Thiruppugal 1106 Gnalamoduoppa
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தானனா தத்தனத் தானனா தத்தனத்
தானனா தத்தனத் – தனதான
ஞாலமோ டொப்பமக் காளெனா நற்சொலைத்
தீதெனா நற்றவத் – தணைவோர்தம்
நாதமோ டுட்கருத் தோடவே தர்க்கமிட்
டோயுநா யொப்பவர்க் – கிளையாதே
நீலமே னிக்குலத் தோகைமே லுற்றுநிட்
டூரசூர் கெட்டுகப் – பொரும்வேலா
நேசமாய் நித்தநிற் றாளைநீ ளச்சமற்
றோதநீ திப்பொருட் – டரவேணும்
கோலவா ரிக்கிடைக் கோபரா விற்படுத்
தானும்வே தக்குலத் – தயனாருங்
கூறும்வா னப்புவிக் கூறுதீ ரக்குறிப்
போதுறா நிற்பஅக் – கொடிதான
காலன்மார் புற்றுதைத் தானுமோர் கற்புடைக்
கோதைகா மக்கடற் – கிடைமூழ்கக்
காவிசேர் கொத்தலர்ப் பாணமேய் வித்தகக்
காமவேள் மைத்துனப் – பெருமாளே.
பதம் பிரித்தது
தானனா தத்தனத் தானனா தத்தனத்
தானனா தத்தனத் – தனதான
ஞாலமோடு ஒப்ப மக்காள் எனா நல் சொலைத்
தீது எனா நல் தவத்து – அணைவோர் தம்
நாதமோடு உள் கருத்து ஓடவே தர்க்கம் இட்டு
ஓயு(ம்) நாய் ஒப்பவர்க்கு – இளையாதே
நீல மேனிக் குலத் தோகை மேல் உற்று நிட்டூர
சூர் கெட்டு உகப் – பொரும் வேலா
நேசமாய் நித்த(ம்) நின் தாளை நீள் அச்சம் அற்று
ஓத நீதிப் பொருள் – தர வேணும்
கோல வாரிக்கு இடைக் கோப அராவில் படுத்தானும்
வேதக் குலத்து – அயனாரும்
கூறும் வானப் புவிக்கு ஊறு தீரக் குறிப்பு
ஓதுறா நிற்ப அக் – கொடிதான
காலன் மார்பு உற்று உதைத்தானும் ஓர் கற்பு உடைக்
கோதை காமக் கடற்கு – இடை மூழ்க
காவி சேர் கொத்தலர்ப் பாணம் ஏய் வித்தகக்
காம வேள் மைத்துனப் – பெருமாளே
English
njAlamO doppamak kALenA naRcholaith
theethenA natRavath – thaNaivOrtham
nAthamO dutkaruth thOdavE tharkkamit
tOyunA yoppavark – kiLaiyAthE
neelamE nikkulath thOkaimE lutRunit
tUracUr kettukap – porumvElA
nEsamAy niththanit RALainee Lacchamat
ROthanee thipporut – taravENum
kOlavA rikkidaik kOparA viRpaduth
thAnumvE thakkulath – thayanArum
kURumvA nappuvik kURuthee rakkuRip
pOthuRA niRpaak – kodithAna
kAlanmAr putRuthaith thAnumOr kaRpudaik
kOthaikA makkadaR – kidaimUzhkak
kAvisEr koththalarp pANamEy viththakak
kAmavEL maiththunap – perumALE.
English Easy Version
njAlamOdu oppa makkAL enA nal solaith
theethu enA nal thavaththu – aNaivOr tham
nAthamOdu uL karuththu OdavE tharkkam ittu
Oyu(m) nAy oppavarkku – iLaiyAthE
neela mEnik kulath thOkai mEl utRu nittUra
cUr kettu ukap – porum vElA
nEsamAy niththa(m) nin thALai neeL accham
atRu Otha neethip poruL – thara vENum
kOla vArikku idaik kOpa arAvil paduth
thAnum vEthak kulaththu – ayanArum
kURum vAnap puvikku URu theerak kuRippu
OthuRA niRpa ak – kodithAna
kAlan mArpu utRu uthaiththAnum Or kaRpu udaik
kOthai kAmak kadaRku – idai mUzhka
kAvi sEr koththalarp pANam Ey viththakak
kAma vEL maiththunap – perumALE.