திருப்புகழ் 1103 வண்டுதான் மிக (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1103 Vandudhanmiga

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்தனா தனதனந் தந்தனா தனதனந்
தந்தனா தனதனந் – தனதான

வண்டுதான் மிகவிடங் கொண்டகா ரளகமென்
பந்திமா மலர்சொரிந் – துடைசோர

வம்புசேர் கனிபொருந் தின்பவா யமுதருந்
தந்தமா மதனலம் – விதமாக

விண்டுமே னிகள்துவண் டன்றில்போ லுளமிரண்
டொன்றுமா யுறவழிந் – தநுபோகம்

விஞ்சவே தருமிளங் கொங்கையார் வினைகடந்
துன்றன்மே லுருகஎன் – றருள்வாயே

பண்டுபா ரினையளந் துண்டமால் மருகசெம்
பைம்பொன்மா நகரிலிந் – திரன்வாழ்வு

பண்பெலா மிகுதிபொங் கின்பயா னையைமணந்
தன்பினோ ரகமமர்ந் – திடுவோனே

அண்டர்தா மதிபயங் கொண்டுவா டிடநெடுந்
தண்டுவாள் கொடுநடந் – திடுசூரன்

அங்கமா னதுபிளந் தெங்கும்வீ ரிடவெகுண்
டங்கைவே லுறவிடும் – பெருமாளே.

பதம் பிரித்தது

தந்தனா தனதனந் தந்தனா தனதனந்
தந்தனா தனதனந் – தனதான

வண்டுதான் மிக இடம் கொண்ட கார் அளகமென்
பந்திமா மலர்சொரிந்து – உடைசோர

வம்புசேர் கனிபொருந்தி இன்பவாய் அமுதருந்து
அந்த மா மதன் நலம் – விதமாக

விண்டு மேனிகள் துவண்டு அன்றில்போல் உளம் இரண்டு
ஒன்றுமாய் உறவு அழிந்து – அநுபோகம்

விஞ்சவே தரும் இளங் கொங்கையார் வினைகடந்து
உன்றன்மேல் உருக என்று – அருள்வாயே

பண்டு பாரினை அளந்து உண்டமால் மருக செம் பைம்
பொன்மா நகரில் – இந்திரன்வாழ்வு

பண்பெலா(ம்) மிகுதி பொங்கு இன்ப யானையை மணந்து
அன்பினோர் அகம் – அமர்ந்திடுவோனே

அண்டர்தாம் அதிபயங் கொண்டு வாடிட நெடுந்
தண்டுவாள் கொடுநடந்திடு – சூரன்

அங்கமானது பிளந்து எங்கும் வீரிட வெகுண்டு
அங்கை வேல் உற விடும் – பெருமாளே

English

vaNduthAn mikavidang koNdakA raLakamen
panthimA malarsorin – thudaisOra

vampusEr kaniporun thinpavA yamutharun
thanthamA mathanalam – vithamAka

viNdumE nikaLthuvaN danRilpO luLamiraN
donRumA yuRavazhin – thanupOkam

vinjavE tharumiLang kongaiyAr vinaikadan
thunRanmE lurukaen – RaruLvAyE

paNdupA rinaiyaLan thuNdamAl marukasem
paimponmA nakarilin – thiranvAzhvu

paNpelA mikuthipong kinpayA naiyaimaNan
thanpinO rakamamarn – thiduvOnE

aNdarthA mathipayang koNduvA didanedun
thaNduvAL kodunadan – thiducUran

angamA nathupiLan thengumvee ridavekuN
dangaivE luRavidum – perumALE.

English Easy Version

vaNduthAn mika idam koNda kAr aLakamen
panthimA malarsorinthu – udaisOra

vampusEr kaniporunthi inpavAy amutharunthu
antha mA mathan nalam – vithamAka

viNdu mEnikaL thuvaNdu anRilpOl uLam iraNdu
onRumAy uRavu azhinthu – anupOkam

vinjavE tharum iLang kongaiyAr vinaikadanthu
unRanmEl uruka enRu – aruLvAyE

paNdu pArinai aLanthu uNdamAl maruka
sem paim ponmA nakaril – inthiranvAzhvu

paNpelA(m) mikuthi pongu inpa yAnaiyai maNanthu
anpinOr akam amarn – thiduvOnE

aNdarthAm athipayang koNdu vAdida nedun
thaNduvAL kodunadanthidu – cUran

angamAnathu piLanthu engum veerida vekuNdu
angai vEl uRa vidum – perumALE