திருப்புகழ் 1111 நீரு நிலம் அண்டாத (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1111 Neerunilamandadha

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானதன தந்தான தானதன தந்தான
தானதன தந்தான – தனதான

நீருநில மண்டாத தாமரைப டர்ந்தோடி
நீளமக லஞ்சோதி – வடிவான

நேசமல ரும்பூவை மாதின்மண மும்போல
நேர்மருவி யுண்காத – லுடன்மேவிச்

சூரியனு டன்சோம னீழலிவை யண்டாத
சோதிமரு வும்பூமி – யவையூடே

தோகைமயி லின்பாக னாமெனம கிழ்ந்தாட
சோதிஅயி லுந்தாரு – மருள்வாயே

வாரியகி லங்கூச ஆயிரப ணஞ்சேடன்
வாய்விடவொ டெண்பாலு – முடுபோல

வார்மணியு திர்ந்தோட வேகவினி றைந்தாட
மாமயில்வி டுஞ்சேவல் – கொடியோனே

ஆரியன வன்தாதை தேடியின மும்பாடு
மாடலரு ணஞ்சோதி – யருள்பாலா

ஆனைமுக வன்தேடி யோடியெய ணங்காத
லாசைமரு வுஞ்சோதி – பெருமாளே

பதம் பிரித்தது

தானதன தந்தான தானதன தந்தான
தானதன தந்தான – தனதான

நீரு(ம்) நிலம் அண்டாத தாமரை படர்ந்து ஓடி
நீளம் அகலம் சோதி – வடிவான

நேச மலரும் பூவை மாதின் மணமும் போல
நேர் மருவி உண் காதலுடன் – மேவி

சூரியனுடன் சோமன் நீழல் இவை அண்டாத
சோதி மருவும் பூமி – அவை ஊடே

தோகை மயிலின் பாகனாம் என மகிழ்ந்து ஆட
சோதி அயிலும் தாரும் – அருள்வாயே

வாரி அகிலம் கூச ஆயிரம் பணம் சேடன்
வாய் விட ஒடு எண் பாலும் – உடு போல

வார் மணி உதிர்ந்து ஓடவே கவின் நிறைந்து ஆட
மா மயில் விடும் சேவல் – கொடியோனே

ஆரியன் அவன் தாதை தேடி இனமும் பாடும்
ஆடல் அருணம் சோதி – அருள் பாலா

ஆனை முகவன் தேடி ஓடியே அ(ண்)ண அம் காதல்
ஆசை மருவும் சோதி – பெருமாளே

English

neerunila maNdAtha thAmaraipa darnthOdi
neeLamaka lanjOthi – vadivAna

nEsamala rumpUvai mAthinmaNa mumpOla
nErmaruvi yuNkAtha – ludanmEvi

sUriyanu dansOma neezhalivai yaNdAtha
sOthimaru vumpUmi – yavaiyUdE

thOkaimayi linpAka nAmenama kizhnthAda
sOthiayi lunthAru – maruLvAyE

vAriyaki langkUsa Ayirapa NanchEdan
vAyvidavo deNpAlu – mudupOla

vArmaNiyu thirnthOda vEkavini RainthAda
mAmayilvi dunchEval – kodiyOnE

Ariyana vanthAthai thEdiyina mumpAdu
mAdalaru NanjOthi – yaruLbAlA

Anaimuka vanthEdi yOdiyeya NangkAtha
lAsaimaru vunjOthi – perumALE.

English Easy Version

neeru(m) nilam aNdAtha thAmarai padarnthu Odi
neeLam akalam jOthi – vadivAna

nEsa malarum pUvai mAthin maNamum pOla
nEr maruvi uN kAthal – udan mEvi

sUriyanudan sOman neezhal ivai aNdAtha
sOthi maruvum pUmi – avai UdE

thOkai mayilin pAkanAm ena makizhnthu Ada
sOthi ayilum thArum – aruLvAyE

vAri akilam kUsa Ayiram paNam sEdan
vAy vida odu eN pAlum – udu pOla

vAr maNi uthirnthu OdavE kavin niRainthu Ada
mA mayil vidum sEval – kodiyOnE

Ariyan avan thAthai thEdi inamum pAdum
Adal aruNam jOthi – aruL bAlA

Anai mukavan thEdi OdiyE a(N)Na am kAthal
Asai maruvum jOthi – perumALE