திருப்புகழ் 1107 கரவுசேர் மகளிர் (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1107 Karavusermagalir

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனா தனதனந் தனதனா தனதனந்
தனதனா தனதனந் – தனதான

கரவுசேர் மகளிர்குங் குமபயோ தரதனங்
களினறா துயில்வதுஞ் – சரிபேசுங்

கரசரோ ருகநகம் படவிடாய் தணிவதுங்
கமலநா பியின்முயங் – கியவாழ்வும்

அரவுபோ லிடைபடிந் திரவெலா முழுகுமின்
பநல்மகோ ததிநலம் – பெறுமாறும்

அதரபா னமுதமுந் தவிரவே மவுனபஞ்
சரமனோ லயசுகந் – தருவாயே

பரவுமா யிரமுகங் கொடுதிசா முகதலம்
படர்பகீ ரதிவிதம் – பெறஆடல்

பயில்பணா வனமுகந் தகுணமா சுணகணம்
பனிநிலா வுமிழுமம் – புலிதாளி

குரவுகூ விளமரும் பிதழிதா தகிநெடுங்
குடிலவே ணியிலணிந் – தவராகங்

குழையஆ தரவுடன் தழுவுநா யகிதருங்
குமரனே யமரர்தம் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனா தனதனந் தனதனா தனதனந்
தனதனா தனதனந் – தனதான

கரவு சேர் மகளிர் குங்கும பயோதர தனங்களின்
அறா துயில்வதும் – சரி பேசும்

கர சரோருக(ம்) நகம் பட விடாய் தணிவதும்
கமல நாபியின் முயங்கிய – வாழ்வும்

அரவு போல் இடை படிந்து இரவெலா(ம்) முழுகும் இன்ப
நல் மகா உததி நலம் – பெறுமாறும்

அதர பான அமுதமும் தவிரவே மவுன பஞ்சர
மனோலய சுகம் – தருவாயே

பரவும் ஆயிரம் முகம் கொடு திசா முக தலம்
படர் பகீரதி விதம் பெற – ஆடல்

பயில் பணா வனம் உகந்த குண மாசுண கணம்
பனி நிலா உமிழும் – அம்புலி தாளி

குரவு கூவிளம் அரும்பு இதழி தாதகி நெடும்
குடில வேணியில் அணிந்தவர் – ஆகம்

குழைய ஆதரவுடன் தழுவு நாயகி தரும்
குமரனே அமரர் தம் – பெருமாளே

English

karavusEr makaLirkung kumapayO tharathanang
kaLinaRA thuyilvathum – saripEsung

karasarO rukanakam padavidAy thaNivathung
kamalanA piyinmuyang – kiyavAzhvum

aravupO lidaipadin thiravelA muzhukumin
panalmakO thathinalam – peRumARum

atharapA namuthamun thaviravE mavunapanj
charamanO layasukan – tharuvAyE

paravumA yiramukang koduthisA mukathalam
padarpakee rathivitham – peRaAdal

payilpaNA vanamukan thakuNamA suNakaNam
paninilA vumizhumam – pulithALi

kuravukU viLamarum pithazhithA thakinedung
kudilavE NiyilaNin – thavarAkang

kuzhaiyaA tharavudan thazhuvunA yakitharung
kumaranE yamarartham – perumALE.

English Easy Version

karavu sEr makaLir kungkuma payOthara thanangaLin
aRA thuyilvathum – sari pEsum

kara sarOruka(m) nakam pada vidAy thaNivathum
kamala nApiyin muyangkiya – vAzhvum

aravu pOl idai padinthu iravelA(m) muzhukum inpa
nal makA uthathi nalam – peRumARum

athara pAna amuthamum thaviravE mavuna panjara
manOlaya sukam – tharuvAyE

paravum Ayiram mukam kodu thisA muka thalam
padar pakeerathi vitham- peRa Adal

payil paNA vanam ukantha kuNa mAsuNa kaNam
pani nilA umizhum – ampuli thALi

kuravu kUviLam arumpu ithazhi thAthaki nedum
kudila vENiyil – aNinthavar Akam

kuzhaiya Atharavudan thazhuvu nAyaki tharum
kumaranE amarar tham – perumALE