திருப்புகழ் 1104 காதல் மோகம் தரும் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1104 Kadhalmogamtharum

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானனா தந்தனந் தானனா தந்தனந்
தானனா தந்தனந் – தனதான

காதல்மோ கந்தருங் கோதைமார் கொங்கைசிங்
காரநா கஞ்செழுங் – கனிவாய்கண்

காளகூ டங்கொடுங் காலரூ பம்பொருங்
காமபா ணஞ்சுரும் – பினம்வாழும்

ஓதிகார் செஞ்சொல்மென் பாகுதே னென்றயர்ந்
தோநமோ கந்தஎன் – றுரையாதே

ஊசலா டும்புலன் தாரியே சென்றுநின்
றோயுமா றொன்றையுங் – கருதாதோ

தாதகீ சண்பகம் பூகமார் கந்தமந்
தாரம்வா சந்திசந் – தனநீடு

சாமவே தண்டவெங் கோபகோ தண்டசந்
தானமா தெங்கள்பைம் – புனமேவும்

தீதிலா வஞ்சியஞ் சீதபா தம்படுஞ்
சேகரா தண்டையங் – கழல்பேணித்

தேவிபா கம்பொருந் தாதிநா தன்தொழுந்
தேசிகா வும்பர்தம் – பெருமாளே.

பதம் பிரித்தது

தானனா தந்தனந் தானனா தந்தனந்
தானனா தந்தனந் – தனதான

காதல் மோகம் தரும் கோதைமார் கொங்கை சிங்கார
நாகம் செழும் – கனி வாய் கண்

காள கூடம் கொடும் கால ரூபம் பொரும்
காம பாணம் சுரும்பினம் – வாழும்

ஓதி கார் செம் சொல் மென் பாகு தேன் என்று அயர்ந்து
ஓம் நமோ கந்தா என்று – உரையாதே

ஊசலாடும் புலன் தாரியே சென்று நின்று
ஓயும் ஆறு ஒன்றையும் – கருதாதோ

தாதகீ சண்பகம் பூகம் ஆர் கந்த மந்தாரம்
வாசந்தி சந்தன(ம்) – நீடு

சாம வேதண்டம் வெம் கோப கோதண்டம்
சந்தானம் மாது எங்கள் பைம் – புனம் மேவும்

தீதிலா வஞ்சி அம் சீத பாதம் படும்
சேகரா தண்டை அம் – கழல் பேணி

தேவி பாகம் பொருந்து ஆதி நாதன் தொழும்
தேசிகா உம்பர் தம் – பெருமாளே

English

kAthalmO kantharum kOthaimAr kongaising
kAranA kamchezhung – kanivAykaN

kALakU damkodum kAlarU pamporum
kAmapA Nanjurum – pinamvAzhum

OthikAr sencholmen pAkuthE nenRayarn
thOnamO kanthaen – RuraiyAthE

UsalA dumpulan thAriyE senRunin
ROyumA RonRaiyum – karuthAthO

thAthakee caNpakam pUkamAr kanthaman
thAramvA santhisan – thananeedu

sAmavE thaNdavem kOpakO thaNdasan
thAnamA thengaLpaim – punamEvum

theethilA vanjiyam ceethapA thampadum
sEkarA thaNdaiyang – kazhalpENith

thEvipA kamporun thAthinA thanthozhum
thEsikA vumpartham – perumALE.

English Easy Version

kAthal mOkam tharum kOthaimAr kongai singAra
nAkam sezhum kani – vAy kaN

kALa kUdam kodum kAla rUpam porum
kAma pANam surumpinam – vAzhum

Othi kAr sem sol men pAku thEn enRu ayarnthu
Om namO kanthA enRu – uraiyAthE

UsalAdum pulan thAriyE senRu ninRu
Oyum ARu onRaiyum – karuthAthO

thAthakee saNpakam pUkam Ar kantha manthAram
vAsanthi santhana(m) – needu

sAma vEthaNdam vem kOpa kOthaNdam santhAnam
mAthu engaL paim – punam mEvum

theethilA vanji am seetha pAtham padum
sEkarA thaNdai am – kazhal pENi

thEvi pAkam porunthu Athi nAthan thozhum
thEsikA umpar tham – perumALE