Thiruppugal 1099 Madalavizhsaroru
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதனன தானதத்த தனதனன தானதத்த
தனதனன தானதத்த – தனதான
மடலவிழ்ச ரோருகத்து முகிழ்நகையி லேவளைத்து
மதசுகப்ர தாபசித்ர – முலையாலே
மலரமளி மீதணைத்து விளையுமமு தாதரத்தை
மனமகிழ வேயளித்து – மறவாதே
உடலுயிர தாயிருக்க உனதெனதெ னாமறிக்கை
ஒருபொழுதொ ணாதுசற்று – மெனவேதான்
உரைசெய்மட வாரளித்த கலவிதரு தோதகத்தை
யொழியவொரு போதகத்தை – யருள்வாயே
தடமகுட நாகரத்ந படநெளிய ஆடுபத்ம
சரணயுக மாயனுக்கு – மருகோனே
சரவணமி லேயுதித்த குமரமுரு கேசசக்ர
சயிலம்வல மாய்நடத்து – மயில்வீரா
அடல்மருவு வேல்கரத்தி லழகுபெற வேயிருத்தும்
அறுமுகவ ஞானதத்வ – நெறிவாழ்வே
அசுரர்குல வேரைவெட்டி அபயமென வோலமிட்ட
அமரர்சிறை மீளவிட்ட – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதனன தானதத்த தனதனன தானதத்த
தனதனன தானதத்த – தனதான
மடல் அவிழ் சரோருகத்து முகிழ் நகையிலே வளைத்து
மத சுக ப்ரதாப சித்ர – முலையாலே
மலர் அமளி மீது அணைத்து விளையும் அமுத அதரத்தை
மனம் மகிழவே அளித்து – மறவாதே .
உடல் உயிர் அதாய் இருக்க உனது எனது எனா மறிக்கை
ஒரு பொழுது ஒணாது சற்றும் – எனவே தான்
உரை செய் மடவார் அளித்த கலவி தரு தோதகத்தை
ஒழிய ஒரு போதகத்தை – அருள்வாயே
தட மகுட நாக ரத்ந பட(ம்) நெளிய ஆடு பத்ம
சரண யுக மாயனுக்கு – மருகோனே
சரவணமிலே உதித்த குமர முருகேச சக்ர
சயிலம் வலமாய் நடத்து – மயில் வீரா
அடல் மருவு வேல் கரத்தில் அழகு பெறவே இருத்தும்
அறு முகவ ஞான தத்வ – நெறி வாழ்வே
அசுரர் குல வேரை வெட்டி அபயம் என ஓலமிட்ட
அமரர் சிறை மீள விட்ட – பெருமாளே
English
madalavizhsa rOrukaththu mukizhnakaiyi lEvaLaiththu
mathasukapra thApachithra – mulaiyAlE
malaramaLi meethaNaiththu viLaiyumamu thAtharaththai
manamakizha vEyaLiththu – maRavAthE
udaluyira thAyirukka unathenathe nAmaRikkai
orupozhutho NAthusatRu – menavEthAn
uraiseymada vAraLiththa kalavitharu thOthakaththai
yozhiyavoru pOthakaththai – yaruLvAyE
thadamakuda nAkarathna padaneLiya Adupathma
saraNayuka mAyanukku – marukOnE
saravaNami lEyuthiththa kumaramuru kEsachakra
sayilamvala mAynadaththu – mayilveerA
adalmaruvu vElkaraththi lazhakupeRa vEyiruththum
aRumukava njAnathathva – neRivAzhvE
asurarkula vEraivetti apayamena vOlamitta
amararsiRai meeLavitta – perumALE.
English Easy Version
madal avizh sarOrukaththu mukizh nakaiyilE vaLaiththu
matha suka prathApa sithra – mulaiyAlE
malar amaLi meethu aNaiththu viLaiyum amutha atharaththai
manam makizhavE aLiththu – maRavAthE
udal uyir athAy irukka unathu enathu enA maRikkai
oru pozhuthu oNAthu satRum – enavE thAn
urai sey madavAr aLiththa kalavi tharu thOthakaththai
ozhiya oru pOthakaththai – aruLvAyE
thada makuda nAka rathna pada(m) neLiya Adu pathma
saraNa yuka mAyanukku – marukOnE
saravaNamilE uthiththa kumara murukEsa chakra
sayilam valamAy nadaththu – mayil veerA
adal maruvu vEl karaththil azhaku peRavE iruththum
aRu mukava njAna thathva – neRi vAzhvE
asurar kula vErai vetti apayam ena Olamitta
amarar siRai meeLa vitta – perumALE