திருப்புகழ் 1105 கோல காலத்தை (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1105 Kolakalaththai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானனா தத்தனத் தானனா தத்தனத்
தானனா தத்தனத் – தனதான

கோலகா லத்தைவிட் டாசுபா டக்கொடிக்
கோவைபா டக்கொடிக் – கொடிவாதிற்

கோடிகூ ளக்கவிச் சேனைசா டக்கெடிக்
கூறுகா ளக்கவிப் – புலவோன்யான்

சீலகா லப்புயற் பாரிசா தத்தருத்
த்யாகமே ருப்பொருப் – பெனவோதுஞ்

சீதரா சித்ரவித் தாரமே செப்பிடக்
கேளெனா நிற்பதைத் – தவிர்வேனோ

ஆலகா லப்பணிப் பாயல்நீ ளப்படுத்
தாரவா ரக்கடற் – கிடைசாயும்

ஆழிமா லுக்குநற் சாமவே தற்குமெட்
டாதரூ பத்தினிற் – சுடராய

காலகா லப்ரபுச் சாலுமா லுற்றுமைக்
காகவே ளைப்புகக் – கழுநீராற்

காதும்வே ழச்சிலைப் பாரமீ னக்கொடிக்
காமவேள் மைத்துனப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தானனா தத்தனத் தானனா தத்தனத்
தானனா தத்தனத் – தனதான

கோலகாலத்தை விட்டு ஆசு பாடக் கொடி
கோவை பாட கொடிக் – கொ(ட்)டி வாதில்

கோடி கூள(ம்) கவிச் சேனை சாடக் கெடிக்
கூறு காளக் கவிப் – புலவோன் யான்

சீல காலப் புயல் பாரிசாதம் தரு
த்யாக மேருப் பொருப்பு – என ஓதும்

சீதரா சித்ர வித்தாரமே செப்பிடக்
கேள் எனா நிற்பதைத் – தவிர்வேனோ

ஆல காலப் பணிப் பாயல் நீளப் படுத்து
ஆரவாரக் கடற்கு – இடை சாயும்

ஆழி மாலுக்கு நல் சாம வேதற்கும்
எட்டாத ரூபத்தினில் – சுடர் ஆய

கால கால ப்ரபு சாலும் மாலுற்று உமைக்காக
வேளைப் புகக் – கழு நீரால்

காதும் வேழச் சிலைப்பாரம் மீனக் கொடிக்
காம வேள் மைத்துனப் – பெருமாளே

English

kOlakA laththaivit tAsupA dakkodik
kOvaipA dakkodik – kodivAthiR

kOdikU Lakkavic chEnaisA dakkedik
kURukA Lakkavip – pulavOnyAn

seelakA lappuyaR pArisA thaththaruth
thyAkamE rupporup – penavOthum

seetharA sithravith thAramE seppidak
kELenA niRpathaith – thavirvEnO

AlakA lappaNip pAyalnee Lappaduth
thAravA rakkadaR – kidaisAyum

AzhimA lukkunaR chAmavE thaRkumet
tAtharU paththiniR – chudarAya

kAlakA laprapuc chAlumA lutRumaik
kAkavE Laippukak – kazhuneerAR

kAthumvE zhacchilaip pAramee nakkodik
kAmavEL maiththunap – perumALE.

English Easy Version

kOlakAlaththai vittu Asu pAdak kodi .
kOvai pAda kodik – ko(t)ti vAthil

kOdi kULa(m) kavic chEnai sAdak kedik
kURu kALak kavip – pulavOn yAn

seela kAlap puyal pArisAtham tharu
thyAka mErup poruppu – ena Othum

seetharA sithra viththAramE seppidak
kEL enA niRpathaith – thavirvEnO

Ala kAlap paNip pAyal neeLap paduththu
AravArak kadaRku – idai sAyum

Azhi mAlukku nal sAma vEthaRkum ettAtha
rUpaththinil – sudar Aya

kAla kAla prapu sAlum mAlutRu umaikkAka
vELaip pukak – kazhu neerAl

kAthum vEzhac chilaippAram meenak kodik
kAma vEL maiththunap – perumALE