திருப்புகழ் 1097 எழுபிறவி நீர்நில (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1097 Ezhupiravineernila

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனன தானதத்த தனதனன தானதத்த
தனதனன தானதத்த – தனதான

எழுபிறவி நீர்நிலத்தி லிருவினைகள் வேர்பிடித்து
இடர்முளைக ளேமுளைத்து – வளர்மாயை

எனுமுலவை யேபணைத்து விரககுழை யேகுழைத்து
இருளிலைக ளேதழைத்து – மிகநீளும்

இழவுநனை யேபிடித்து மரணபழ மேபழுத்து
இடியுமுடல் மாமரத்தி – னருநீழல்

இசையில்விழ ஆதபத்தி யழியுமுன மேயெனக்கு
இனியதொரு போதகத்தை – யருள்வாயே

வழுவுநெறி பேசுதக்க னிசையுமக சாலையுற்ற
மதியிரவி தேவர்வஜ்ர – படையாளி

மலர்கமல யோனிசக்ர வளைமருவு பாணிவிக்ர
மறையஎதிர் வீரவுக்ரர் – புதல்வோனே

அழகியக லாபகற்றை விகடமயி லேறியெட்டு
அசலமிசை வாகையிட்டு – வரும்வேலா

அடலசுரர் சேனைகெட்டு முறியமிக மோதிவெட்டி
அமரர்சிறை மீளவிட்ட – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனன தானதத்த தனதனன தானதத்த
தனதனன தானதத்த – தனதான

எழுபிறவி நீர்நிலத்தில் இருவினைகள் வேர்பிடித்து
இடர்முளைகளேமுளைத்து – வளர் மாயை

எனும் உலவையே பணைத்து விரககுழையே குழைத்து
இருளிலைகளே தழைத்து – மிகநீளும்

இழவுநனையேபிடித்து மரணபழமே பழுத்து
இடியுமுடல் மாமரத்தின் – அருநீழல்

இசையில்விழ ஆதபத்தி* யழியுமுன மேயெனக்கு
இனியதொரு போதகத்தை – யருள்வாயே

வழுவுநெறி பேசு தக்கன் இசையு மக சாலையுற்ற
மதியிரவி தேவர் – வஜ்ரபடையாளி

மலர்கமல யோனி சக்ர வளைமருவு பாணி விக்ர
மறைய எதிர் வீரவுக்ரர் – புதல்வோனே

அழகிய கலாபகற்றை விகடமயி லேறி எட்டு
அசலமிசை வாகையிட்டு – வரும்வேலா

அடலசுரர் சேனைகெட்டு முறியமிக மோதிவெட்டி
அமரர்சிறை மீளவிட்ட – பெருமாளே.

English

ezhupiRavi neer nilaththil iruvinaigaL vErpidiththu
idar muLaigaLE muLaiththu – vaLarmAyai

enum ulavaiyE paNaiththu viraga kuzhaiyE kuzhaiththu
iruL ilaigaLE thazhaiththu – miganeeLum

izhavu nanaiyE pidiththu maraNa pazhamE pazhuththu
idiyum udal mA maraththin – aruneezhal

isaiyil vizha Adhabaththi azhiyumunamE enakku
iniyadhoru bOdhagaththai – aruLvAyE

vazhuvuneRi pEsu dhakkan isaiyu magasAlai utra
madhiyiravi dhEvar vajra – padaiyALi

malarkamala yOni chakra vaLaimaruvu pANi vikra
maRaiya edhir veera ugrar – pudhalvOnE

azhagiya kalApa katrai vikata mayilERi ettu
achalamisai vAgaiyittu – varumvElA

adal asurar sEnai kettu muRiyamiga mOdhivetti
amararsiRai meeLavitta – perumALE.

English Easy Version

ezhupiRavi neer nilaththil iruvinaigaL vErpidiththu
idar muLaigaLE muLaiththu – vaLarmAyai

enum ulavaiyE paNaiththu viraga kuzhaiyE kuzhaiththu
iruL ilaigaLE thazhaiththu – miganeeLum

izhavu nanaiyE pidiththu maraNa pazhamE pazhuththu
idiyum udal mA maraththin – aruneezhal

isaiyil vizha Adhabaththi azhiyumunamE enakku
iniyadhoru bOdhagaththai – aruLvAyE

vazhuvuneRi pEsu dhakkan isaiyu magasAlai utra
madhiyiravi dhEvar vajra – padaiyALi

malarkamala yOni chakra vaLaimaruvu pANi vikra
maRaiya edhir veera ugrar – pudhalvOnE

azhagiya kalApa katrai vikata mayilERi ettu
achalamisai vAgaiyittu – varumvElA

adal asurar sEnai kettu muRiya miga mOdhivetti
amararsiRai meeLavitta – perumALE