திருப்புகழ் 1098 நடை உடையிலே (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1098 Nadaiudaiyile

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனன தானதத்த தனதனன தானதத்த
தனதனன தானதத்த – தனதான

நடையுடையி லேயருக்கி நெடியதெரு வீதியிற்குள்
நயனமத னால்மருட்டி – வருவாரை

நணுகிமய லேவிளைத்து முலையைவிலை கூறிவிற்று
லளிதமுட னேபசப்பி – யுறவாடி

வடிவதிக வீடுபுக்கு மலரணையின் மீதிருத்தி
மதனனுடை யாகமத்தி – னடைவாக

மருவியுள மேயுருக்கி நிதியமுள தேபறிக்கும்
வனிதையர்க ளாசைபற்றி – யுழல்வேனோ

இடையர்மனை தோறுநித்த முறிதயிர்நெய் பால்குடிக்க
இருகையுற வேபிடித்து – உரலோடே


இறுகிடஅ சோதைகட்ட அழுதிடுகொ பாலக்ருஷ்ண
னியல்மருக னேகுறத்தி – மணவாளா

அடலெழுது மேடுமெத்த வருபுனலி லேறவிட்டு
அரியதமிழ் வாதுவெற்றி – கொளும்வேலா

அவுணர்குலம் வேரறுத்து அபயமென வோலமிட்ட
அமரர்சிறை மீளவிட்ட – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனன தானதத்த தனதனன தானதத்த
தனதனன தானதத்த – தனதான

நடை உடையிலே அருக்கி நெடிய தெரு வீதியிற்குள்
நயனம் அதனால் மருட்டி – வருவாரை

நணுகி மயலே விளைத்து முலையை விலை கூறி விற்று
லளிதம் உடனே பசப்பி – உறவாடி

வடிவு அதிக வீடு புக்கு மலர் அணையின் மீது இருத்தி
மதனன் உடை ஆகமத்தின் – அடைவாக

மருவி உ(ள்)ளமே உருக்கி நிதியம் உளதே பறிக்கும்
வனிதையர்கள் ஆசை பற்றி – உழல்வேனோ

இடையர் மனை தோறு(ம்) நித்தம் உறி தயிர் நெய் பால் குடிக்க
இரு கை உறவே பிடித்து உரலோடே – இறுகிட

அசோதை கட்ட அழுதிடு கொ(கோ)பால க்ருஷ்ணன்
இயல் மருகனே குறத்தி – மணவாளா

அடல் எழுதும் ஏடு மெத்த வரு புனலில் ஏற விட்டு
அரிய தமிழ் வாது வெற்றி – கொளும் வேலா .

அவுணர் குலம் வேர் அறுத்து அபயம் என ஓலம் இட்ட
அமரர் சிறை மீள விட்ட – பெருமாளே.

English

nadaiyudaiyi lEyarukki nediyatheru veethiyiRkuL
nayanamatha nAlmarutti – varuvArai

naNukimaya lEviLaiththu mulaiyaivilai kURivitRu
laLithamuda nEpasappi – yuRavAdi

vadivathika veedupukku malaraNaiyin meethiruththi
mathananudai yAkamaththi – nadaivAka

maruviyuLa mEyurukki nithiyamuLa thEpaRikkum
vanithaiyarka LAsaipatRi – yuzhalvEnO

idaiyarmanai thORuniththa muRithayirney pAlkudikka
irukaiyuRa vEpidiththu – uralOdE

iRukidaa sOthaikatta azhuthiduko pAlakrushNa
niyalmaruka nEkuRaththi – maNavALA

adalezhuthu mEdumeththa varupunali lERavittu
ariyathamizh vAthuvetRi – koLumvElA

avuNarkulam vEraRuththu apayamena vOlamitta
amararsiRai meeLavitta – perumALE.

English Easy Version

nadai udaiyilE arukki nediya theru veethiyiRkuL
nayanam athanAl marutti – varuvArai

naNuki mayalE viLaiththu mulaiyai vilai kURi vitRu
laLitham udanE pasappi – uRavAdi

vadivu athika veedu pukku malar aNaiyin meethu iruththi
mathanan udai Akamaththin – adaivAka

maruvi u(L)LamE urukki nithiyam uLathE paRikkum
vanithaiyarkaL Asai patRi – uzhalvEnO

idaiyar manai thORu(m) niththam uRi thayir ney pAl kudikka
iru kai uRavE pidiththu – uralOdE

iRukida asOthai katta azhuthidu ko(O)pAla krushNan
iyal marukanE kuRaththi – maNavALA

adal ezhuthum Edu meththa varu punalil ERa vittu
ariya thamizh vAthu vetRi – koLum vElA

avuNar kulam vEr aRuththu apayam ena Olam itta
amarar siRai meeLa vitta – perumALE.