Thiruppugal 1101 Thandhamumthunba
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந்
தந்தனந் தந்தனந் – தனதான
தந்தமுந் துன்பவெஞ் சிந்தைகொண் டந்தகன்
தண்டவொன் றன்றொடுங் – கிடுமாவி
தஞ்சமென் றும்பரிந் தின்சொல்வஞ் சந்தெரிந்
தன்றுமென் றுந்தனந் – தனைநாடி
நின்தனன் பென்பதொன் றின்றிநன் றென்றுநெஞ்
சின்கணன் பொன்றில்மங் – கையர்நேசம்
நின்றளந் துஞ்சளங் கொண்டிடும் புன்கணந்
தின்பமொன் றின்றியிங் – குழல்வேனோ
சுந்தரன் பந்தமுஞ் சிந்தவந் தன்புடன்
தொண்டனென் றன்றுகொண் – டிடுமாதி
தும்பைசெம் பொன்சொரிந் துந்தருங் கொன்றைதுன்
பங்கடிந் தென்பொடுந் – தொலையாநீர்
அந்தமுந் திந்துவுங் கெந்தமிஞ் சுங்கொழுந்
தன்றுமின் றும்புனைந் – திடும்வேணி
அன்பர்நெஞ் சின்புறுஞ் செஞ்சொலன் கந்தனென்
றண்டரண் டந்தொழும் – பெருமாளே.
பதம் பிரித்தது
தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந்
தந்தனந் தந்தனந் – தனதான
தந்தமும் துன்ப வெம் சிந்தை கொண்டு அந்தகன்
தண்ட ஒன்ற அன்று – ஒடுங்கிடும் ஆவி
தஞ்சம் என்றும் பரிந்து இன் சொல் வஞ்சம் தெரிந்த
அன்றும் என்றும் தனம் – தனை நாடி
நின் தன் அன்பு என்பது ஒன்று இன்றி நன்று என்று நெஞ்சின்
கண் நண்பு ஒன்று இல் – மங்கையர் நேசம்
நின்று அளந்தும் சளம் கொண்டிடும் புன்கண் நந்த
இன்பம் ஒன்று இன்றி இங்கு – உழல்வேனோ
சுந்தரன் பந்தமும் சிந்த வந்து அன்புடன் தொண்டன்
என்று அன்று கொண்டிடும் – ஆதி
தும்பை செம் பொன் சொரிந்தும் தரும் கொன்றை துன்பம்
கடிந்து என்பொடும் – தொலையா நீர்
அந்தம் முந்து இந்துவும் கெந்தம் மிஞ்சும் கொழுந்து
அன்றும் இன்றும் புனைந்திடும் – வேணி
அன்பர் நெஞ்சு இன்புறும் செம் சொ(ல்)லன் கந்தன்
என்று அண்டர் அண்டம் தொழும் – பெருமாளே
English
thanthamun thunpavem sinthaikoN danthakan
thaNdavon RanRodung – kidumAvi
thanjamen Rumparin thinsolvan jantherin
thanRumen Runthanan – thanainAdi
ninthanan penpathon RinRinan RenRunenj
cinkaNan ponRilmang – kaiyarnEsam
ninRaLan thunjaLang koNdidum punkaNan
thinpamon RinRiying – kuzhalvEnO
suntharan panthamunj sinthavan thanpudan
thoNdanen RanRukoN – didumAthi
thumpaisem ponsorin thuntharung konRaithun
pangadin thenpodun – tholaiyAneer
anthamun thinthuvung kenthaminj cungozhun
thanRumin Rumpunain – thidumvENi
anparnenj cinpuRunj cenjolan kanthanen
RaNdaraN danthozhum – perumALE.
English Easy Version
thanthamum thunpa vem sinthai koNdu anthakan
thaNda onRa anRu – odungidum Avi
thanjam enRum parinthu in sol vanjam therintha
anRum enRum thanam – thanai nAdi
nin than anpu enpathu onRu inRi nanRu enRu nenjin
kaN naNpu onRu il – mangaiyar nEsam
ninRu aLanthum saLam koNdidum punkaN nantha
inpam onRu inRi ingu – uzhalvEnO
suntharan panthamum sintha vanthu anpudan
thoNdan enRu anRu – koNdidum Athi
thumpai sem pon sorinthum tharum konRai thunpam
kadinthu enpodum – tholaiyA neer
antham munthu inthuvum kentham minjum kozhunthu
anRum inRum – punainthidum vENi
anpar nenju inpuRum sem so(l)lan kanthan
enRu aNdar aNdam thozhum – perumALE