திருப்புகழ் 1100 அங்கதன் கண்டகன் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1100 Angkadhankandagan

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந்
தந்தனந் தந்தனந் – தனதான

அங்கதன் கண்டகன் பங்கிலன் பொங்குநெஞ்
சன்பிலன் துன்பவன் – புகழ்வாரா

அஞ்சொடுங் கும்பொதும் பொன்றையென் றுஞ்சுமந்
தங்குமிங் குந்திரிந் – திரைதேடுஞ்

சங்கடங் கொண்டவெஞ் சண்டிபண் டன்பெருஞ்
சஞ்சலன் கிஞ்சுகந் – தருவாயார்

தந்தொழும் பன்தழும் பன்பணிந் தென்றுநின்
தண்டையம் பங்கயம் – புகழ்வேனோ

கங்கையும் பொங்குநஞ் சம்பொருந் தும்புயங்
கங்களுங் திங்களுங் – கழுநீருங்

கஞ்சமுந் தும்பையுங் கொன்றையுஞ் சந்ததங்
கந்தமுந் துன்றுசெஞ் – சடையாளர்

பங்குதங் கும்பசுங் கொம்புதந் தின்புறும்
பந்தவெங் குண்டர்தங் – குலகாலா

பண்டிதன் கந்தனென் றண்டரண் டந்தொழும்
பண்புநண் பும்பெறும் – பெருமாளே.

பதம் பிரித்தது

தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந்
தந்தனந் தந்தனந் – தனதான

அங்கதன் கண்டகன் ப(பா)ங்கு இலன் பொங்கு நெஞ்சு
அன்பிலன் துன்பவன் – புகழ் வாரா

அஞ்சு ஒடுங்கும் பொதும்பு ஒன்றை என்றும் சுமந்து
அங்கும் இங்கும் திரிந்து – இரை தேடும்

சங்கடம் கொண்ட வெம் சண்டி பண்டன் பெரும்
சஞ்சலன் கிஞ்சுகம் தரு – வாயார்

தம் தொழும்பன் தழும்பன் பணிந்து என்று நின்
தண்டை அம் பங்கயம் – புகழ்வேனோ

கங்கையும் பொங்கு நஞ்சம் பொருந்தும்
புயங்கங்களும் திங்களும் – கழுநீரும்

கஞ்சமும் தும்பையும் கொன்றையும் சந்ததம்
கந்தமும் துன்று செம் – சடையாளர்

பங்கு தங்கும் பசும் கொம்பு தந்து இன்புறும்
பந்த வெம் குண்டர் தம் – குலகாலா

பண்டிதன் கந்தன் என்று அண்டர் அண்டம் தொழும்
பண்பு நண்பும் பெறும் – பெருமாளே.

English

angathan kaNdakan pangilan pongunenj
canpilan thunpavan – pukazhvArA

anjodung kumpothum ponRaiyen Runjuman
thanguming kunthirin – thiraithEdum

sangadang koNdavenj caNdipaN danperum
sanjalan kinjukan – tharuvAyAr

thanthozhum panthazhum panpaNin thenRunin
thaNdaiyam pangayam – pukazhvEnO

gangaiyum pongunanj camporun thumpuyang
kangaLum thingaLum – kazhuneerum

kanjamun thumpaiyum konRaiyunj canthatham
kanthamun thunRusenj – cadaiyALar

panguthang kumpasung komputhan thinpuRum
panthaveng kuNdartham – kulakAlA

paNdithan kanthanen RaNdaraN danthozhum
paNpunaN pumpeRum – perumALE.

English Easy Version

angathan kaNdakan pa(a)ngu ilan pongu nenju
anpilan thunpavan – pukazh vArA

anju odungum pothumpu onRai enRum sumanthu
angum ingum thirinthu – irai thEdum

sangadam koNda vem saNdi paNdan perum
sanjalan kinjukam – tharu vAyAr

tham thozhumpan thazhumpan paNinthu enRu nin
thaNdai am pangayam – pukazhvEnO

gangaiyum pongu nanjam porunthum puyangan
gaLum thingaLum – kazhuneerum

kanjamum thumpaiyum konRaiyum santhatham
kanthamum thunRu senj – cadaiyALar

pangu thangum pasum kompu thanthu inpuRum
Pantha vem kuNdar tham – kulakAlA

paNdithan kanthan enRu aNdar aNdam thozhum
paNpu naNpum peRum – perumALE.