திருப்புகழ் 1102 உம்பரார் அமுது (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1102 Umbararamudhu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்தனா தனதனந் தந்தனா தனதனந்
தந்தனா தனதனந் – தனதான.

உம்பரா ரமுதெனுந் தொண்டைவா யமுதமுண்
டுண்டுமே கலைகழன் – றயலாக

உந்திவா வியில்விழுந் தின்பமா முழுகியன்
பொன்றிலா ரொடுதுவண் – டணைமீதே

செம்பொனார் குடமெனுங் கொங்கையா பரணமுஞ்
சிந்தவாள் விழிசிவந் – தமராடத்

திங்கள்வேர் வுறவணைந் தின்பவா ரியில்விழுஞ்
சிந்தையே னெனவிதங் – கரைசேர்வேன்

கொம்புநா லுடையவெண் கம்பமால் கிரிவருங்
கொண்டல்ப்லோ மசையள்சங்க் – ரமபாரக்

கும்பமால் வரைபொருந் திந்த்ரபூ பதிதருங்
கொண்டலா னையைமணஞ் – செயும்வீரா

அம்புரா சியுநெடுங் குன்றுமா மரமுமன்
றஞ்சவா னவருறுஞ் – சிறைமீள

அங்கநான் மறைசொலும் பங்கயா சனமிருந்
தங்கைவே லுறவிடும் – பெருமாளே.

பதம் பிரித்தது

தந்தனா தனதனந் தந்தனா தனதனந்
தந்தனா தனதனந் – தனதான

உம்பரார் அமுது எனும் தொண்டை வாய் அமுதம் உண்டு
உண்டு மேகலை கழன்று – அயலாக

உந்தி வாவியில் விழுந்து இன்பமா(க) முழுகி அன்பு
ஒன்று இலாரொடு துவண்டு – அணை மீதே

செம் பொன் ஆர் குடம் எனும் கொங்கை ஆபரணமும்
சிந்த வாள் விழி சிவந்து – அமராட

திங்கள் வேர்வு உற அணைந்து இன்ப வாரியில் விழும்
சிந்தையேன் எ(ன்)னவிதம் – கரை சேர்வேன்

கொம்பு நாலு உடைய வெண் கம்ப(ம்) மால் கிரி வரும்
கொண்டல் புலோமசையள் – சங்க்ரம பார

கும்ப(ம்) மால் வரை பொருந்து இந்த்ர பூபதி தரும்
கொண்டல் ஆனையை மணம் – செயும் வீரா

அம்புராசியும் நெடும் குன்றும் மா மரமும்
அன்று அஞ்ச வானவர் உறும் – சிறை மீள

அங்க நான் மறை சொ(ல்)லும் பங்கயாசனம் இருந்து
அம் கை வேலு உற விடும் – பெருமாளே

English

umparA ramuthenun thoNdaivA yamuthamuN
duNdumE kalaikazhan – RayalAka

unthivA viyilvizhun thinpamA muzhukiyan
ponRilA roduthuvaN – daNaimeethE

semponAr kudamenum kongaiyA paraNamum
sinthavAL vizhisivan – thamarAdath

thingaLvEr vuRavaNain thinpavA riyilvizhum
sinthaiyE nenavithang – karaisErvEn

kompunA ludaiyaveN kampamAl kirivarum
koNdalplO masaiyaLsang – ramapArak

kumpamAl varaiporun thinthrapU pathitharum
koNdalA naiyaimaNam – seyumveerA

ampurA siyunedung kunRumA maramuman
RanjavA navaruRum- siRaimeeLa

anganAn maRaisolum pangayA sanamirun
thangaivE luRavidum – perumALE.

English Easy Version

umparAr amuthu enum thoNdai vAy amutham
uNdu uNdu mEkalai kazhanRu – ayalAka

unthi vAviyil vizhunthu inpamA(ka) muzhuki
anpu onRu ilArodu thuvaNdu – aNai meethE

sem pon Ar kudam enum kongai AparaNamum
sintha vAL vizhi sivanthu – amarAda

thingaL vErvu uRa aNainthu inpa vAriyil vizhum
sinthaiyEn e(n)navitham – karai sErvEn

kompu nAlu udaiya veN kampa(m) mAl kiri varum
koNdal pulOmasaiyaL – sangrama pAra

kumpa(m) mAl varai porunthu inthra pUpathi tharum
koNdal Anaiyai maNam – seyum veerA

ampurAsiyum nedum kunRum mA maramum
anRu anja vAnavar uRum – siRai meeLa

anga nAn maRai so(l)lum pangayAsanam irunthu
am kai vElu uRa vidum – perumALE