Thiruppugal 1096 Vidamalaviyariparavu
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதனன தனதனன தனதனன தனதனன
தனதனன தனதனன – தனதான
விடமளவி யரிபரவு விழிகுவிய மொழிபதற
விதறிவளை கலகலென – அநுராகம்
விளையம்ருக மதமுகுள முலைபுளக மெழநுதலில்
வியர்வுவர அணிசிதற – மதுமாலை
அடரளக மவிழஅணி துகிலகல அமுதுபொதி
யிதழ்பருகி யுருகியரி – வையரோடே
அமளிமிசை யமளிபட விரகசல தியில்முழுகி
யவசமுறு கினுமடிகள் – மறவேனே
உடலுமுய லகன்முதுகு நெறுநெறென எழுதிமிர
வுரகர்பில முடியவொரு – பதமோடி
உருவமுது ககனமுக டிடியமதி முடிபெயர
வுயரவகி லபுவனம – திரவீசிக்
கடககர தலமிலக நடனமிடு மிறைவர்மகிழ்
கருதரிய விதமொடழ – குடனாடுங்
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக
கடகமுட னமர்பொருத – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதனன தனதனன தனதனன தனதனன
தனதனன தனதனன – தனதான
விடம் அளவி அரி பரவு விழி குவிய மொழி பதற
விதறி வளை கல கல் என – அநுராகம்
விளைய ம்ருகமத முகுள முலை புளகம் எழ நுதலில்
வியர்வு வர அணி சிதற – மது மாலை
அடர் அளகம் அவிழ அணி துகில் அகல அமுது பொதி
இதழ் பருகி உருகி – அரிவையரோடே
அமளி மிசை அமளி பட விரக சலதியில் முழுகி
அவசம் உறுகினும் அடிகள் – மறவேனே .
உடலு(ம்) முயலகன் முதுகு நெறுநெறு என எழு திமிர(ம்)
உரகர் பில(ம்) முடிய ஒரு – பதம் ஓடி
உருவ முது ககன முகடு இடிய மதி முடி பெயர
உயர அகில புவனம் – அதிர வீசி
கடக(ம்) கர தலம் இலக நடனம் இடும் இறைவர் மகிழ் 3
கருத அரிய விதமோடு – அழகுடன் ஆடும்
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக
கடகமுடன் அமர் பொருத – பெருமாளே.
English
vidamaLavi yariparavu vizhikuviya mozhipathaRa
vithaRivaLai kalakalena – anurAkam
viLaiyamruka mathamukuLa mulaipuLaka mezhanuthalil
viyarvuvara aNisithaRa – mathumAlai
adaraLaka mavizhaaNi thukilakala amuthupothi
yithazhparuki yurukiyari – vaiyarOdE
amaLimisai yamaLipada virakasala thiyilmuzhuki
yavasamuRu kinumadikaL – maRavEnE
udalumuya lakanmuthuku neRuneRena ezhuthimira
vurakarpila mudiyavoru – pathamOdi
uruvamuthu kakanamuka didiyamathi mudipeyara
vuyaravaki lapuvanama – thiraveesik
kadakakara thalamilaka nadanamidu miRaivarmakizh
karuthariya vithamodazha – kudanAdung
kalapakaka mayilkadavi nirutharkaja rathathuraka
kadakamuda namarporutha – perumALE.
English Easy Version
vidam aLavi ari paravu vizhi kuviya mozhi pathaRa
vithaRi vaLai kala kal ena – anurAkam
viLaiya mrukamatha mukuLa mulai puLakam ezha nuthalil
viyarvu vara aNi sithaRa – mathu mAlai
adar aLakam avizha aNi thukil akala amuthu pothi
ithazh paruki uruki – arivaiyarOdE
amaLi misai amaLi pada viraka salathiyil muzhuki
avasam uRukinum adikaL – maRavEnE
udalu(m) muyalakan muthuku neRuneRu ena ezhu thimira(m)
urakar pila(m) mudiya oru – patham Odi
uruva muthu kakana mukadu idiya mathi mudi peyara
uyara akila puvanam – athira veesi
kadaka(m) kara thalam ilaka nadanam idum iRaivar makizh
karutha ariya vithamOdu azhakudan – Adum
kalapa kaka mayil kadavi niruthar kaja ratha thuraka
kadakamudan amar porutha – perumALE