திருப்புகழ் 1094 குதறும் முனை அறிவு (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1094 Kudharummunaiarivu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனன தனதனன தனதனன தனதனன
தனதனன தனதனன – தனதான

குதறுமுனை யறிவுகொடு பதறியெதிர் கதறிமிகு
குமுதமிடு பரசமய – மொருகோடி

குருடர்தெரி வரியதொரு பொருள்தெரிய நிகழ்மனது
கொடியஇரு வினையெனும – ளறுபோக

உதறிவித றியகரண மரணமற விரணமற
வுருகியுரை பருகியநு – தினஞான

உணர்வுவிழி பெறவுனது மிருகமத நளினபத
யுகளமினி யுணரஅருள் – புரிவாயே

சிதறவெளி முழுதுமொளி திகழுமுடு படலமவை
சிறுபொறிக ளெனவுரக – பிலமேழுஞ்

செகதலமு நிகர்சிகரி பலவுநல கெசபுயக
திசையுமுட னுருகவரு – கடைநாளிற்

கதறுமெழு கடல்பருகி வடவைவிடு கரியபுகை
யெனமுடிவில் ககனமுக – டதிலோடுங்

கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக
கடகமுட னமர்பொருத – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனன தனதனன தனதனன தனதனன
தனதனன தனதனன – தனதான

குதறும் முனை அறிவு கொடு பதறி எதிர் கதறி மிகு
குமுதம் இடு பர சமயம் – ஒரு கோடி

குருடர் தெரி அரியது ஒரு பொருள் தெரிய நிகழ் மனது
கொடிய இரு வினை எனும் – அளறு போக

உதறி விதறிய கரண(ம்) மரண(ம்) அற விரணம் அற
உருகி உரை பருகி அநுதின(ம்) – ஞான

உணர்வு விழி பெற உனது மிருகமத நளின பத
உகளம் இனி உணர அருள் – புரிவாயே .

சிதற வெளி முழுதும் ஒளி திகழும் உடு படலம் அவை
சிறு பொறிகள் என உரக – பிலம் ஏழும்

செக தலமு(ம்) நிகர் சிகரி பலவு(ம்) ந(ல்)ல கெச புயக
திசையும் உடன் உருக வரும் – கடை நாளில்

கதறும் எழு கடல் பருகி வடவை விடு கரிய புகை
என முடிவில் ககன முகடு – அதில் ஓடும்

கலப கக(ம்) மயில் கடவி நிருதர் கஜ ரத துரக
கடகம் உடன் அமர் பொருத – பெருமாளே

English

kuthaRumunai yaRivukodu pathaRiyethir kathaRimiku
kumuthamidu parasamaya – morukOdi

kurudartheri variyathoru poruLtheriya nikazhmanathu
kodiyairu vinaiyenuma – LaRupOka

uthaRivitha RiyakaraNa maraNamaRa viraNamaRa
vurukiyurai parukiyanu – thinanjAna

uNarvuvizhi peRavunathu mirukamatha naLinapatha
yukaLamini yuNarAruL – purivAyE

sithaRaveLi muzhuthumoLi thikazhumudu padalamavai
siRupoRika Lenavuraka – pilamEzhunj

cekathalamu nikarsikari palavunala gejapuyaka
thisaiyumuda nurukavaru – kadainALiR

kathaRumezhu kadalparuki vadavaividu kariyapukai
yenamudivil kakanamuka – dathilOdung

kalapakaka mayilkadavi niruthargaja rathathuraka
kadakamuda namrporutha – perumALE.

English Easy Version

kuthaRum munai aRivu kodu pathaRi ethir kathaRi miku
kumutham idu para samayam – oru kOdi

kurudar theri ariyathu oru poruL theriya nikazh manathu
kodiya iru vinai enum – aLaRu pOka

uthaRi vithaRiya karaNa(m) maraNa(m) aRa viraNam aRa
uruki urai paruki anuthina(m) – njAna

uNarvu vizhi peRa unathu mirukamatha naLina patha
ukaLam ini uNara aruL – purivAyE

sithaRa veLi muzhuthum oLi thikazhum udu padalam avai
siRu poRikaL ena uraka – pilam Ezhum

seka thalamu(m) nikar sikari palavu(m) na(l)la kesa puyaka
thisaiyum udan uruka varum – kadai nALil

kathaRum ezhu kadal paruki vadavai vidu kariya pukai
Ena mudivil kakana mukadu – athil Odum

kalapa kaka(m) mayil kadavi niruthar kaja ratha thuraka
kadakam udan amar porutha – perumALE.