திருப்புகழ் 1095 வதை பழக மறலி (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1095 Vadhaipazhagamarali

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனன தனதனன தனதனன தனதனன
தனதனன தனதனன – தனதான

வதைபழக மறலிவிறல் மதனன்வழி படுதுமென
வயிரமர கதமகர – மளவாக

வரிசிதறி விடமளவி வளருமிரு கலகவிழி
வளையிளைஞ ருயிர்கவர – வருமாய

இதையமள விடஅரிய அரிவையர்கள் நெறியொழுகி
எழுபிறவி நெறியொழிய – வழிகாணா

இடர்கள்படு குருடனெனை அடிமைகொள மகிழ்வொடுன
திருநயன கருணைசிறி – தருள்வாயே

பதயுகள மலர்தொழுது பழுதில்பொரி அவல்துவரை
பயறுபெரு வயிறுநிறை – யவிடாமுப்

பழமுமினி துதவிமுனி பகரவட சிகரிமிசை
பரியதனி யெயிறுகொடு – குருநாடர்

கதைமுழுது மெழுதுமொரு களிறுபிளி றிடநெடிய
கடலுலகு நொடியில்வரு – மதிவேகக்

கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக
கடகமுட னமர்பொருத – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனன தனதனன தனதனன தனதனன
தனதனன தனதனன – தனதான

வதை பழக மறலிவிறல் மதனன்வழி படுதும் என
வயிர மரகத மகரம் – அளவாக

வரி சிதறி விடம் அளவி வளரும் இரு கலகவிழி
வளை இளைஞர் உயிர் கவர – வரு மாய

இதையம் அளவிட அரிய அரிவையர்கள் நெறியொழுகி
எழுபிறவி நெறி ஒழிய – வழிகாணா

இடர்கள்படு குருடன் எனை அடிமைகொள மகிழ்வொடு
உனது இரு நயன கருணை சிறிது – அருள்வாயே

பதயுகள மலர்தொழுது பழுதில் பொரி அவல் துவரை
பயறு பெரு வயிறு நிறைய – இடா

முப்பழமும் இனிது உதவி முனி பகர வட சிகரிமிசை
பரிய தனி எயிறு கொடு – குருநாடர்

கதை முழுதும் எழுதும் ஒரு களிறு பிளிறிட நெடிய
கடல் உலகு நொடியில் வரும் – அதிவேகக்

கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக
கடகமுடன் அமர் பொருத – பெருமாளே.

English

vathaipazhaka maRaliviRal mathananvazhi paduthumena
vayiramara kathamakara – maLavAka

vAisithaRi vidamaLavi vaLarumiru kalakavizhi
vaLaiyiLainja ruyirkavara – varumAya

ithaiyamaLa vidAriya arivaiyarkaL neRiyozhuki
ezhupiRavi neRiyozhiya – vazhikANA

idarkaLpadu kurudanenai adimaikoLa makizhvoduna
thirunayana karuNaisiRi – tharuLvAyE

pathayukaLa malarthozhuthu pazhuthilpori avalthuvarai
payaRuperu vayiRuniRai – yavidAmup

pazhamumini thuthavimuni pakaravada sikarimisai
pariyathani yeyiRukodu – kurunAdar

kathaimuzhuthu mezhuthumoru kaLiRupiLi Ridanediya
kadalulaku nodiyilvaru – mathivEkak

kalapakaka mayilkadavi nirutharkaja rathathuraka
kadakamuda namarporutha – perumALE.

English Easy Version

vathai pazhaka maRaliviRal mathananvazhi paduthum ena
vayira marakatha makaram – aLavAka

vari sithaRi vidam aLavi vaLarum iru kalakavizhi
vaLai iLainjar uyir kavara – varu mAya

ithaiyam aLavida ariya arivaiyarkaL neRiyozhuki
ezhupiRavi neRi ozhiya – vazhikANA

idarkaLpadu kurudan enai adimaikoLa makizhvodu
unathu iru nayana karuNai siRithu – aruLvAyE

pathayukaLa malarthozhuthu pazhuthil poai aval thuvarai
payaRu peru vayiRu – niRaiya idA

muppazhamum inithu uthavi muni pakara vada sikAimisai
pariya thani eyiRu kodu – kurunAdar

kathai muzhuthum ezhuthum oru kaLiRu piLiRida nediya
kadal ulaku nodiyil varum – athivEkak

kalapa kaka mayil kadavi niruthar kaja ratha thuraka
kadakamudan amar porutha – perumALE