Thiruppugal 1110 Pakkamuranerana
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தத்ததன தானான தத்ததன தானான
தத்ததன தானான – தனதான
பக்கமுற நேரான மக்களுட னேமாதர்
பத்தியுடன் மேல்மூடி – யினிதான
பட்டினுட னேமாலை யிட்டுநெடி தோர்பாடை
பற்றியணை வோர்கூவி – யலைநீரிற்
புக்குமுழு காநீடு துக்கமது போய்வேறு
பொற்றியிட வேயாவி – பிரியாமுன்
பொற்கழலை நாடோறு முட்பரிவி னாலோது
புத்திநெடி தாம்வாழ்வு – புரிவாயே
இக்கனுக வேநாடு முக்கணர்ம காதேவர்
எப்பொருளு மாமீசர் – பெருவாழ்வே
எட்டவரி தோர்வேலை வற்றமுது சூர்மாள
எட்டியெதி ரேயேறு – மிகல்வேலா
மக்களொடு வானாடர் திக்கில்முனி வோர்சூழ
மத்தமயில் மீதேறி – வருவோனே
வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழ
வைத்தபடி மாறாத – பெருமாளே.
பதம் பிரித்தது
தத்ததன தானான தத்ததன தானான
தத்ததன தானான – தனதான
பக்கம் உற நேரான மக்களுடனே மாதர்
பத்தியுடன் மேல் மூடி- இனிதான
பட்டின் உடனே மாலை இட்டு நெடிது ஓர் பாடை
பற்றி அணைவோர் கூவி – அலை நீரில்
புக்கு முழுகா நீடு துக்கம் அது போய் வேறு
பொன் தீ இடவே ஆவி – பிரியா முன்
பொன் கழலை நாள் தோறும் உள் பரிவினால் ஓது(ம்)
புத்தி நெடிது ஆம் வாழ்வு – புரிவாயே
இக்கன் உகவே நாடு(ம்) முக்க(ண்)ணர் மகா தேவர்
எப்பொருளும் ஆம் ஈசர் – பெரு வாழ்வே
எட்ட அரிது ஓர் வேலை வற்ற முது சூர் மாள
எட்டி எதிரே ஏறும் – இகல் வேலா
மக்களோடு வான் நாடர் திக்கில் முனிவோர் சூழ
மத்த மயில் மீது ஏறி – வருவோனே
வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ
வைத்த படி மாறாத – பெருமாளே.
English
pakkamuRa nErAna makkaLuda nEmAthar
paththiyudan mElmUdi – yinithAna
pattinuda nEmAlai yittunedi thOrpAdai
patRiyaNai vOrkUvi – yalaineeriR
pukkumuzhu kAneedu thukkamathu pOyvERu
potRiyida vEyAvi – piriyAmun
poRkazhalai nAdORu mutparivi nAlOthu
puththinedi thAmvAzhvu – purivAyE
ikkanuka vEnAdu mukkaNarma kAthEvar
epporuLu mAmeesar – peruvAzhvE
ettavari thOrvElai vatRamuthu cUrmALa
ettiyethi rEyERu – mikalvElA
makkaLodu vAnAdar thikkilmuni vOrsUzha
maththamayil meethERi – varuvOnE
vaiththanithi pOlnAdi niththamadi yArvAzha
vaiththapadi mARAtha – perumALE.
English Easy Version
pakkam uRa nErAna makkaLudanE mAthar
paththiyudan mEl mUdi – inithAna
pattin udanE mAlai ittu nedithu Or pAdai
patRi aNaivOr kUvi – alai neeril
pukku muzhukA needu thukkam athu pOy vERu
pon thee idavE Avi – piriyA mun
pon kazhalai nAL thORum uL parivinAl Othu(m)
puththi nedithu Am vAzhvu – purivAyE
ikkan ukavE nAdu(m) mukka(N)Nar makA thEvar
epporuLum Am eesar – peru vAzhvE
etta arithu Or vElai vatRa muthu cUr mALa
etti ethirE ERum – ikal vElA
makkaLOdu vAn nAdar thikkil munivOr Cuzha
maththa mayil meethu ERi – varuvOnE
vaiththa nithi pOl nAdi niththam adiyAr vAzha
vaiththa padi mARAtha – perumALE