Thiruppugal 1108 Vadivavelthanai
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதனா தனதனந் தனதனா தனதனந்
தனதனா தனதனந் – தனதான
வடிவவேல் தனைவெகுண் டிளைஞரா வியைவளைந்
தமர்செய்வாள் விழியர்நெஞ் – சினில்மாயம்
வளரமால் தனைமிகுந் தவர்கள்போ லளவிவந்
தணுகுமா நிதிகவர்ந் – திடுமாதர்
துடியைநே ரிடைதனந் துவளவே துயில்பொருந்
தமளிதோய் பவர்வசஞ் – சுழலாதே
தொலைவிலா இயல்தெரிந் தவலமா னதுகடந்
துனதுதாள் தொழமனந் – தருவாயே
படியெலா முடியநின் றருளுமா லுதவுபங்
கயனுநான் மறையுமும் – பரும்வாழப்
பரவையூ டெழுவிடம் பருகிநீள் பவுரிகொண்
டலகையோ டெரிபயின் – றெருதேறிக்
கொடியவா ளரவிளம் பிறையினோ டலைசலங்
குவளைசேர் சடையர்தந் – திருமேனி
குழையஆ தரவுடன் தழுவுநா யகிதருங்
குமரனே யமரர்தம் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதனா தனதனந் தனதனா தனதனந்
தனதனா தனதனந் – தனதான
வடிவ வேல் தனை வெகுண்டு இளைஞர் ஆவியை வளைந்து
அமர் செய் வாள் விழியர் – நெஞ்சினில் மாயம்
வளர மால் தனை மிகுந்தவர்கள் போல் அளவி வந்து
அணுகும் மா நிதி – கவர்ந்திடு மாதர்
துடியை நேர் இடை தனம் துவளவே துயில் பொருந்து
அமளி தோய்பவர் வசம் – சுழலாதே
தொலைவு இலா இயல் தெரிந்து அவலமானது கடந்து
உனது தாள் தொழ மனம் – தருவாயே
படி எலா(ம்) முடிய நின்று அருளு(ம்) மால் உதவு பங்கயனும்
நான் மறையும் – உம்பரும் வாழ
பரவை ஊடு எழு விடம் பருகி நீள் பவுரி கொண்டு
அலகையோடு எரி பயின்று – எருது ஏறி
கொடிய வாள் அரவு இளம் பிறையினோடு அலை சலம்
குவளை சேர் சடையர் தம் – திருமேனி
குழைய ஆதரவுடன் தழுவு நாயகி தரும்
குமரனே அமரர் தம் – பெருமாளே
English
vadivavEl thanaivekuN diLainjarA viyaivaLain
thamarseyvAL vizhiyarnen – jinilmAyam
vaLaramAl thanaimikun thavarkaLpO laLavivan
thaNukumA nithikavarn – thidumAthar
thudiyainE ridaithanan thuvaLavE thuyilporun
thamaLithOy pavarvasam- cuzhalAthE
tholaivilA iyaltherin thavalamA nathukadan
thunathuthAL thozhamanan – tharuvAyE
padiyelA mudiyanin RaruLumA luthavupang
kayanunAn maRaiyumum – parumvAzhap
paravaiyU dezhuvidam parukineeL pavurikoN
dalakaiyO deripayin – ReruthERik
kodiyavA LaraviLam piRaiyinO dalaicalam
kuvaLaisEr sadaiyarthan – thirumEni
kuzhaiyaA tharavudan thazhuvunA yakitharum
kumaranE yamarartham – perumALE.
English Easy Version
vadiva vEl thanai vekuNdu iLainjar Aviyai vaLainthu
amar sey vAL vizhiyar – nenjinil mAyam
vaLara mAl thanai mikunthavarkaL pOl aLavi vanthu
aNukum mA nithi kavarnthidu – mAthar
thudiyai nEr idai thanam thuvaLavE thuyil porunthu
amaLi thOypavar vasam – suzhalAthE
tholaivu ilA iyal therinthu avalamAnathu kadanthu
unathu thAL thozha manam – tharuvAyE
padi elA(m) mudiya ninRu aruLu(m) mAl uthavu pangayanum
nAn maRaiyum – umparum vAzha
paravai Udu ezhu vidam paruki neeL pavuri koNdu
alakaiyOdu eri payinRu – eruthu ERi
kodiya vAL aravu iLam piRaiyinOdu alai calam
kuvaLai sEr sadaiyar tham – thirumEni
kuzhaiya Atharavudan thazhuvu nAyaki tharum
kumaranE amarar tham – perumALE