)Lu nediya viRal – maruvArai
vakirum oru thikiri ena mathi muthiya paNilam ena
makara sala nithi muzhuki – viLaiyAdi
kadal ulakai aLavu seya vaLarum mukil ena akila
kakana mukadu uRa nimirum – muzhu neelak
kalapa kakam mayil kadavi niruthar kaja ratha thuraka
kadakam udan amar porutha – perumALE