Thiruppugal 1109 Kattamurunoi
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தத்ததன தானான தத்ததன தானான
தத்ததன தானான – தனதான
கட்டமுறு நோய்தீமை யிட்டகுடில் மாமாய
கட்டுவிடு மோர்கால – மளவாவே
கத்தவுற வோர்பாலர் தத்தைசெறி வார்வாழ்வு
கற்புநெறி தான்மாய – வுயர்காலன்
இட்டவொரு தூதாளு முட்டவினை யால்மூடி
யிட்டவிதி யேயாவி – யிழவாமுன்
எத்தியுனை நாடோறு முத்தமிழி னாலோத
இட்டமினி தோடார – நினைவாயே
துட்டரென ஏழ்பாரு முட்டவினை யாள்சூரர்
தொக்கில்நெடு மாமார்பு – தொளையாகத்
தொட்டவடி வேல்வீர நட்டமிடு வார்பால
சுத்ததமி ழார்ஞான – முருகோனே
மட்டுமரை நால்வேத னிட்டமலர் போல்மேவ
மத்தமயில் மீதேறி – வருநாளை
வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழ
வைத்தபடி மாறாத – பெருமாளே.
பதம் பிரித்தது
தத்ததன தானான தத்ததன தானான
தத்ததன தானான – தனதான
கட்டம் உறு நோய் தீமை இட்ட குடில் மா மாய
கட்டுவிடும் ஓர் காலம் – அளவாவே
கத்த உறவோர் பாலர் தத்தை செறிவார் வாழ்வு
கற்பு நெறி தான் மாய – உயர் காலன்
இட்ட ஒரு தூதாளும் முட்ட வினையால் மூடி
இட்ட விதியே ஆவி – இழவா முன்
எத்தி உனை நாடோறும் முத்தமிழினால் ஓத
இட்டம் இனிதோடு ஆர – நினைவாயே
துட்டர் என ஏழ் பாரும் முட்ட வினையாள் சூரர்
தொக்கில் நெடு மா மார்பு – தொளையாக
தொட்ட வடிவேல் வீர நட்டம் இடுவார் பால
சுத்த தமிழ் ஆர் ஞான – முருகோனே
மட்டு மரை நால் வேதன் இட்ட மலர் போல் மேவ
மத்த மயில் மீது ஏறி – வரு நாளை
வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ
வைத்த படி மாறாத – பெருமாளே.
English
kattamuRu nOytheemai yittakudil mAmAya
kattuvidu mOrkAla – maLavAvE
kaththavuRa vOrpAlar thaththaiseRi vArvAzhvu
kaRpuneRi thAnmAya – vuyarkAlan
ittavoru thUthALu muttavinai yAlmUdi
yittavithi yEyAvi – yizhavAmun
eththiyunai nAdORu muththamizhi nAlOtha
ittamini thOdAra – ninaivAyE
thuttarena EzhpAru muttavinai yALcUrar
thokkilnedu mAmArpu – thoLaiyAkath
thottavadi vElveera nattamidu vArbAla
suththathami zhArnjAna – murukOnE
mattumarai nAlvEtha nittamalar pOlmEva
maththamayil meethERi – varunALai
vaiththanithi pOlnAdi niththamadi yArvAzha
vaiththapadi mARAtha – perumALE.
English Easy Version
kattam uRu nOy theemai itta kudil mA mAya
kattuvidum Or kAlam – aLavAvE
kaththa uRavOr pAlar thaththai seRivAr vAzhvu
kaRpu neRi thAn mAya – uyar kAlan
itta oru thUthALum mutta vinaiyAl mUdi
itta vithiyE Avi – izhavA mun
eththi unai nAdORum muththamizhinAl Otha
ittam inithOdu Ara – ninaivAyE
thuttar ena Ezh pArum mutta vinaiyAL cUrar
thokkil nedu mA mArpu – thoLaiyAka
thotta vadivEl veera nattam iduvAr pAla
suththa thamizh Ar njAna – murukOnE
mattu marai nAl vEthan itta malar pOl mEva
maththa mayil meethu ERi – varu nALai
vaiththa nithi pOl nAdi niththam adiyAr vAzha
vaiththa padi mARAtha – perumALE.